விண்ணோட சுற்றுக்கலன்
டிசுக்கவரி சுற்றுக்கலன் STS-121 அனைத்துலக விண்வெளி நிலையத்தை அணுகுகிறது. | |
தயாரிப்பாளர் | Rockwell International |
---|---|
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
இயக்கம் | நாசா |
செயற்பாடுகள் | ஆட்கள் மற்றும் சுமைகளைச் சுமந்துசெல்லும் விண்ணூர்தி |
விவரக்கூற்று | |
சுற்றுப்பாதை முறைமை | பூமியின் தாழ் வட்டப்பாதை |
தயாரிப்பு | |
நிகழ்நிலை | முடிக்கப்பெற்றது |
கட்டமைப்பு | 6 |
ஏவப்பட்டது | 5 சுற்றுக்கலன்கள் 135 பயணங்கள் |
நீக்கம் | விண்ணோடம் அட்லாண்டிசு STS-135 July 21, 2011 |
தொலைந்தவை | 2 சுற்றுக்கலன்கள் |
முதல் ஏவல் | விண்ணோடம் கொலம்பியா STS-1 April 12, 1981 |
கடைசி ஏவல் | விண்ணோடம் அட்லாண்டிசு STS-135 July 8, 2011 |
விண்ணோடச் சுற்றுக்கலன் (Space Shuttle orbiter) என்பது ஐக்கிய அமெரிக்காவின் நாசா மையத்தால் செயல்படுத்தப்பட்ட விண்ணோடத் திட்டத்தில் பயன்படுத்தப்பட்ட மறுபயன்பாட்டுகுகந்த விண்ணூர்தி ஆகும். சுற்றுக்கலன் மீண்டும் பயன்படுத்தக்கூடிய இறக்கையுடைய விண்-வானூர்தியாகும், இது ஏவூர்தி, விண்கலம், வானூர்தி ஆகியவற்றின் கலவை. இந்த விண்-வானூர்தியானது பயணக்குழுவையும் பயணச்சுமையையும் பூமியின் தாழ் வட்டப்பாதைக்கு எடுத்துச்சென்று, அங்கு சுற்றுப்பாதை செயல்பாடுகள் செய்துவிட்டு, மறுபடியும் காற்றுமண்டலத்துக்குள் நுழைந்து ஒரு மிதவை வானூர்தியைப் போல தரையிறங்கலாம், பயணக்குழுவையும் பயணச்சுமையையும் பூமிக்குப் பாதுகாப்பாக மீண்டும் கொண்டுவரலாம்.
இவ்வகையில் ஆறு சுற்றுக்கலன்கள் கட்டப்பட்டன. அவை, கொலம்பியா, சாலஞ்சர், டிஸ்கவரி, அட்லாண்டிஸ், எண்டெவர் மற்றும் எண்டர்பிரைசு என்பனவாகும்.