விக்கிப்பீடியா பேச்சு:2013 தொடர் கட்டுரைப் போட்டி/முடிவுகள்/செப்டம்பர், 2013

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்த மாதத்தில்... ர.க.ரத்தின சபாபதியும் களத்தில் இறங்கியிருக்கிறார். போட்டி இன்னமும் சூடுபிடிக்கும் என நினைக்கிறேன்; பார்க்கலாம்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:07, 6 செப்டம்பர் 2013 (UTC)

இந்த மாதம் இரண்டாமிடத்திற்கு தான் போட்டி இருக்கும் என நினைக்கிறேன்.நந்தினிகந்தசாமி (பேச்சு) 12:44, 23 செப்டம்பர் 2013 (UTC)

ஆம் முதலாம் பரிசு உங்களுக்க்த் தானே. எனில் இரண்டாவதுக்கு நாங்கள் அடித்துக்கொள்ள தான் வேண்டும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 15:35, 23 செப்டம்பர் 2013 (UTC)

கேளுங்கள் தென்காசியாரே கேளுங்கள். அவருக்கு நக்கல் கேக்குது :) :D --♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 15:58, 23 செப்டம்பர் 2013 (UTC)

ஐயயோ, இதெல்லாம் நான் சொல்லவேஇல்லையே!!!! ரத்ன சபாபதி தான் நெறய கட்டுரை எழுதி இருக்கார். அதனால அவருக்கு முதல் பரிசு நிச்சயம்.இரண்டாம் இடத்துலதான் மூணு பேர் இருக்காங்களேனு கேட்டேன்.நந்தினிகந்தசாமி (பேச்சு) 02:12, 24 செப்டம்பர் 2013 (UTC)

மேலே சர்ச்சைக் கூறிய கருத்தைக் கூறியவர் ஒரேநாளில் 15கட்டுரைகளுக்கு மேல் விரிவாக்கியவர் என்பதை நினைவுக்கூறுகிறேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 10:28, 24 செப்டம்பர் 2013 (UTC)

சர்சைக்குரிய கருத்தா????????????????? அரசியல இதெல்லாம் சாதாரணமப்பா!!!!!!!!!!நந்தினிகந்தசாமி (பேச்சு) 12:08, 24 செப்டம்பர் 2013 (UTC)

ஆமா பெரிய அரசியல் :) நீங்கள் அரசு நடத்த நாங்கள் விடத்தைப்பார்த்து வெறிக்கத்தான் வேண்டும் :) :) --♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 13:08, 24 செப்டம்பர் 2013 (UTC)

ஆம். வெறித்துக் கொண்டு தான் இருக்கிறேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 14:47, 24 செப்டம்பர் 2013 (UTC)

இன்னும் நான் ஒரு கட்டுரை கூட முழுதாக எழுதவில்லை, ஏன் பீதிய கெலப்புரீங்க??? நந்தினிகந்தசாமி (பேச்சு) 15:07, 24 செப்டம்பர் 2013 (UTC)

மேலும் இம்முறை முதல் இடம் முத்துராமனுக்கே. சத்தமில்லாமல் கட்டுரை எழுதி கொண்டிருக்கிறார்.நந்தினிகந்தசாமி (பேச்சு) 15:10, 24 செப்டம்பர் 2013 (UTC)

நம்பாதீங்க போன மாசமும் இப்படி சொல்லி தான் முதல் பரிச வாங்குனாங்க.முத்துராமன் (பேச்சு) 17:25, 24 செப்டம்பர் 2013 (UTC)

நாங்க ஒரு வாரத்துல எழுதுரத நீங்க ஒரே நல்ல முந்திட மாட்டிங்களா? அதுமட்டும் இல்லாம இங்க நெறைய பேர் முக்காடு போட்டுட்டு தான் எழுதிட்டு இருக்காங்க.....முத்துராமன் (பேச்சு) 17:22, 24 செப்டம்பர் 2013 (UTC)

எல்லா போட்டியிலும் நந்தினி நீங்களே முதல்ல வந்துராதீங்க எங்களுக்கும் எதாவது ஒரு போட்டி ஒதுக்கீடு பண்ணுங்க. நந்தினிக்கு பாயந்து தான் நா இவ்லோ நாளா ஏதும் எழுதல. நீங்களும் எழுதுறதா இருந்தா சொல்லுங்க நா வேற ஊருக்கு ஓடி போய் எழுதிக்கிறேன்.முத்துராமன் (பேச்சு) 17:14, 24 செப்டம்பர் 2013 (UTC)

