மீனவர் பாடல் (தமிழ் நாட்டுப்புறவியல்)
Appearance
தொழிற் பாடல் வகையைச் சேர்த நாட்டுப்புறப் பாடல்களில் மீனவர் பாடல்களும் ஒன்று. கடல் தொழில் செய்யும் போது பாடப்படும்
பாடல்களே மீனவர் பாடல்கள் ஆகும்.
எடுத்துக்காட்டு
[தொகு]இந்த எடுத்துக்காட்டு சு. சக்திவேலின் நாட்டுப்புற இயல் ஆய்வு நூலில் இடம்பெற்றுள்ளது. [1]
- விடிவெள்ளி நம்விளக்கு - ஐலசா
- விரிகடலே பள்ளிக்கூடம் - ஐலசா
- அடிக்கும் அலையே நம்தோழன் - ஐலசா
- அருமைமேகம் நமதுகுடை - ஐலசா
- பாயும் புயல் நம்ஊஞ்சல் - ஐலசா
- பனிமூட்டம் உடல்போர்வை - ஐலசா
- காயும் ரவிச்சுடர்கூரை - ஐலசா
- கட்டுமரம் வாழும் வீடு - ஐலசா
- மின்னல்வலை அரிச்சுவடி - ஐலசா
- பிடிக்கும் மீன்கள் நம்பொருட்கள் - ஐலசா
- மின்னல் இடிகாணும் கூத்து - ஐலசா
- வெண்மணலே பஞ்சுமெத்தை - ஐலசா
- முழுநிலாதான் கண்ணாடி - ஐலசா
- மூச்சடக்கி நீந்தல் யோகம் - ஐலசா
- தொழும் தலைவன் பெருவானம் - ஐலசா
- தொண்டு தொழிலாளர் நாங்கள் - ஐலசா
- ஒத்துமை கொண்டாடனும் - ஐலசா
- உரிமையை உயர்த்திடனும் - ஐலசா
மேற்கோள்கள்
[தொகு]- ↑ சு. சக்திவேல். (2003). நாட்டுப்புற இயல் ஆய்வு. சென்னை: மணிவாசகர் பதிப்பகம்.