விளையாட்டுப் பாடல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

நாட்டுப்புற
பாடல் வகைகள்
தமிழ் நாட்டார் பாடல்கள்
தாலாட்டுப் பாடல்
ஒப்பாரிப் பாடல்
விளையாட்டுப் பாடல்
நையாண்டிப் பாடல்
கதைப்பாடல்
காதல் பாடல்
தொழிற்பாடல்
மீனவர் பாடல்
நெற்குத்திப் பாடல்
ஏற்றப் பாடல்
நடவுப் பாடல்

தொகு

சிறுவர்கள் விளையாடும் பொழுது பாடப்படும் பாடல்கள் விளையாட்டுப் பாடல்கள் எனப்படும். பாட்டும் விளையாடும் ஒன்றிணைந்து இருக்கும். இப்பாடல்கள் நாட்டார் பாடல் வகைகளில் அடங்கும்.

கிட்டிப் புள்ளு[தொகு]

ஆலையிலே சோலையிலே
ஆலங்காடிச் சந்தையிலே
கிட்டிப் புள்ளும் பம்பரமும்
கிறிக்கியடிக்கப்
பாலாறு, பாலாறு, பாலாறு.

கிள்ளுப்பிராண்டி[தொகு]

1)

கிள்ளிக் கிள்ளிப் பிறாண்டி
கீயா மாயாப் பிராண்டி
கொப்பன் தலையில் என்ன பூ....
{முருங்கைப்பூ)
முருங்கைப்பூவைத் திண்டவளே
முன்னடிக் கஞ்சி குடிச்சவளே
பாதி விளாங்காய் திண்டவளே
பாவட்டங் கையை ம-ட-க்-கு.

2)

தக்காளி , தக்காளி ,குண்டு தக்காளி
பம்பரேறி குண்டுபோட
எங்கு சென்றாய் நீ
(ஊர்ப் பெயர்: எ.கா: மட்டக்களப்பு)
ம..ட்..ட..க்..க..ள..ப்..பு.

வினா விடை[தொகு]

என்ன அன்னம் - சோத்தன்னம்
என்ன சோறு - பழஞ்சோறு
என்ன பழம் - வாழைப்பழம்
என்ன வாழை - திரி வாழை
என்ன திரி - விளக்குத்திரி
என்ன விளக்கு - குத்துவிளக்கு
என்ன குத்து - கும்மாம்குத்து

ஊஞ்சல் பாட்டு[தொகு]

உஞ்சிலே மாமாங்கே
ஊரார் வீட்ட போகாதே
கஞ்சிக்கும் சோற்றுக்கும்
வாழைப்பழத்திற்கும்
காணாமே நீ போகாதே

கண்ணாம்பூச்சி[தொகு]

கண்ணாம்பூச்சி கடற்கரைப்பூச்சி
எவடம்.... எவடம்.....
கண்ணாம்பூச்சி கடற்கரைப்பூச்சி
எவடம்.... எவடம்....

நண்டூருது நரிஊருது[தொகு]

சின்னான் சின்ன விரல்
சீனத்தம் பன்றிக்குட்டி
வாழை இளங்குருத்து
வந்தாரைக் கைகாட்டி
பேரைப் பெருவிரல்
நண்டூருது நரிஊருது...
நண்டூருது நரிஊருது...
நண்டூருது நரிஊருது...
அக்குளு கிளு கிளு

மேலும் பாடல்கள்[தொகு]

 • தா பூ தாமரைப் பூ
 • கீரைக்குத் தண்ணீர் இறைத்தல்
 • சாலச் சாலச் சப்பாணி
 • கைவீசம்மா கைவீசு
 • பிச்சக்காரன் பிராமணப் பெடியன்
 • ஆணை ஆணை
 • சின்னான் சின்னிவிரல்
 • தத்தக்கப் பித்தக்க நாலுகால்
 • ஊஞ்சாலே ஊஞ்சப்பனே
 • சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு
 • சண்டைக்கு வாறியா திறப்புத் தாறியா
 • டிக் டிக் தபால் பெட்டி
 • டாங்குப் பித்தளம் டசுக்குப் பித்தளம்
 • அப்பி அப்பி மாமா
 • நாய்க்கு மூக்கில்லை நரிக்கு மூக்கில்லை

உசாத்துணைகள்[தொகு]

 • அம்மன்கிளி முருகதாஸ் (தொகுத்தது). 2007. இலங்கைத் தமிழிரிடையே வாய்மொழி இலக்கியம். கொழும்பு: குமரன் புத்தக இல்லம்.
 • செவி வழிக்கேள்வி
"https://ta.wikipedia.org/w/index.php?title=விளையாட்டுப்_பாடல்&oldid=2102767" இருந்து மீள்விக்கப்பட்டது