விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கு என்பது தமிழ்நாடு மாநிலம், நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் காவல் துணைக் கண்காணிப்பாளராக பணியாற்றிய விஷ்ணுபிரியா என்பவர் தற்கொலை செய்துகொண்டதன் பேரில் நடக்கும் வழக்கைப் பற்றியது[1]. கோகுல்ராஜ் என்பவரின் கொலை வழக்கை விசாரித்து வந்தார். இவ்வழக்கு தொடர்பில் காவல்துறை உயர் அதிகாரிகளின் நெருக்கடியால் மன அழுத்தம் ஏற்பட்டு தற்கொலை செய்து கொண்டதாக குற்றம் சாட்டப்படுகிறது. திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் இவ்வழக்கை சிபிஐ விசாரிக்க போராட்டங்களை நடத்திவருகின்றனர்[2]. எனினும் சிபிஐ விசாரிக்கத் தேவையில்லை, சிபிசிஐடி விசாரிக்கும் என்று தமிழக முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவித்தார்.

பின்னணி[தொகு]

விஸ்ணுபிரியா திருச்செங்கோடு சரக துணைகண்காணிப்பாளராக பதவியேற்றவுடன் அப்பகுதியில் நடந்த பொறியியல் கல்லூரி மாணவன் கோகுல்ராசின் [3] கொலைவழக்கின் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இந்த வழக்கில் அவருக்கு பல நெருக்கடிகள் வந்ததாக அவர் அவரின் தோழியும், கீழக்கரை துணைக்கண்காணிப்பாளருமான மகேஸ்வரியிடம் [4] தெரிவித்துள்ளார். இந்த நெருக்கடியின் காரணமாகவே இவர் இறந்துள்ளார் என்றும் இதற்கு காரணமான மேலதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் பத்திரிக்கையாளர்களிடம் அவர் தெரிவித்தார். இந்த வழக்கை தற்சமயம் சிபிசிஐடி காவல் துறையினர் விசாரித்துவருகிறார்கள்.[5] கோகுல்ராசின் கொலைவழக்கில் தேடப்பட்டு வரும் யுவராஜ் என்பவர் இவரை தொலைபேசியில் மிரட்டியதாலும், இந்த வழக்கில் சம்பந்தப்படாத இரண்டு நபர்களை கண்காணிப்பாளார் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கச் சொன்னதாகவும் இதன் காரணமாகவும் இவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

அரசியல்வாதிகளின் கருத்து[தொகு]

இந்திய பொதுவுடமைக் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கடலூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசும்போது இந்த வழக்கை தமிழக காவல்துறை சார்ந்து உள்ள அமைப்பு விசாரித்தால் உண்மைவெளிவராது ஆகையினால் சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.[6]

மாளவியா[தொகு]

மதுரை வழக்கறிஞர் மாளவியா என்பவரிடம் சிபிசிஐடி காவலர்கள் 28 செப்டம்பர் 2015 அன்று விசாரணை செய்தனர். அதன்பின்னர் விஷ்ணுபிரியாவின் தோழி மகேஷ்வரியிடம் விசாரணை செய்யப்படும் என்று தெரிவித்துள்ளனர்.[7] மாளவியாவை காவலர்கள் விசாரணை செய்த பின்பு 2015 நவம்பர் மாதம் 25 ஆம் திகதி அன்று விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். பின்னர் காப்பாற்றப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். [8]

மகேஸ்வரி[தொகு]

விஷ்ணுபிரியாவின் காவல்துறைத் தோழியும் கீழக்கரை காவல் துணைக் கண்காணிப்பாளரான மகேஷ்வரி, "நேர்மையானவர்களை உயர் அதிகாரிகள் தரக்குறைவாகவே நடத்துகின்றனர். போலீஸ் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்; என்ன வேண்டுமானாலும் நடக்கும்" (செப்டம்பர் 20,2015 - தமிழ் தி இந்து) என்று கூறியுள்ளார்.[9] கோகுல்ராஜ் கொலைவழக்கில் உயர்அதிகாரிகள் விஷ்ணுபிரியாவிற்கு நெருக்கடி கொடுத்ததாகவும், தொடர்பில்லாதவர்களை கைது செய்து குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய அவருக்கு நெருக்கடி கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்[10].

மேற்கோள்கள்[தொகு]

  1. "திருச்செங்கோடு பெண் டிஎஸ்பி தற்கொலை: பணிக்கு வந்த 7 மாதத்தில் பரிதாபம்". தமிழ் தி இந்து. செப்டம்பர் 19, 2015. http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-7-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/article7667638.ece. பார்த்த நாள்: 28 செப்டம்பர் 2015. 
  2. "விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க கோரி செப்.28-ல் விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்". தமிழ் தி இந்து. 24 செப்டம்பர் 2015. http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%90-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D28%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/article7684836.ece. பார்த்த நாள்: 25 செப்டம்பர் 2015. 
  3. youth found dead on rail track was murdered தி இந்து பார்த்த நாள் ஜூலை. 02. 2015
  4. Nadu: DSP investigating Dalit murder case commits suicide, parents demand CBI probe - See more at: http://indianexpress.com/article/india/india-others/dsp-vishnupriya-suicide-parents-demand-cbi-probe/#sthash.C7okhEG8.dpuf இந்தியன் எக்ஸ்பிரஸ்
  5. to investigate DSP Vishnupriya’s death தி இந்து 21 செப்டம்பர் 2015
  6. விஷ்ணுபிரியா வழக்கை மாநில போலீஸார் விசாரித்தால் உண்மை வெளிவராது: கடலூரில் சீத்தாராம் யெச்சூரி பேச்சு தி இந்து தமிழ் அக்டோபர் 1 2015
  7. தற்கொலை வழக்கில் கீழக்கரை டிஎஸ்பி-யிடம் விசாரிக்க சிபிசிஐடி முடிவு தி இந்து தமிழ் 30 செப்டம்பர் 2015
  8. மதுரை வழக்கறிஞர் தற்கொலை முயற்சி: டிஎஸ்பி விஷ்ணுப்ரியா வழக்கில் ‘திடீர்’ திருப்பம் தி இந்து தமிழ் 26 நவம்பர் 2015
  9. "காவல்துறையில் நேர்மையானவர்களை தரக்குறைவாக நடத்தும் உயர் அதிகாரிகள்: விஷ்ணுபிரியாவின் தோழி கீழக்கரை டிஎஸ்பி குமுறல்". தமிழ் தி இந்து. செப்டம்பர் 20, 2015. http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D/article7670608.ece. பார்த்த நாள்: 28 செப்டம்பர் 2015. 
  10. "விஷ்ணுபிரியாவுக்கு உயர் அதிகாரிகள் நெருக்கடி கொடுத்தனர்: கீழக்கரை டி.எஸ்.பி. மகேஸ்வரி". தினமணி. 20 செப்டம்பர் 2015. http://www.dinamani.com/edition_dharmapuri/salem/2015/09/20/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4/article3037648.ece. பார்த்த நாள்: 28 செப்டம்பர் 2015.