விஷ்வநாத் சர்மா
ஜெனரல் விஸ்வநாத் சர்மா | |
---|---|
பிறப்பு | 4 சூன் 1930 இலண்டன், ஐக்கிய இராச்சியம் |
சார்பு | இந்தியா |
சேவை/ | இந்தியத் தரைப்படை |
சேவைக்காலம் | 1950 - 1990 |
தரம் | ஜெனரல் |
தொடரிலக்கம் | IC-4769[1] |
படைப்பிரிவு | 16வது பீரங்கிப்படை 66வது கவசப் படை ரெஜிமெண்ட் |
கட்டளை | இராணுவத்தின் கிழக்கு கட்டளை அதிகாரி |
போர்கள்/யுத்தங்கள் | இந்தியா-பாகிஸ்தான் போர், 1965 1971 இந்தியா-பாக்கிஸ்தான் போர் 1987 இந்திய அமைதி காக்கும் படை |
விருதுகள் | பரம் விசிட்ட சேவா பதக்கம் அதி விசிட்ட சேவா பதக்கம் |
ஜெனரல் விஷ்வநாத் சர்மா (General Vishwa Nath Sharma), PVSM, AVSM, (பிறப்பு: 4 சூன் 1930) இந்தியத் தரைப்படையின் 14வது தலைமைப் படைத்தலைவராக 1988 முதல் 1990 முடிய பணியாற்றியவர்.[2] [3]
குடும்பம்
[தொகு]இவரது தந்தை மேஜர் ஜெனரல் அமர்நாத் சர்மா பிரித்தானிய இந்தியா இராணுவத்தில் பணிபுரிந்தவர். இவரது இளைய சகோதரர் மறைந்த மேஜர் சோம்நாத் சர்மா 1947-48 இந்திய-பாகிஸ்தான் போரில் வீரதீரமாகப் போரிட்டு வீரமரணம் அடைந்தார். மறைவிற்குப் பின் சோம்நாத் சர்மாவிற்கு பரம் வீர் சக்கரம் விருது வழங்கப்பட்டது. இவரது மற்றொரு சகோதரர் சுரேந்திர நாத் சர்மா இந்திய இராணுவத்தின் பொறியியல் படைப்பிரிவில் லெப்டினன்ட் ஜெனராலாக பணியாற்றியவர்.[4]
பெற்ற விருதுகள்
[தொகு]இராணுவ வாழ்க்கை
[தொகு]விஷ்வநாத் சர்மா தேராதூனில் உள்ள இந்திய இராணுவ அகாதமியில் 4 சூன் 1950 அன்று இராணுவ அதிகாரியாக பயிற்சி முடித்தவர். இவர் இந்தியா-பாகிஸ்தான் போர், 1965 மற்றும் 1971 இந்தியா-பாக்கிஸ்தான் போர்களில் பங்காற்றியவர். 1 மே 1988 அன்று இந்தியத் தரைப்படையின் தலைமைப் படைத்தலைவராக பதவி உயர்வு பெற்றார்.[5] 30 சூன் 1990 அன்று இராணுவப் பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Part I-Section 4: Ministry of Defence (Army Branch)". The Gazette of India. 15 August 1970. p. 1003.
- ↑ "General Vishwa Nath Sharma". Archived from the original on 21 மார்ச்சு 2012. பார்க்கப்பட்ட நாள் 19 ஆகத்து 2013.
- ↑ Abidi, S. Sartaj Alam; Sharma, Satinder (2007). Services Chiefs of India. New Delhi: Northern Book Centre. pp. 76–77. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7211-162-5.
- ↑ Lt Gen K Surendra Nath,who has been officiating as General Officer Commanding-in-Chief
- ↑ Page 50, Where Gallantry is Tradition: Saga of Rashtriya Indian Military College, By Bikram Singh, Sidharth Mishra, Contributor Rashtriya Indian Military College, Published 1997, Allied Publishers, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7023-649-5