விராத்ஸ்சாஃப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
விராத்ஸ்சாஃப்
மேலிருந்து கீழே, இடதிலிருந்து வலம்:  இரவு நேரத்தில் ஓஸ்ட்ராவ் டும்ஸ்கி, ரெனோமா பல்பொருள் அங்காடி, விராத்ஸ்சாஃபின் வட்ட மண்டபம், நூற்றாண்டு மண்டபம், விராத்ஸ்சாஃப் நகர அரங்கம், மோனொபோல் ஓட்டல், விராத்ஸ்சாஃபின் குள்ளர்கள், விராத்ஸ்சாஃப் முதன்மை நிலையம்
மேலிருந்து கீழே, இடதிலிருந்து வலம்: இரவு நேரத்தில் ஓஸ்ட்ராவ் டும்ஸ்கி, ரெனோமா பல்பொருள் அங்காடி, விராத்ஸ்சாஃபின் வட்ட மண்டபம், நூற்றாண்டு மண்டபம், விராத்ஸ்சாஃப் நகர அரங்கம், மோனொபோல் ஓட்டல், விராத்ஸ்சாஃபின் குள்ளர்கள், விராத்ஸ்சாஃப் முதன்மை நிலையம்
Flag of விராத்ஸ்சாஃப்
Flag
Coat of arms of விராத்ஸ்சாஃப்
Coat of arms
குறிக்கோளுரை: Wrocław – Miasto spotkań / விராத்ஸ்சாஃப் – சந்திக்கும் இடம்
ஆள்கூறுகள்: 51°6′28″N 17°2′18″E / 51.10778°N 17.03833°E / 51.10778; 17.03833
நாடு போலந்து
வாய்வோதெஷிப் கீழ் சிலேசியா
கௌன்ட்டி நகர கௌன்ட்டி
நிறுவப்பட்டது 10வது நூற்றாண்டு
நகரமாக 1242
அரசு
 • மேயர் ரஃபால் டுட்கீவிக்சு
பரப்பளவு
 • நகரம் 292.82
கடல்மட்டத்தில் இருந்து உயரம் 105
மக்கள்தொகை (2010)
 • City 6,32,996
 • அடர்த்தி 2
 • பெருநகர் 10,30,000.
நேர வலயம் CET (ஒசநே+1)
 • Summer (பசேநே) CEST (ஒசநே+2)
Postal code 50-041 to 54-612
தொலைபேசிக் குறியீடு +48 71
வாகன பதிவு எண்கள் DW
இணையத்தளம் www.wroclaw.pl
யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்
விராத்ஸ்சாஃப்பில் உள்ள நூற்றாண்டு மண்டபம்
Name as inscribed on the World Heritage List
மண்டபம்
வகை பண்பாடு
ஒப்பளவு i, ii, iv
உசாத்துணை 1165
UNESCO region ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா
பொறிப்பு வரலாறு
பொறிப்பு 2006 (30th தொடர்)

விராத்ஸ்சாஃப் (Wrocław, /iconˈvrɒtswəf/; இடாய்ச்சு: Breslau [ˈbʁɛslaʊ̯]  ( கேட்க)), போலந்து நாட்டின் மேற்குப் பகுதியில் கீழ் சிலேசியாவில் ஓத்ரா ஆற்றின் கரையில் அமைந்துள்ள ஓர் நகரமாகும். இதுவே மேற்கு போலந்தின் மிகப்பெரும் நகரமாகும்.

வரலாற்றில் சிலேசியாவின் தலைநகரமாக விளங்கிய விராத்ஸ்சாஃப் தற்போதைய கீழ் சிலேசிய வாய்வோதெஷிப்பின் தலைநகரமாக உள்ளது. கடந்த காலத்தின் பல்வேறு நேரங்களில் இந்த நகரம் போலந்து இராச்சியம் (1025 - 1385), பொகீமியா, ஆத்திரியா, பிரசியா, அல்லது செருமனி நாடுகளின் அங்கமாக இருந்துள்ளது.1945ஆம் ஆண்டு முதல் இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஏற்பட்ட எல்லை வரையறுப்புகளின்படி போலந்து நாட்டில் உள்ளது. 2010ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்நகர மக்கள்தொகை 632,996 ஆகும். இது போலந்தின் நான்காவது மிகப்பெரும் நகரமாகும்.

யூஈஎஃப்ஏ யூரோ 2012 போட்டிகள் நடைபெறும் எட்டு இடங்களில் ஒன்றான விராத்ஸ்சாஃப்பில் 2014ஆம் ஆண்டுக்கான ஆண்கள் கைப்பந்து உலக வாகையர் போட்டிகள் நடக்க உள்ளன. மேலும் 2016ஆம் ஆண்டிற்கான ஐரோப்பிய பண்பாட்டுத் தலைநகரமாகவும் தெரிந்தெடுக்கப்பட்டுள்ளது. 2017ஆம் ஆண்டில் ஒலிம்பிக் போட்டிகளில் தெரிவாகாத 37 விளையாட்டுக்களுக்கான உலக விளையாட்டுப் போட்டிகள் இங்கு நடத்த தெரிவாகியுள்ளது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=விராத்ஸ்சாஃப்&oldid=1830546" இருந்து மீள்விக்கப்பட்டது