விக்கிப்பீடியா பேச்சு:புள்ளிவிவரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தொகுப்புகள் பற்றிய விபரங்கள் தானியங்கிகளின் தொகுப்புகளையும் காட்டுகிறதா?--Kanags \உரையாடுக 02:27, 28 திசம்பர் 2011 (UTC)

ஆம் மொத்தத் தொகுப்புகளை (தானியங்கி + பயனர்) காட்டுகிறது.--சோடாபாட்டில்உரையாடுக 04:58, 28 திசம்பர் 2011 (UTC)

இங்கு மாதவாரியாக இணைப்பு மட்டும் கொடுக்கப்படாது ஒவ்வொரு மாதத்தின் இறுதிநாளில் உள்ள தரவுகளைப் பட்டியலாகத் தரவியலுமா ? ஒவ்வொரு நாளுக்கும் வேறுபாட்டைக் காண்பிப்பதுபோல ஒவ்வொரு மாதத்திற்கும் இடையேயான வேறுபாட்டை பிடிக்க முடியுமா ?--மணியன் (பேச்சு) 03:23, 12 மார்ச் 2012 (UTC)

ஒவ்வொரு நாளும் முனைப்பாகப் பங்களிக்கும் பயனர் எண்ணிக்கையைக் (குறைந்தது 4 தொகுப்புகள், தானியங்கிகள் தவிர்த்து) கண்காணிக்க இயலுமா?--இரவி (பேச்சு) 03:40, 4 ஆகத்து 2012 (UTC)

தரவு வேறுபாடு[தொகு]

புதுப்பயனர் உருவாக்கப் பதிகையில் காட்டுவதை விட இங்கு காட்டும் பயனர் எண்ணிக்கையின் உயர்வு கூடுதலாக உள்ளதே? எப்படி? பிற விக்கிப்பீடியாக்களில் உருவாகும் உலகளாவிய பயனர் கணக்குகளும் ஏதாவது ஒரு வகையில் கணக்கில் கொள்ளப்படுகிறதா?--இரவி (பேச்சு) 18:02, 5 பெப்ரவரி 2013 (UTC)

தரவு இற்றைக்கான காலம்[தொகு]

ஒவ்வொரு நாளும் பக்கத்தைத் தொகுக்காமல் ஒரு மாதத்துக்கான அனைத்து நாட்களின் வேறுபாடுகளையும் மாதத்தின் இறுதியில் ஒட்டு மொத்தமாகச் செய்ய இயலுமா?--இரவி (பேச்சு) 11:40, 18 பெப்ரவரி 2013 (UTC)