ஹா! ஹா! ஹா! come bro, welcome bro. இவுங்க எல்லாம் சாதாரணமாவே என்னை திட்டுவாங்க,இதுல நீங்க வேற இப்படிலாம் சொல்றீங்களே...... ஆனா நீங்க எல்லோரும் நல்லா வருவீங்க பா...... கவலைபடாதீங்க........ நான் எழுதல, உங்க கட்டுரைகளை எல்லாத்தயும் முடிவுகள்ல எழுதுங்க , நந்தினிகந்தசாமி (பேச்சு) 08:59, 25 செப்டம்பர் 2013 (UTC)

எனக்கு நந்தினிங்குற பெயரைக் கேட்டாலே மாதவட்டிக் கடன்காரன் தான் நினைவுக்கு வாரான். அதான் மாதக் கடைசியில் வந்து கடுப்பேற்றுவது. ஆனா இந்த மாதத்தின் வட்டிக்கடன்காரன் முத்துராமையா தான் போலும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 10:23, 25 செப்டம்பர் 2013 (UTC)

பாவம் நீங்க எத்தன மாதம் தான் மாத வட்டி கடன்காரனா இருப்பீங்க??? அதான் போன மாதம் நானும் , இந்த மாதம் முத்துராமனும் வேலைய பிரிச்சுகிட்டோம்....... அடுத்த மாதம் யாரோ????????? நந்தினிகந்தசாமி (பேச்சு) 11:23, 25 செப்டம்பர் 2013 (UTC)

யப்பா... இவுங்ககிட்ட எல்லாம், நம்மால மல்லுகட்ட முடியாது தென்காசி சுப்பிரமணியன்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:29, 25 செப்டம்பர் 2013 (UTC)

ஹா! ஹா! ஹா! சும்மா விளையாட்டுக்கு தான் பன்னினேன்.நந்தினிகந்தசாமி (பேச்சு) 11:39, 25 செப்டம்பர் 2013 (UTC)

நீங்கலம் பேசி பேசி இரத்தினசபாபதியையும் உசுபேத்திடீங்க...அவரும் என்ன தினமும் எழுதி மறுபடியும் முதலிடத்தை புடிச்சுடார்... ஒரு மாசமாவது முதல் பரிச வாங்கலாம்னு நெனச்ச விடமட்டேங்குறீங்களே.. முத்துராமன் (பேச்சு) 08:01, 28 செப்டம்பர் 2013 (UTC)

என்னை சொல்லிவிட்டு, இப்போ நீ ஜெயிச்சுட்டீல, முத்துராமா.... - ரத்தின சபாபதி (பேச்சு) 22:30, 30 செப்டம்பர் 2013 (UTC)
என்னங்க பண்றது ஒரு தடவையாவது முதல் பரிசு வாங்கனும்னு தான்.நீங்க தினமும் எழுதுறீங்கனு பயந்து தான் இவ்லோ எழுதுனேன்...இல்லன 25 கட்டுரையோட நிருத்திருப்பேன்.அடுத்த மாசத்தில இருந்து என்னால இந்த அளவு எழுத முடியாது.அதன் இப்படி...முத்துராமன் (பேச்சு) 17:18, 30 செப்டம்பர் 2013 (UTC)
சரி, பத்தாண்டுகள் கொண்டாட்டம் காரணமாக இந்த மாதம் அவ்வளவா போட்டி இருக்காதுன்னு நினைச்சா 2, 3 நாள்ல எழுதிக் குவிச்சு வைச்சிருக்கீங்களே.. மகிழ்ச்சியில் தலை சுத்துது :) அனைத்துக் கட்டுரைகளும் போட்டி விதிகளைப் பின்பற்றியுள்ளன என்பதை உறுதி செய்து விட்டு மூன்றாம் தேதி முடிவுகளை அறிவிக்கேன். பங்கு கொண்ட அனைவருக்கும் உளமார்ந்த வாழ்த்துகள். இங்கு நிலவும் நலமான போட்டியும் அதனையொட்டிய வேடிக்கையான உரையாடல்களும் பலருக்கும் மன மகிழ்வைத் தருவதை அறிய முடிந்தது.--இரவி (பேச்சு) 19:51, 30 செப்டம்பர் 2013 (UTC)

