விக்கிப்பீடியா பேச்சு:பயனர் கருவிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்ட சென்னை கூடலின் பொழுது தமிழ்ப்பரிதி மாரி அவர்கள் பிளிக்கர் போன்ற படத்தொகுப்புகள் கொண்டதாக விக்கி காமன்சு தளத்தினை வடிவமைத்திட வேண்டினார். தகவல் உழவன் அவர்கள் தமிழ் தட்டச்சு கருவி ஆன் ஸ்கீன் கீபோடு போல தமிழ் விக்கிப்பீடியாவில் அமைத்திட வேண்டும் என்ற தனது விருப்பத்தினை தெரிவித்திருந்தார். அதுபோல நீச்சல்காரன் அவர்களின் தமிழ்ப்பிழை திருத்தி கருவியை இன்னும் செம்மைபடுத்தி தமிழ் விக்கிப்பீடியால் இணைத்திடவும் விருப்பங்கள் தெரிவிக்கப்பட்டன. இதனைப் பற்றி முகநூலில் பகிர்ந்த பொழுது நண்பர் சிறீனிவாசன் இதனைப் பட்டியல் படுத்தி அதிக விளக்க்ததுடன் தனிப்பக்கத்தில் இட்டு பிறகு தெரிவிக்குமாறு கூறினார் அதனால் இங்கு இப்பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப அளவில் தமிழ் விக்கிப்பீடியாவை செம்மைப் படுத்த தங்களுடைய எண்ணத்தில் விக்கி கருவிகள் பற்றி ஏதேனும் சிந்தனையிருந்தால் இங்கு பகிர்ந்து கொள்ளவும். கருவிகளின் தேவைகள் தெளிவாக அமைந்தால் தொழில்நுட்ப வல்லுனர்கள் நமக்கு கருவிகளை வடிவமைத்து தர காத்திருக்கின்றார்கள். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 19:10, 4 அக்டோபர் 2013 (UTC)

இவ்விவாததிற்கு விக்கிப்பீடியா:பயனர் கருவிகள் பக்கத்தின் பேச்சுப் பக்கம் சிறப்பாக இருக்கும் என நினைக்கிறேன் --நீச்சல்காரன் (பேச்சு) 02:36, 6 அக்டோபர் 2013 (UTC)
விக்கிப்பீடியா:பயனர் கருவிகள் பக்கத்தில் உரையாடுவதே பொருத்தம். பத்தாண்டுகளின் ஒரு பகுதியாக இருக்கத் தேவையில்லை. பலரும் பல கருவிகளுக்கான வேண்டுகோள்கள் தரும் அதே வேளை, அவற்றில் எது கூடுதல் விளைவைத் தரவல்லது என்று முன்னுரிமை தந்தும் செயல்பட வேண்டுகிறேன்.--இரவி (பேச்சு) 04:04, 6 அக்டோபர் 2013 (UTC)
தங்கள் உரைகளுக்கு நன்றி. கருவிகளைப் பற்றி, அந்த பகுதியிலேயே தெரியப்படுத்துகிறேன். இங்கே குறிப்பிட்டுள்ள முதல் முன்மொழிவு, கருவிகளைக் குறித்தது அல்ல. அனைத்துதமிழ் திட்டங்களிலும் இருக்க வேண்டிய தோற்றவசதி. இதனை எங்கு தெரிவிப்பது?--≈ உழவன் ( கூறுக ) 06:20, 6 அக்டோபர் 2013 (UTC)
விக்கிப்பீடியா:பயனர் கருவிகள் என்றொரு பக்கம் உள்ளதா?. கவனத்திற்கு வரவில்லை. மாற்றிவிடுகிறேன். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 06:27, 6 அக்டோபர் 2013 (UTC)

தொழினுட்ப கோரிக்கை[தொகு]

  1. விக்கிப்பீடியா:ஆலமரத்தடி_(தொழினுட்பம்)#ஓரே மாதிரியான தோற்றம்

தேவைப்படும் கருவிகள்[தொகு]

இருக்கும் கருவிகளில் தேவைப்படும் மேம்பாடுகள்[தொகு]

தொடுப்பிணைப்பி[தொகு]

  1. தொடுப்பிணைப்பியின் இடிராப் இடவுன் மெனுவில் இன்னும் சிலவற்றைச் சேர்க்க வேண்டும். அதில் பக்கவழி நெறிப்படுத்தலும் தேவை.
  2. தொடுப்பிணைப்பியில் இணைக்கப்படும் வார்ப்புரு பக்கத்தின் மேற்பகுதியில் வரவேண்டுமா அல்லது கீழ் பகுதியில் வர வேண்டுமா என்பதை பயனர் தேர்வு செய்யுமாறு வாய்ப்பு வர வேண்டும்.
  3. விக்சனரி திட்டத்துக்கான சொல்லுக்கு இணைப்பு கொடுக்கும் வார்ப்புருக்களும் அதிலேயே இருக்க வேண்டும். அதுபோலவே விக்கிமூலம், மேற்கோள் போன்ற அனைத்து திட்டத்துக்கும் இருக்க வேண்டும்.
  4. தொடுப்பிணைப்பியில் தொடுப்புகளை கொடுப்பது போல் தொடுப்புகளை நீக்குவதற்கும் வழிவகை செய்ய வேண்டும். எடுத்துக்காட்டுக்கு வேலை நடந்துகொண்டிருக்கிரது வார்ப்புரு உள்ள கட்டுரையில் அதை தொடுப்பிணைப்பி மூலம் நீக்குமாறும் இருக்க வேண்டும்.

புரூவிட்[தொகு]

  1. புரூவிட்டு கருவியில் தமிழில் நூல்களுக்களான வாய்ப்புகளில் உரலி இல்லை. தற்போது தமிழ் நூல்கள் அதிகம் இணையத்தில் கிடைப்பதால் நூல் மேற்கோளுக்கான வாய்ப்புகளில் உரலி என்னும் பீல்டையும் சேர்க்க வேண்டும்.
  2. "சொற்றொடரால் தேடு" "Search By Word" என்னும் புது வசதி புரூவிட்டில் செய்யப்பட வேண்டும். இது என்ன செய்ய வேண்டுமெனில் ஒரு 1000 பக்கங்களை கொண்ட நூலில் மேற்கோளுக்கான வரிகளை பக்கத்தின் அடிப்படையிலோ வார்த்தைத் தேடலின் அடிப்படையிலோ காட்டுவதாக இருக்க வேண்டும். வலைபக்கங்களில் உள்ள மேற்கோளுக்கும் இதையே செய்யலாம். ஒரு பயனர் 1000 வரிகளை கொண்ட வலைப்பக்கத்தில் 501ஆவது வரியில் உள்ள சில வார்த்தைகளை தட்டச்சிட்டு சேமித்தால் அதை விக்கிக்கட்டுரைப் பக்கத்தில் இருந்து சொடுக்கும் போது அந்த வலைப்பக்கத்தின் 501 வரியில் "சொற்றொடரால் தேடு" பகுதியில் கொடுத்த வார்த்தைத் தொடரை ஹைலைட்டு செய்து பக்கம் திறக்க வேண்டும்.

இன்னும் நிறைய யோசித்து வைத்திருந்தேன். நினைவில் வந்தால் சொல்லுகிறேன். அது ஒன்னும் பிரச்சினை இல்லை. விட்டத்த பார்த்து வெறிசா ஆட்டோமட்டிக்கா எல்லாம் நினைவுக்கு வந்துரும். :)--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 19:25, 8 அக்டோபர் 2013 (UTC)