இத்தானியங்கி எவ்வாறு இயக்கப்படுகிறது எனத் தெரியவில்லை. ஆனாலும், முடிந்தால் நாள்தோறும் இற்றைப்படுத்துவது நல்லது.--Kanags \உரையாடுக 11:50, 18 பெப்ரவரி 2013 (UTC)
இது ஏற்கனவே ஒவ்வொரு நாளும் தான் செயற்பட்டு வருகிறது. ஒவ்வொரு நாளுக்குமான தரவு தேவை. ஆனால், அவற்றை ஒட்டு மொத்தமாக மாத இறுதியில் செய்ய இயலுமா என்று அறிய விரும்பினேன். ஒவ்வொரு நாளும் யாரும் இதனைப் பார்ப்பார்களா என்பது ஐயமே.--இரவி (பேச்சு) 11:58, 18 பெப்ரவரி 2013 (UTC)
நான் தினமும் பார்த்துக் கொண்டு தான் வருகிறேன். இன்று நிறுத்தப்பட்டு விட்டது போல் தெரிகிறது.--Kanags \உரையாடுக 06:53, 19 பெப்ரவரி 2013 (UTC)
இரவி தானியங்கி அணுக்கம் கொடுத்து விட்டதால் அண்மைய மாற்றங்கள் பக்கத்தில் தெரியவில்லை. தானியங்கி அணுக்கத்தை மீளப் பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.--Kanags \உரையாடுக 06:56, 19 பெப்ரவரி 2013 (UTC)
சிறீதரன், அன்றாடப் பயன்பாட்டை உறுதிப்படுத்தியமைக்கு நன்றி. இப்பக்கத்தை உங்கள் கவனிப்புப் பட்டியலில் இடலாம். அல்லது, அண்மைய மாற்றங்களில் தானியங்கித் தொகுப்புகளைக் காட்டுமாறு செய்யலாம். இரண்டிலுமே தானியங்கித் தொகுப்புகள் நிறைய வரும் என்பது வசதிக் குறைவே. எனினும், தானியங்கித் தொகுப்பை அவ்வாறே குறிப்பதே சரி என்று கருதுகிறேன். இது தொடர்பான தானியங்கி அணுக்க வேண்டுகோளை மறுக்கவும் தாங்கள் குறிப்பிட்டுள்ளது சரியான காரணமாக இருக்காதே?--இரவி (பேச்சு) 15:32, 19 பெப்ரவரி 2013 (UTC)
இது தகாது இரவி. இதனை நான் மட்டும் தான் பார்க்கிறேன் என நீங்கள் எண்ணுவது எவ்வாறு என்று தெரியவில்லை. மேலும், இந்தத் தானியங்கி ஒரு நாளிக்கு ஒரு முறை மட்டும் தான் தனது பதிவை இடுகிறது. இதற்கெதெற்குத் தானியங்கி அணுக்கம்? பொதுவாக பல பதிவுகளை இடும் ஒரு தானியங்கிக்கே தானியங்கி அணுக்கம் வழங்கப்படுவது வழக்கம். ஒரு பதிகைக்காக அனைத்துத் தானியங்கிகளையும் பார்ப்பதென்பது முடியாத காரியம். நீங்கள் இவ்வாறு தன்னிச்சையாக முடிவெடுப்பது நல்லதல்ல. உங்களால் முடியாவிட்டால் சொல்லுங்கள். நான் ஏனைய அதிகாரிகளிடம் கேட்கிறேன். நன்றி.--Kanags \உரையாடுக 20:12, 19 பெப்ரவரி 2013 (UTC)
இதனை தவறாது தேடிப் பார்ப்பவரில் நானும் ஒருவன். கவனிப்புப் பட்டியலில் இட்டால் மாதம்தோறும் புதிப்பிக்க வேண்டியுள்ளது.
சிறீதரன், அமைதி.. அமைதி. இரவி இன்னும் முடிவாகச் சொல்லவில்லை :) --மணியன் (பேச்சு) 03:12, 20 பெப்ரவரி 2013 (UTC)
சிறீதரன், இப்பக்கத்தை நீங்கள் மட்டும் தான் பார்க்கிறீர்கள் என்று நான் எண்ணவில்லை. மணியனும் பயன்பாட்டை உறுதிப்படுத்தியுள்ளார். இன்னும் பலர் பயன்படுத்தலாம். அன்றாடத் தொகுப்பை மாதாந்திரத் தொகுப்பாக மாற்ற முடியுமா என்ற கேள்விக்கும் இக்கணக்குக்குத் தானியங்கி தர வேண்டுமா என்ற கேள்விக்கும் தொடர்பு இல்லையே? தானியங்கியாக இருந்தாலும் கூட அன்றாடம் தொகுப்பதில் பயனுண்டு என்பதை இப்போது அறிகிறேன். இந்தக் கணக்கை இயக்கும் சிரீக்காந்த், இதற்குத் தானியங்கி அணுக்கம் வேண்டி 14 மாதங்கள் ஆகின்றன. இது தொடர்பான கேள்வியொன்றை சுந்தர் மே 2012ல் கேட்டிருக்கிறார். அதற்குப் பதில் வரவில்லை. அதிகாரிகளுக்கான பணி நிலுவையில் இருக்க வேண்டாமே என்றே இது தொடர்பாக நடவடிக்கை எடுத்தேன். இதில் என்னுடைய தன்னிச்சையான முடிவு எதுவுமில்லை. இப்போது இருப்பது முடிந்த முடிவுமில்லை. தானியங்கி அணுக்கம் தர வேண்டாம் என்ற மறுப்பை இங்கு இட்டால், அணுக்கத்தை மீளப் பரிசிக்கலாம். ஒவ்வொரு மாதமும் முனைப்பாக உள்ள பயனர்கள், தமிழ் விக்கிப்பீடியாவில் நிகழும் தொகுப்புகளில் தானியங்கி அல்லாதவற்றைப் பிரித்துப் பார்க்க விரும்புகிறேன். இதன் காரணமாகவும் தானியக்கமாக தொகுப்பவற்றை அவ்வாறே குறிக்க வேண்டும் என்பது ஒரு அடிப்படை செயற்பாடு என்பதாலும் இக்கணக்கின் தானியங்கி அணுக்கம் தொடர வேண்டும் என்று விரும்புகிறேன். இதில் தன்னிச்சையாகச் செயல்படுகிறேன் என்ற உங்கள் முறையீட்டுக்கு மதிப்பு அளிக்கும் வகையில், இது தொடர்பாக மற்ற அதிகாரிகள் எடுக்கும் முடிவை ஏற்றுக் கொள்வதில் எனக்குத் தயக்கமில்லை. நன்றி--இரவி (பேச்சு) 04:42, 20 பெப்ரவரி 2013 (UTC)

