உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிப்பீடியா பேச்சு:மதுரை தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்த அறிமுக நிகழ்ச்சியும் பயிற்சிப் பட்டறையும் வெற்றியடைய வாழ்த்துகள் !! இதற்கான இணைப்பை ஆங்கில விக்கியிலும் தருவது பயனளிக்கும்.--மணியன் (பேச்சு) 00:28, 12 சூலை 2012 (UTC)[பதிலளி]

இப்பயிற்சிப் பட்டறைக்கு ஏற்பாடு செய்திருந்த கணித்தமிழ்ச் சங்கத்தின் தலைவர் மா. ஆண்டோ பீட்டர் இன்று அதிகாலை மாரடைப்பால் மரணமடைந்து விட்டதால் இந்நிகழ்வு நடைபெறுவதற்கான வாய்ப்புகளில்லை என்றே கருதுகிறேன். --தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 18:14, 12 சூலை 2012 (UTC)[பதிலளி]
ஆண்டோ பீட்டர் அவர்களின் திடீர் மறைவு, பேரதிர்ச்சி அளிக்கிறது. பட்டறை குறித்த தள அறிவிப்பை சில நாள் நிறுத்தி வைக்கலாம். --எஸ்ஸார் (பேச்சு) 12:45, 13 சூலை 2012 (UTC)[பதிலளி]
ஆண்டோ பீட்டர் அவர்கள் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வை குறித்த நாளில் இல்லாவிட்டாலும், கூடிய விரைவில் வேறொரு நாளில் இதனை நிகழ்த்துவது அவருக்கு விக்கிப்பீடியர்கள் அன்னாருக்குச் செலுத்தும் அஞ்சலியாக இருக்கும் என்பது எனது கணிப்பு.--Kanags \உரையாடுக 13:23, 13 சூலை 2012 (UTC)[பதிலளி]
பட்டறை நடப்பது உறுதி இல்லை என்றால் இப்பக்கத்தை நீக்கி / நகர்த்தி விடுங்கள். சமூக வலைத்தளங்களில் இம்முகவரி பகிரப்பட்டு இருப்பதால் தவறுதலாக யாரும் வந்துவிடக்கூடும்--இரவி (பேச்சு) 22:16, 18 சூலை 2012 (UTC)[பதிலளி]
ரவி, பட்டறை நீக்கம் செய்யப்படுவது குறித்து தகவல் இல்லை. கணித்தமிழ்ச் சங்கத்தின் மதுரைக் கிளைப் பொறுப்பாளர் கபீரியேல் நாதனிடம் இதுகுறித்துப் பேசியுள்ளேன். இன்னும் இரண்டு நாட்களில் முடிவைச் சொல்வதாகத் தெரிவித்திருக்கிறார். இன்னும் இரு நாட்கள் பார்த்துவிட்டு முடிவு செய்வோம். --தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 01:37, 19 சூலை 2012 (UTC)[பதிலளி]
கணித்தமிழ்ச் சங்கத்தின் மதுரைக் கிளை பொறுப்பாளர் கபீரியேல் நாதன் நிகழ்வு குறிப்பிட்ட தேதியில் நடக்கும் என்று உறுதிப்படுத்தி இருக்கிறார்.--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 15:33, 20 சூலை 2012 (UTC)[பதிலளி]
  • நிகழ்ச்சி தொடங்கும் நேரம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. எப்பொழுது நிறைவடையும் எனக் கொடுக்கப்படவில்லை. நிகழ்ச்சிநிரலையும் வெளியிட்டால் பயனுடையதாக இருக்கும்.--அரிஅரவேலன் (பேச்சு) 08:36, 26 சூலை 2012 (UTC)[பதிலளி]

நன்றி[தொகு]

குறித்த காலத்தில் மதுரை தமிழ் விக்கிப்பீடியா பயிற்சிப் பட்டறை இனிதே நடைபெற்றது. நிகழ்வு ஏற்பாடு செய்த திரு கபீரியேல் நாதன் அவர்களுக்கும், விக்கித் திட்டங்களை அறிமுகம் செய்து கருத்துரை ஆற்றிய திரு தேனி எம்.சுப்பிரமணி அவர்களுக்கும் மற்றும் இப்பயிற்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி.--ஸ்ரீதர் (பேச்சு) 13:56, 2 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]

நிகழ்ச்சியை நடத்திய அனைவருக்கும் என் வாழ்த்துகளும் வணக்கங்களும் உரித்தாகுக. நன்றி !--மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 17:11, 2 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]

👍 விருப்பம்-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 18:37, 2 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]
பட்டறையை ஒழுங்குபடுத்தி சிறப்பாக நிகழ்த்திய அனைவருக்கும் வாழ்த்துக்கள். --Natkeeran (பேச்சு) 17:23, 2 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]
இந்த தமிழ் விக்கிப்பீடியா பயிற்சிப் பட்டறை நிகழ்வுக்கு ஏற்பாடு செய்த ஆண்டோ பீட்டர் திடீர் மறைவால், இந்நிகழ்வு இருக்காது என்று எண்ணியிருந்த நிலையில் அவரது நண்பரும், கணித்தமிழ்ச் சங்கத்தின் மதுரைக் கிளைப் பொறுப்பாளருமான கபீரியல் நாதன் மற்றும் மதுரையைச் சேர்ந்த அந்தோணி ரோஸ்லின் ஆகியோர் இந்நிகழ்வை டோவ் மல்டிமீடியா நிறுவனத்துடன் இணைந்து சிறப்பாகச் செய்து உதவினர். அனைவருக்கும் நன்றி.--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 17:25, 2 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]