உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிப்பீடியா:விக்கித்திட்டம் திரைப்படம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விக்கிப்பீடியா:விக்கித்திட்டம் திரைப்படம்/திட்ட தலைப்பு

குறுக்கு வழிகள்:
WP:திரைப்படம்
WP:திரைப்படங்கள்

விக்கித்திட்டம் திரைப்படம் திரைப்படங்கள் தொடர்பான கட்டுரைகளுக்கான விக்கித்திட்டம். நீங்களும் பங்குபெறலாம்.

நோக்கம்

[தொகு]

இத்திட்டம் திரைப்படம் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்துவதையும், புதிய கட்டுரைகளை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. கீழ்க்கண்ட தலைப்புகளில் தாங்கள் கட்டுரைகளை இயற்றலாம், உதவி தேவைப்பட்டால் ஆலமரத்தடியில் அல்லது ஒத்தாசைப் பக்கத்தில் கேட்கவும். இந்த திட்டத்தில் தங்களை இணைத்துக்கொள்ள இங்குள்ள 'பங்குபெறும் பயனர்கள்' பகுதியில் தங்கள் பெயரைச் சேர்க்கவும்.

செயல் திட்டங்கள்

[தொகு]
  • இந்தியத் திரைப்படங்கள் மற்றும் உலகத் திரைப்படங்கள் குறித்த கட்டுரைகளை தேவையான தகவல்களை உள்ளடக்கியதாக உருவாக்குதல்
  • தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 2013 என்னும் பட்டியல் கட்டுரையில் உள்ள உள்ளடக்கதில் சிவப்பு இணைப்பில்லாத வண்ணம் ஒவ்வொரு திரைப்படத்தை பற்றியும் குறைந்தது அனைத்து தேவையான தகவல்களையும் உள்ளடக்கிய கட்டுரையாக உருவாக்குதல்.
  • திரைத்துறை நடிகர்கள் மற்றும் கலைஞர்களைப் பற்றிய கட்டுரைகளை உருவாக்கி மேம்படுத்துதல், இந்த நபர் பற்றிய கட்டுரைகளுக்குத் தக்க படிமங்களை இணைத்தல்.
  • திரைத்துறை தொடர்பான தொழில்நுட்பங்களைப் பற்றிய கட்டுரைகளை உருவாக்கி மேம்படுத்துதல். தேவைக்கேற்ப விளக்கப்படங்களை இணைத்தல்.

கட்டுரைகள் எண்ணிக்கை

[தொகு]

விக்கித் திட்டம் திரைப்படத்தில் 13999 கட்டுரைகள் இந்த விக்கித்திட்டத்தில் உள்ளன. (தானியங்கியால் தினமும் இங்கு புதுப்பிக்கப்படுகின்றது)

வார்ப்புருக்கள்

[தொகு]

பேச்சுப் பக்கத்தில் வார்ப்புரு இட வேண்டல்

[தொகு]

விக்கித் திட்டம் திரைப்படம் தொடர்பான கட்டுரைகளின் பேச்சுப் பக்கத்தில், {{விக்கித்திட்டம் திரைப்படம்}} என வார்ப்புருக்கான குறிப்பை இடுங்கள். அந்த வார்ப்புரு கீழ்க்காணுமாறு தோற்றமளிக்கும்.

விக்கித்திட்டம் திரைப்படம் என்னும் கட்டுரை திரைப்படம் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் திரைப்படம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இந்தத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


பயனர் பக்க வார்ப்புரு

[தொகு]

நீங்கள் விரும்பினால், உங்கள் பயனர் பக்கங்களில் {{பயனர் திரைப்படம்}} என வார்ப்புருக்கான குறிப்பை இடுங்கள். அந்த வார்ப்புரு கீழ்க்காணுமாறு தோற்றமளிக்கும்.

இந்தப் பயனர் விக்கித் திட்டம் - திரைப்படத்தின் உறுப்பினர்



செய்ய வேண்டியவை

[தொகு]

கீழ்க்கண்ட பிரிவுகளில் உள்ள தலைப்புகளில் கட்டுரை எழுதி, விரிவாக்கி, செம்மைப்படுத்தலாம்.