சிறீதரன், மணியன், உங்கள் கருத்துகளை மீண்டும் படித்துப் பார்த்தேன். இங்கு தானியங்கி அணுக்கம் இருப்பது பிரச்சினை இல்லை. அதனால், அண்மைய மாற்றங்களில் தெரியவில்லை என்பதே பிரச்சினை. இப்பக்கத்தின் தொகுப்புகள் சிறிய தொகுப்புகளாக இருப்பதால் அண்மைய மாற்றங்களில் சிறு தொகுப்புகளை மறைத்திருப்பவர்களுக்கும் கூட தென்படாது. நானும் இக்காரணத்தாலேயே அன்றாடம் பார்க்கும் பழக்கம் இல்லாமல் இருந்துவிட்டேன். எனவே, இப்பிரச்சினையைத் தீர்க்க, அண்மைய மாற்றங்களின் தலைப்புப் பகுதியிலேயே பெப்ரவரி 2013 புள்ளிவிவரத்துக்கான இணைப்பைத் தந்திருக்கிறேன். ஒவ்வொரு மாதமும் இந்த இணைப்பை இற்றைப்படுத்தினால் போதுமானது. அனைவரின் பார்வைக்கும் கிட்டும். இத்தீர்வு ஏற்றுக் கொள்ளக்கூடியதாக உள்ளதா? நன்றி--இரவி (பேச்சு) 05:14, 20 பெப்ரவரி 2013 (UTC) 👍 விருப்பம்--மணியன் (பேச்சு) 10:53, 20 பெப்ரவரி 2013 (UTC)

