விர்சீனியா ராவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விர்சீனியா தே பிவார் ராபர்டீசு ராவ் (Virgínia de Bivar Robertes Rau) (4/9 டிசம்பர் 1907 - 2 நவம்பர் 1973) போர்த்துகீசிய நாட்டின் தொல்பொருள் ஆய்வாளர் மற்றும் வரலாற்று ஆசிரியர் ஆவார். இவர் போர்த்துகீசியம் மற்றும் போர்த்துகீசிய காலனித்துவ வரலாற்றில் நிபுணத்துவம் பெற்றவர் ஆவார். மேலும் பல வரலாற்று புத்தகங்களை எழுதியவர் ஆவார்.

இவர் செருமன் வம்சாவளியைச் சேர்ந்த இளையர் லூயிசு ராவ் (1865-1943) மற்றும் இசுப்பானிய வம்சாவளியைச் சேர்ந்த மாடில்டே டி பிவார் டி பவுலா ராபர்டெசு (1879-1961) ஆகியோரின் மகள் ஆவார். இவரது பெற்றோர் 1902 ஆம் ஆண்டு போர்த்துக்கல் நாட்டின் லிசுபனில் திருமணம் செய்து கொண்டனர். 1927 ஆம் ஆண்டு லிசுபன் பல்கலைக்கழகத்தின் கடிதங்கள் புலத்தில் சேர்ந்தார். அனால் அடுத்த ஆண்டு வெளிநாடு சென்று சென்று துலூசு பல்கலைக்கழகம் உட்படப் பல படிப்புகளில் பயின்றார்.

1939 ஆம் ஆண்டில், இரண்டாம் உலகப் போரின் ஆரம்பம் காரணமாக, லிசுபனுக்குத் திரும்பினார். அங்கு கலைப் புலத்தின் வரலாறு மற்றும் தத்துவ அறிவியலில் சேர்ந்தார். போர்த்துகீசிய வரலாற்று அகாதமியின் ராவ் போர்த்துகீசியம் மற்றும் காலனித்துவ இடைக்காலம் மற்றும் நவீன வரலாறு பற்றிய பரந்த படைப்புகளின் தொகுப்பை வெளியிட்டார். [1]

1969 ஆம் ஆண்டு சூலை மாதம் 2 ஆம் தேதி, போர்த்துகீசிய பொதுக்கல்வி ஆணையின் உயர் அதிகாரி பதவி இவருக்கு வழங்கப்பட்டது. 1956 ஆம் ஆண்டு இவர் வெளியிட்ட ஒரு படைப்பிற்குப் பிறகு போர்த்துகீசிய ஆய்வுகள் விமர்சனமானது, திமோர் ஆளுநரான அன்டோனியோ கோயல்கோ குரேரோவின் வரலாற்று ஆராய்ச்சியின் முன்னோடியாக இவரைக் குறிப்பிடுகிறது.[2] பிரேசில் மற்றும் அங்கோலாவின் பொருளாதார வரலாறு குறித்தும் இவர் கருத்து தெரிவித்துள்ளார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. GARCIA, José Manuel. RAU, Virgínia. Estudos Sobre a História do Sal Português (in Portuguese). Lisboa : Editorial Presença, 1984.
  2. Portuguese Studies Review, Vol. 12, No. 2. Baywolf Press. 22 February 2005. பக். 38. GGKEY:7BRBGWRYNQ1. https://books.google.com/books?id=nuzVBAAAQBAJ&pg=PA38. 
  3. Richardson, David; Silva, Filipa Ribeiro da (28 November 2014). Networks and Trans-Cultural Exchange: Slave Trading in the South Atlantic, 1590–1867. BRILL. பக். 124. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-90-04-28058-8. https://books.google.com/books?id=yXSjBQAAQBAJ&pg=PA124. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=விர்சீனியா_ராவ்&oldid=3806947" இலிருந்து மீள்விக்கப்பட்டது