கருப்பு மாம்பா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆப்பிரிக்கக் கருப்பு மாம்பா
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
துணைத்தொகுதி: முதுகெலும்பிகள்
வகுப்பு: ஊர்வன
வரிசை: பாம்பு-பல்லியினம்
துணைவரிசை: Serpentes
குடும்பம்: பாம்பினம்
பேரினம்: Dendroaspis
இனம்: D. polylepis
இருசொற் பெயரீடு
Dendroaspis polylepis
(Günther, 1864)

கருப்பு மாம்பா ஆப்பிரிக்காவை வாழிடமாகக் கொண்ட ஒரு நச்சுப்பாம்பு இனம் ஆகும். இதுதான் உலகிலேயே மிக விரைந்து ஊர்ந்து செல்லவல்ல பாம்பினம். மணிக்கு 20 கி.மீ(12.5 மைல்கள்) விரைவில் சிறு தொலைவு ஊரவல்லது. இவை பகலிலே இரை தேடுகின்றன. சுமார் 2.5 மீ முதல் 4 மீ வரை நீளம் இருக்கும் (ஓராள் நீளத்திற்கும் அதிகமாக). உடல் சாம்பல் நிறமாக இருதாலும், வாயின் உட்புறம் கருப்பாக இருப்பதால் கருப்பு மாம்பா என பெயர் பெறுகின்றது. ஒரே கடியில் 100 மில்லி கிராம் நஞ்சை உட்செலுத்தும் என்றும் சுமார் 10 மில்லி கிராம் கொடுத்தாலே மக்கள் இறந்துவிடுவார்கள் என்றும் அறியத்தக்கது, உடலில் உள்ள தசைகளை இந்த நஞ்சு தாக்குவதால், உறுப்புகள் செயல் இழந்து இறப்பு நேரிடும்.

கொன்றுண்ணிகள்[தொகு]

கீரிகளே மாம்பாக்களின் முதன்மையான கொன்றுண்ணிகளாகும். இவை பொதுவாக இளம்பாம்புகளையும் முட்டைகளையும் கொல்கின்றன. பாம்பின் நஞ்சுக்கு எதிர்ப்புத்திறனுள்ள இவை கொல்வதற்குக் கடினமாதலால் பொதுவாக இளம்பாம்புகளையே தாக்குகின்றன.

மேலும் பார்க்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கருப்பு_மாம்பா&oldid=2757455" இருந்து மீள்விக்கப்பட்டது