ஒரு நிருவாகியாக இருப்பவர் சிறு தொகுப்புகளை மறைத்து வைத்திருப்பதனால் எவ்வாறு நிருவாக வேலைகளைக் கவனிக்க முடியும் எனத் தெரியவில்லை. நீங்கள் கொடுத்த தொடுப்பில் சுந்தரின் கேள்வி சரியானதே. அதற்கான பதிலிலேயே நிருவாக அணுக்கம் வேண்டுமா அல்லது இல்லையா என்பதை முடிவு செய்ய முடியும். என்றாலும், இப்போதுள்ள மாற்றம் தற்காலிகமாக ஏற்றுக் கொள்ளக்கூடியதே. ஆனாலும், ஒவ்வொரு மாதமும் தவறாமல் இற்றைப்படுத்தப்படும் என்றால் எனக்கு ஏற்புடையதே.--Kanags \உரையாடுக 06:59, 20 பெப்ரவரி 2013 (UTC)
சிறீதரன், மாற்றத்தை ஏற்றுக் கொண்டதற்கு நன்றி. ஒவ்வொரு மாதமும் இதனை இற்றைப்படுத்தும் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறேன். அல்லது, எந்த ஒரு நிருவாகியும் இதனைக் கவனித்து மாற்ற முடியும். விக்கிப்பீடியா:Statistics/February 2013 என்பதற்குப் பதில் விக்கிப்பீடியா:Statistics/பெப்ரவரி 2013 என்பது மாதிரி இருந்தால் {{CURRENTMONTH}} {{CURRENTYEAR}} வார்ப்புரு கொண்டு தானாகவே மாறுமாறு செய்யலாம். ஆங்கில மாதப் பெயர் வருவதற்கு ஏதாவது வார்ப்புரு உள்ளதா? அல்லது, பக்கத்தின் தலைப்பைத் தமிழில் இட இயலுமா என்று சிரீக்காந்திடம் கேட்டுப் பார்க்கலாம். அதுவும் இயலாவிட்டால், தமிழ்ப் பெயரில் இருந்து வழிமாற்று உருவாக்கலாம். ஆகவே, இணைப்பை இற்றைப்படுத்துவது ஒரு பிரச்சினை இல்லை. நிற்க!
//ஒரு நிருவாகியாக இருப்பவர் சிறு தொகுப்புகளை மறைத்து வைத்திருப்பதனால் எவ்வாறு நிருவாக வேலைகளைக் கவனிக்க முடியும் எனத் தெரியவில்லை. // என்பதன் மூலம் சிறு மாற்றங்களை மறைத்துப் பார்ப்போர் நிருவாகப் பணியைச் சரியாக ஆற்றவில்லை அல்லது ஆற்ற இயலுமா என்ற ஐயத்தை முன்வைத்துள்ளீர்கள். இது குறித்த எனது வருத்தத்தைப் பதிவு செய்ய விரும்புகிறேன். ஒரு பயனர் மட்டுமல்ல நிருவாக அணுக்கம் உள்ள பயனரும் கூட நாள்தோறுமோ அடிக்கடியோ வந்து பங்களிக்க வேண்டும் என்று கட்டாயம் இல்லை. வந்து பங்களிப்போரை நோக்கியும் இவ்வாறான கருத்து தேவையா? அண்மைய மாற்றங்களில் உள்ள சிறு தொகுப்புகளைக் கண்டால் அவை பெரும்பாலும் நாட்பட்ட பங்களிப்பாளர்களிடம் இருந்தே வருவதைக் காணலாம். அவர்களின் சிறு தொகுப்புகள் மட்டுமல்ல பெரும் தொகுப்புகள் கூட விசமத் தொகுப்பாக இருக்க வாய்ப்பு இல்லை. அக்கட்டுரைத் தலைப்பில் ஆர்வம் இருந்தால் ஒழிய அவற்றை நான் காண்பதில்லை. அடையாளம் காட்டாத பயனர்களால் சிறு தொகுப்புகளைச் செய்ய இயலாது. எனவே, அவர்களின் அனைத்துத் தொகுப்புகளும் அண்மைய மாற்றங்களில் வரும். அவற்றில் பொருந்தாத மாற்றங்களைக் கண்டு மீள்விக்கும் பணியைச் செய்தே வருகிறேன். காண்க: என் பங்களிப்புகள். அண்மைய மாற்றங்களைக் காணாமலேயே செய்யக்கூடிய நிருவாகப் பணிகள் ஏராளம் உள்ளன. அவறையும் இயன்ற போது செய்தே