விக்கிப்பீடியா பேச்சு:உங்களுக்குத் தெரியுமா/2008

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
  • நீலகிரியில் வாழும் தோடர் இனமக்களின் வாழ்வில் எருமைகள் பெற்றுள்ள சிறப்பு காரணமாக இவர்களை மாந்தவியலாளர்கள் எருமையின் குழந்தைகள் என அழைப்பர்.
  • அமெரிக்க நாட்டில் உள்ள டென்வர் நகரம் கடல்மட்டத்தில் இருந்து ஒரு மைல் உயரத்தில் இருப்பதால் இதனை மைல் உயர நகரம் என்றும் அழைப்பர்.
  • வாழும் பறவைகளுள் மிகப்பெரியது தீக்கோழி(Struthio camelus) ஆகும்.
  • உலகிலே அதிக மக்கள் தாய் மொழியாக கொண்ட மொழி சீன மொழி.
  • இன்று கிடைக்கப்படும் மிகப் பழைய (2300 வருடங்கள்) தமிழ் இலக்கண நூல் தொல்காப்பியம் ஆகும்.