உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிப்பீடியா:விக்கித்திட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விக்கித்திட்டம் என்பது விக்கிப்பீடியா தொகுப்பாளர்கள் குழுவாக இணைந்து விக்கிப்பீடியாவை முன்னேற்றும் முயற்சி ஆகும். இந்தக் குழுக்கள் ஓர் குறிப்பிட்டத் தலைப்பைச் சார்ந்து பணிபுரிவர். அல்லது கட்டுரை அல்லாது பிற பணிகளை செய்வர் (உதாரணத்திற்கு புதுப்பயனர்களை வரவேற்பது).

இயங்கும் முறை

[தொகு]

தொகுப்பாளர்களின் பங்களிப்பே விக்கிப்பீடியாவின் வெற்றிக்கு முழுமுதற்க் காரணமாகும். ஒரு தலைப்பைப் பற்றிய விவாதங்களை தொகுப்பாளர்கள் முன்வைக்க விக்கித்திட்டத்தின் பக்கங்களே சரியான இடம். இங்கே தான் தொகுப்பாளர்கள் அத்தலைப்பின்கீழ் அமையும் கட்டுரைகளைப் பற்றி கூட்டாக விவாதிக்கலாம். அக்கட்டுரைகளை மேம்படுத்த முயற்சிகள் எடுக்கலாம் அல்லது திட்டத்திற்காக செய்த பணிகளை கணக்கிடலாம். விக்கித்திட்டங்கள் மூலம் கட்டுரைகளைத் தொகுக்கும் பணி எளிதாகும். தானியங்கி மூலம் கட்டுரைகளின் துப்புரவு பணிகள் நடக்கும், மற்றும் பயனர்களுக்கு உதவும் கருவிகள், வார்ப்புருக்கள் உருவாகும். குறிப்பிட்டத் திட்டத்தை மேம்படுத்த அத்திட்டத்தில் பங்களிக்கும் அனைவரும் ஒன்றாக முயற்சி செய்ய ஏதுவான இடம், விக்கித்திட்டமே. புதிதாக சேர்க்கப்பட்ட கட்டுரைகள், மேம்படுத்தப்படவேண்டிய கட்டுரைகள் என அனைத்தையும் சரிசெய்ய விக்கித்திட்டங்கள் உதவும்.

விக்கித்திட்டம் என்பது சட்டங்கள் போடும் கழகம் அல்ல, தனியுரிமை கொண்டாடும் இடமல்ல, மேலும், கட்டுரைகளின் மீது தன் எண்ணங்களை திணிக்கும் இடமல்ல.

திட்டத்தினை கண்டுபிடிக்க

[தொகு]

புதிய பங்களிப்பாளர்களை விக்கித்திட்டம் வரவேற்கிறது; உங்களுக்கு ஆர்வமுள்ள ஏதேனும் அல்லது அனைத்து திட்டங்களிலும் சேர்க!

கீழ்காணும் பெட்டியில் உங்களுக்கு ஆர்வமுள்ள விக்கித்திட்டத்தை தேடுக:

விக்கித்திட்டம் உருவாக்குதலும் பராமரித்தலும்

[தொகு]

பலர் இணைந்து பணிகளை செய்ய உகந்த இடம் விக்கித்திட்டமே.

எவரேனும் ஓர் விக்கித்திட்டத்தினை தொடங்கலாம். ஆனால், அது ஒரு இயங்கும் திட்டத்தின் நகலாக இருக்கக்கூடாது. மேலும், திட்டங்கள் ஓர் பெரும் தலைப்பினைக் கொண்டதாக இருக்க வேண்டும். பல கட்டுரைகளுக்கு அது ஒரு குடையாக இருக்க வேண்டும். திட்டத்தில் இணையும் பங்களிப்பாளர்கள், அத்திட்டத்தினை மேம்படுத்த உதவ வேண்டும்.

உருவாக்கப்பட்டுள்ளவை

[தொகு]

முன்னெடுப்புகள்

[தொகு]
  1. விக்கிப்பீடியா:விக்கித்திட்டம்/2024, 2025