வருகிறேன். ஒரு விக்கியில் பங்களிப்புகள் கூடி அண்மைய மாற்றங்களில் நெரிசல் வரும் போது முக்கிய மாற்றங்களைத் தவற விடக்கூடாது என்பதற்காகவே சிறு தொகுப்புகளைச் செய்யும் வசதியும் அவற்றை மறைத்துப் பார்க்கும் வசதியும் உள்ளது. அதனைப் பயன்படுத்துவதில் என்ன தவறு? அப்படியே ஒரு நிருவாகி ஒரு தொகுப்பைத் தவறவிட்டாலும் உங்களைப் போன்ற இன்னும் பலர் கவனித்துத் திருத்தவர் என்ற நம்பிக்கை, கூட்டு முயற்சியில் தானே இயங்குகிறோம்?
//நீங்கள் கொடுத்த தொடுப்பில் சுந்தரின் கேள்வி சரியானதே. அதற்கான பதிலிலேயே நிருவாக அணுக்கம் வேண்டுமா அல்லது இல்லையா என்பதை முடிவு செய்ய முடியும்.// சுந்தரின் கேள்விக்கு ஆம், இல்லை என்று இரண்டே பதில்கள் தான் வர இயலும். இல்லை என்றால் இன்னும் என்னென்ன பணிகள் என்ற அடுத்த கேள்வி வரும். அந்தத் தானியக்கப் பணி ஏற்றுக் கொள்ளக்கூடிய மாற்றங்களைச் செய்தால் அதற்கு தானியங்கி அணுக்கம் கொடுப்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. சிரீக்காந்த் தற்போது தமிழ் விக்கியில் முனைப்பாக இல்லாத நிலையில் அக்கணக்கின் பங்களிப்புகளையே விடையாக கொண்டு அணுக்கத்தைச் செயற்படுத்தி உள்ளேன். ஒரு தானியங்கி செய்யும் பணி தீங்காக இருந்தாலோ பெரும்பான்மை பயனரிடமிருந்து உள்ளடக்கத்துக்கு நேரும் பெரும் மாற்றங்களை மறைப்பதாக இருந்தாலோ மட்டுமே அதற்கான அணுக்கத்தை மறுக்கலாம். ஒரு தவறான கணக்குக்குத் தேவையில்லாமல் தானியங்கி அணுக்கம் கொடுத்து அதனால் தமிழ் விக்கிப்பீடியாவுக்குத் தீங்கு வந்திருந்தால் சொல்லுங்கள். ஏற்றுக் கொள்கிறேன். ஒரு முறையான வேண்டுகோளின் மீது 14 மாத காலம் பொறுத்திருந்து எவரும் மறுப்பும் தெரிவிக்காத நிலையில் நடவடிக்கை எடுத்ததை எப்படித் தன்னிச்சையான செயற்பாடு என்கிறீர்கள்? மீண்டும் சொல்கிறேன். அண்மைய மாற்றங்களில் பார்க்க இயலவில்லை என்பது அணுக்கத்தை மறுப்பதற்கான போதுமான காரணம் இல்லை. http://stats.wikimedia.org/EN/TablesWikipediaTA.htm , http://meta.wikimedia.org/wiki/List_of_Wikipedias காட்டும் தரவுகளில் எனக்கு ஈடுபாடு உண்டு. இது போன்று விக்க தொடர்பான எத்தனையோ விசயங்கள் அண்மைய மாற்றத்தில் வருவதில்லை. இருந்தாலும், எனது உலாவியில் குறித்து வைத்துக் கொண்டு அவ்வப்போது பார்த்து வரவே செய்கிறேன். இணையத்தில் ஒரு பக்கத்தைப் பார்க்க நிறைய வழிகள் உள்ளன. இந்தப் பக்கத்தை அன்றாடம் பார்ப்போரும் அறியாதோரும் அறிந்து கொள்ளட்டுமே என்ற வளர்முக அணுகுமுறை நோக்கிலேயே அண்மைய மாற்றங்களின் தலைப்பில் இடும் முயற்சியைச் செய்தேன். ஆனால், நீங்கள் இதைத் தன்னிச்சையான செயல்பாடு என்பதும் நிருவாகப் பணியை முறையாகச் செய்கிறேனா என்று ஐயம் எழுப்பியிருப்பதும் வருத்தம் அளிக்கிறது. --இரவி (பேச்சு) 07:54, 20 பெப்ரவரி 2013 (UTC)