👍 விருப்பம்--♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 01:02, 1 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

👍 விருப்பம்--ரத்தின சபாபதி (பேச்சு) 10:15, 01 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

இன்னும் ஒரு சில மாணவர்கள் வந்தாங்கனா போதும் , கட்டுரை போட்டியாலயே நம்ப தமிழ் விக்கிபீடியா சீக்கிரமா ஒரு லட்சம் கட்டுரைய தொட்டுவிடும். நந்தினிகந்தசாமி (பேச்சு) 01:46, 1 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

அப்போ இந்த மாசம் மறுபடியும் விக்கிபீடியால புயல் அடிக்கும்னு சொல்லுங்க.....முத்துராமன் (பேச்சு) 03:26, 1 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

கண்டிப்பா இனிமேல் புயல் விக்கிபீடியால அடிக்கும்.ஆனா கட்டுரை போட்டில அடிக்காது.ஏன்னா ஒவ்வொருத்தரும் பரிசு வாங்கினா தான் நல்ல வளர்ச்சி இருக்கும்.நந்தினிகந்தசாமி (பேச்சு) 07:13, 1 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

என்ன நீங்க இந்த மாசம் 250 கட்டுரை எழுதலயேனுதான் கொஞ்சம் வருத்தம்.முத்துராமன் (பேச்சு) 15:54, 2 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

சந்தேகம்[தொகு]

நான் கட்டுரை போட்டியில் எழுதும் போது கவனக்குறைவாக புகுபதிகை செய்யாமல் தொகுத்து விட்டேன்.இதனால் 15 கே.பி ஐ தாண்டும் போது என் பெயர் அதில் பதிவாகாமல் ஐ.பி எண் மட்டும் பதிவாகியுள்ளது.இப்போது நான் அதை என் கணக்கில் சேர்த்து கொள்ளலாமா? தங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்.அக்கட்டுரைகள் எடுவார்ட் மனே,பில் கேட்ஸ் ஆகும். முத்துராமன் (பேச்சு) 14:04, 24 செப்டம்பர் 2013 (UTC)

விடுபதிகையில் இருக்கும் போது கட்டுரையிலுள்ள ஐ.பி. முகவரியின் பேச்சுப்பக்கத்துக்குச் சென்று அங்கு அது உங்கள் ஐ.பி. என உறுதிப்படுத்தி சேர்த்துக் கொள்ளுங்கள். கட்டுரையை கணக்கில் சேர்க்கும் போது வலப்பக்கத்தில் அக்கடுரைகள் என் ஐ.பி.யில் இருந்து தவறுதலாக விரிவாக்கியது என்பதை கொடுத்துவிடுங்கள்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 14:47, 24 செப்டம்பர் 2013 (UTC)

ஆலோசனைக்கு நன்றி.முத்துராமன் (பேச்சு) 17:14, 24 செப்டம்பர் 2013 (UTC)
நான் கம்பியில்லா இணையத்தை பயன்படுத்துவதால் ஒவ்வொரு முறையும் வெவ்வேறான ஐ.பி முகவரியே கிடைக்கும்.முதல் இரு இலக்கங்கள் மட்டுமே ஒரே மாதிரி இருக்கும் அதுவும் என்னுடைய எல்லா செயல்பாடுகளும் மும்பையை சேர்ந்ததாகவே தெரியும். .எனவே அந்த ஐ.பி முகவரியில் எழுதியது நான் தான் என்று நிருபிக்க இயலாத சூழலில் உள்ளேன்.நம்ப தகுந்த ஆதாரங்கள் இல்லையாதலால் வேண்டுமெனில் அவ்விரு கட்டுரைகளையும் போட்டியில் இருந்து நீக்கிவிடவும்.முத்துராமன் (பேச்சு) 15:38, 2 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
நம்பிக்கை இல்லாமல் விக்கிப்பீடியர்கள் இயங்க முடியுமா? அவை இரண்டையும் உங்கள் கணக்கில் சேர்ப்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்காது என்றே எண்ணுகிறேன்.--இரவி (பேச்சு) 15:39, 2 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]