  • திரைப்படங்கள், திரைத்தொடர்கள் (எடுத்துக்காட்டு: ஹாரி பாட்டர் தொடர்கள்)
  • திரைப்படக் கதாப்பாத்திரங்கள் (எடுத்துக்காட்டு: அயன்மேன், ஹல்க், சூப்பர்மேன்)
  • திரைப்படக் கழகங்கள், நிறுவனங்கள்
  • திரைப்படத்திற்கான விருதுகள், விழாக்கள் (எடுத்துக்காட்டு: பிலிம்பேர் விருது, பன்னாட்டுத் திரைப்பட விழா)
  • திரைப்படத் தயாரிப்பு நுட்பங்கள் (எடுத்துக்காட்டு: ஏரோ 3டி), சொற்கள்
  • திரைப்படத்தின் வகைகள் (எடுத்துக்காட்டு: காதல், நகைச்சுவைத் திரைப்படங்கள், ஆவணப் படங்கள், தேசப்பற்றுப் படங்கள் போன்றவை)
  • திரைப்படம் தொடர்பான கட்டுரைகளுக்கு தேவையான சான்றுகள், மேற்கோள்கள், வெளியிணைப்புகள், பகுப்புகள் முதலியவற்றை இணைத்தல் (எடுத்துக்காட்டு: ஐஎம்டிபி தளத்தின் இணைப்பு சேர்ப்பது)
  • திரைப்படம் என்னும் கட்டுரையை விரிவாக்கம் செய்து தரமானதொன்றாக மேம்படுத்துதல். (இவ்வேலை நடந்து கொண்டிருக்கிறது. பிறரும் இணைந்தால் நன்று.)
  • (18 - 24) அக்டோபர் 2013 ஆகிய தேதிகளில் வெளியாகவிருக்கும் திரைப்படங்களை பட்டியலிட்டு, உருவாக்கி, மேம்படுத்துதல்.
  • பிரபலம் அடையாத வெளிவரவிருக்கும் திரைப்படக் கட்டுரையை நீக்குதல். [சான்று தேவை]

கட்டுரைகள் எழுத வழிமுறைகள்

[தொகு]

பின்வரும் வழிமுறைகளைக் கருத்தில் கொண்டு இத்திட்டத்தில் இடம்பெறும் கட்டுரைகளைப் பயனர்கள் உருவாக்கி, மேம்படுத்துங்கள்:

  1. ஒரு திரைப்படத்தின் பெயரிலோ, கலைஞரின் பெயரிலோ அல்லது வேறு திரைத்துறை.. தொழில்நுட்பம் தொடர்பான தலைப்பிலோ தொடங்குவதற்கு, குறைந்தது மாநில அளவிலோ அல்லது தேசிய அளவிலோ உள்ள 2 ஊடகங்களில் அத்தலைப்பு பற்றிய முழு விமர்சனம் செய்திருக்க வேண்டும்.
  2. நீங்கள் எழுதிய கட்டுரைகள் திரைப்படத்தைப் பற்றியதாக இருந்தால், அதில் ஊடகங்கள் (பத்திரிக்கைகள், திரைப்படம் சார்ந்த இணையதளங்கள் போன்றவை) அத்திரைப்படங்களுக்கு அளித்த மதிப்பெண்களையும், விமர்சனத்தின் சுருக்கத்தையும் மேற்கோளுடன் எழுதலாம். அத்திரைப்படங்கள் வருவாய் ஈட்டியதையும், பிற சாதனைகளையும், விருதுகள் பெற்ற விபரங்களையும் எழுதுங்கள். ஈட்டிய வருவாயினை இற்றைப்படுத்தி வையுங்கள்.
  3. கிசுகிசுக்களைத் தவிர்க்கவும். ஆதாரமற்ற செய்திகளையும், நம்பகத்தன்மையில்லாத தகவல்களையும் சேர்க்க வேண்டாம். நடுநிலையில் இருந்து தகவல்களையும், சர்ச்சைகளையும், பிற விமர்சனங்களையும் சரிபார்த்து எழுத வேண்டும்.
  4. திரைப்படத்தைப் பற்றிய அடிப்படை விவரங்கள் இருக்க வேண்டியது அவசியம். வார்ப்புருக்களை மட்டும் வெட்டி ஒட்டுவதைத் தவிர்க்கவும்.

மேம்படுத்த சில கட்டுரைகள்

[தொகு]

தேவைப்படும் கட்டுரைகளின் பட்டியல்

[தொகு]

வேண்டிய கட்டுரைகள் (திரைப்படம் பகுப்பில் உள்ள அனைத்து கட்டுரைகளில் இருக்கும் சிவப்பு இணைப்புகள்)

சேய்த் திட்டம்

[தொகு]

இவற்றையும் காண்க

[தொகு]