விண்ணோட புறக்கலன்
Jump to navigation
Jump to search

டிஸ்கவரி விண்ணோடத்தில் இருந்து பிரியும் புறக்கலன்.
விண்ணோட புறக்கலன் (Space Shuttle external tank அல்லது ET) என்பது திரவ ஐதரசன் மற்றும் திரவ ஆக்சிஜனைக் கொண்டிருக்கும். இது விண்ணோட ஏவு வாகனத்தின் ஒரு பகுதியாகும். புறப்பாடு மற்றும் மேலேற்றத்தின்போது விண்ணோட சுற்றுக்கலனிலுள்ள மூன்று விண்ணோட முதன்மை பொறிகளுக்கும் தேவையான எரிபொருள் மற்றும் ஆக்சிகரணியை இதுவே அளிக்கிறது. மூன்று விண்ணோட முதன்மைப் பொறிகள் நிறுத்தப்பட்ட பின்னர் 10 விநாடிகள் கழித்து இவை கழற்றி விடப்பட்டு காற்றுமண்டலத்துக்குள் மீண்டும் நுழைக்கப்படுகின்றன. விண்ணோட திட ஏவூர்தி உந்துகலன்கள் போலன்றி இவை மறுபடியும் பயன்படுத்தப்படுவதில்லை. இவை இந்தியப் பெருங்கடலில் (அல்லது அட்லாண்டிக் பெருங்கடல்) விழுவதற்கு முன்னர் உடைந்துவிடும். இவை தேடி எடுக்கப்படுவதில்லை.