உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிப்பீடியா பேச்சு:15 ஆண்டுகள்/பயிற்சிப் பட்டறைகள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தமிழ் விக்கிப்பீடியா 15 ஆண்டு நிறைவு விழாவினைக் கொண்டாடுவதையொட்டி முன்னெடுக்கப்பட எதிர்பார்க்கும் பயிற்சிப்பட்டறைகள் தொடர்பில் இங்கு உரையாடப்படுகின்றது.

யாழ்ப்பாணத்தில் பயிற்சிப் பட்டறை

[தொகு]

யாழ்ப்பாணத்தில் சிவகோசரன், மதனாகரன், ஸ்ரீகர்சன், ஆதவன், மாதவன், உமாபதி, யாதவராஜன் ஆகிய பயனர்களின் பங்களிப்புடன் பாடசாலை மாணவர்களுக்கு என ஒரு பயிற்சிப்பட்டறையை நடாத்த எதிர்பார்க்கப்படுகின்றது. முன்னணிப் பாடசாலைகளுக்குப் போட்டி தொடர்பான சுவரொட்டிகளையும் தகவல்களையும் அனுப்பி, போட்டியில் பங்குபெற விரும்பும் மாணவர்களை ஓர் இடத்தில் ஒன்றுதிரட்டி இப்பயிற்சிப்பட்டறையை முன்னெடுக்கலாம்.

  1. காலம்:- 15 ஆம் ஆண்டு நிறைவையொட்டிய போட்டிக்கு முன்னதாக அல்லது அதற்கு முன் நடாத்தப்பட எதிர்பார்க்கும் ஏதாவது குறும்போட்டிகளுக்கு முன்பும்
  2. இடம்:- யாழ் பொதுநூலகக் கேட்போர் கூடம்/யாழ் முன்னணிப் பாடசாலை மண்டபங்கள்
  3. பங்குபற்ற எதிர்பார்க்கப்படும் வேறு இலங்கைத் தமிழ் விக்கிப்பீடியப் பயனர்கள்:-அன்ரன், சஞ்சீவி சிவகுமார்

இது பற்றிய அனைவரது கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன. --ஸ்ரீஹீரன் (பேச்சு) 16:13, 14 சனவரி 2017 (UTC)[பதிலளி]

நல்லது. ஒரு பன்னாட்டு ஒன்றுகூடலாகவும் மாணவர்கள் மட்டுமன்றி பலரும் பங்குபற்றக்கூடிய திறந்த பட்டறையாகவும் இதை வடிவமைக்க முடியுமாயின் நல்லது.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 10:19, 16 சனவரி 2017 (UTC)[பதிலளி]
எனது எண்ணம் நம்நாட்டுக்குள் நடாத்துவது, பன்னாட்டு ஒன்றுகூடலுக்கான செலவுகள் அதிகமாகும் போல் தோன்றுகின்றது. அத்துடன் தாங்கள் கூறுவது போல் திறந்த பட்டறையாக இருப்பதும் மிக நன்று. தங்கள் கருத்து?...--ஸ்ரீஹீரன் (பேச்சு) 14:27, 16 சனவரி 2017 (UTC)[பதிலளி]
நல்லது ஸ்ரீஹீரன். பன்னாட்டு ஒன்றுகூடலுக்கு செலவு அதிகமானது என்பதை விட அதிக ஒழுங்கமைப்புப் பணிச்சுமையும் சிரத்தையும் தேவைப்படும். பணச்செலவுக்கு நிதி வேண்டல் கோரிக்கைகளை முன்வைக்கலாம். ஆனால் வலுவான ஆளணிதான் முக்கியமானது. அது காணப்படுமாயின் பன்னாட்டு ஒன்றுகூடலாக செய்யலாம். யாழ்ப்பாணத்தை சார்ந்த மற்றப் பயனர்களின் கருத்துகளும் இங்கு முக்கியமானது. உள்நாட்டு அளவில் செய்யும் போது நல்ல பரப்புரையாக அமையும் வகையில் அமைக்க வேண்டும். பன்னாட்டு அளவில் செய்வது சாத்தியமாயின் ஈழத்தைச் சார்ந்த புலம்பெயர்ந்து வாழும் பயனர்கள் மற்றும் தமிழக பங்களிப்பாளர்கள் உள்ளூர் பங்களிப்பாளர்களுடன் ஒன்றுகூடி புதிய உற்சாகத்தைப் பெறலாம்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 08:14, 17 சனவரி 2017 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:34, 17 சனவரி 2017 (UTC)[பதிலளி]