விக்கிப்பீடியா:நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள்/செல்வா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

செல்வா[தொகு]

வாக்கு நிலவரம்: (8/0/0)
காலம்: 01:53, மே 20, 2008 முதல் 01:53, மே 27, 2008 வரை (அனைத்துலக நேரம்)

செல்வா இரு ஆண்டுகளாகத் தொடர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவில் சிறப்பாகப் பங்களித்து வருகிறார். அவ்வப்போது இயன்ற அளவில் நிர்வாகப் பணிகளுக்கான ஈடுபாடுகளையும் காட்டுகிறார். அவருக்கு நிர்வாகம் அணுக்கம் அளிப்பது பயனுள்ளதாக இருக்கும். எனவே, அவருக்கு நிர்வாக அணுக்கம் தர முன்மொழிகிறேன். நன்றி--ரவி 13:57, 20 மே 2008 (UTC)

ரவியின் முன்மொழிவை ஏற்கிறேன். --செல்வா 14:06, 20 மே 2008 (UTC)
ஆதரவு[தொகு]

1--ரவி 13:59, 20 மே 2008 (UTC)

2 செல்வாவை நிர்வாகியாக்கும் முன்மொழிவை முதலாவதாக வழிமொழிவதில் மகிழ்ச்சியடைகிறேன். ஒரேயொரு வேண்டுகோள் (அவருக்குத் தெரிந்ததுதான்): ஒரு பயனராக விடுபாட்டாண்மையுடன் அவர் தொடர்ந்து தனது நிலைப்பாட்டை வலியுறுத்த வேண்டும். அதே வேளை தனக்கு விருப்புவெறுப்புள்ள கட்டுரைகளில் (அறுதியான கொள்கைகள் இல்லாத இடங்களில்) அவர் நிர்வாக அணுக்கத்தைப் பயன்படுத்தாமல் இருந்தால் நல்லது. சுந்தர் \பேச்சு 14:04, 20 மே 2008 (UTC) எனது முந்தைய கருத்து பொதுவாக நிருவாகி ஆகுபவர்களைக் குறித்தது. இதுகுறித்த என்னுடைய விளக்கம் கீழே உள்ளது. ஏதோ செல்வாவின் பொறுப்புணர்வைக் கேள்விக்குட்படுத்துவது போன்ற முற்றிலும் தவறான தோற்றத்தைத் தருவதால் அதை விலக்கிக்கொள்கிறேன். -- சுந்தர் \பேச்சு 03:45, 21 மே 2008 (UTC)

சுந்தர், நான் பயனராக இருந்தபொழுதே எனக்கு சரியென்று தோன்றியதையோ தவறென்று நினைத்ததையோ மற்றவர்கள் விருப்பத்திற்கு மாறாக வலிந்து மாற்றினேன் இல்லை. என் கருத்துக்களை முறையுடன் எடுத்து வைப்பதில் என்றும் தயங்கியதில்லை, நிருவாகியானாலும் ஆகாவிட்டாலும் என் கருத்துகளை முறையுடன் முன்வைப்பதில் எந்தத் தயக்கமும் கொள்ளேன். நிருவாகியாகவேண்டும் என்னும் விருப்பமும் எனக்குக் கிடையாது. ரவி பரிந்துரைத்ததால், முன்மொழிந்ததால் ஏற்கிறேன், முயன்று பார்க்கலாம் என்று. என்னால் இயன்ற பங்களிப்பைச் செய்ய வேண்டும் என்பதே என் விழைவு. நான் செய்ய வேண்டும் என்னும் பணிகளை என்னால் கட்டாயம் பயனராக இருந்தே நன்கு செய்தல் இயலும். நான் ஏதும் தவறான முறையில் நிருவாக அணுக்கத்தை ஒருசிறிதும் பயன்படுத்தேன். அப்படி ஓர் அச்சம் ஏன் வந்தது என்பது எனக்குப் பெருவியப்பே. நான் "காரசாரமாக" கருத்தாடிய பக்கங்கள் பல உள்ளன, அவற்றில் ஏதேனும் ஒன்றிலாவது என் கருத்தை முன்வைப்பதைத் தவிர, வலிந்து ஏதும் மாற்றியுள்ளேனா? அப்படி இருந்தால் அறியத்தாருங்கள். மேலும் நான் நிருவாகியானால், நான் மட்டுமோ நிருவாகி? பலரும் இருப்பார்கள்தானே :) நிருவாகிக்கு மேலும் மேலாட்சியாளர்கள் (புயுரோகிராட், Bureaucrat) எல்லாம் இருப்பார்கள்தானே! என்னை மண்டையில் ஒரு குட்டு குட்டி உட்கார வைக்கமாட்டார்களா :) எந்தன் விடுபாட்டாண்மையோ, பொறுப்புணர்வோ ஒரு சிறிதும் குறையாது.--செல்வா 15:09, 20 மே 2008 (UTC)
கட்டாயம், எந்த அச்சமுமில்லை. :-) இது உண்மையில் உங்களுக்கென விடுக்கப்பட்ட வேண்டுகோள் அல்ல. இனிவரும் நாட்களில் இதுபோன்ற பல முன்மொழிவுகள் வரும், அவற்றிலெல்லாம் என்னால் கருத்து தெரிவிக்க இயலுமா எனத் தெரியவில்லை, அவ்வளவே. உங்கள் பொறுப்புணர்வின்மீது துளியும் ஐயப்பாடு இல்லை. -- சுந்தர் \பேச்சு 15:43, 20 மே 2008 (UTC)

3 ஆதரவு. மற்றவர்களுக்கு முன்னுதாரணமாகவும் செயற்பட்டு வருவதோடு மற்றயவர்களையும் தொடர்ந்து பங்களிக்கக்கோரி விக்கிபீடியாவின் முன்னேற்றத்திற்கும் தாய்மொழியாகிய தமிழின் முன்னேற்றத்திற்கும் வித்திட்டு வருகின்றார். --உமாபதி \பேச்சு 18:26, 20 மே 2008 (UTC)

4 நானும் எனது ஆதரவைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.--Kanags \பேச்சு 21:53, 20 மே 2008 (UTC)

5 ஆதரவு. எப்போதோ கொடுக்கப்பட்டிருக்க வேண்டியது. எனது ஆதரவை தெரியப்படுத்துகிறேன்.--Terrance \பேச்சு 02:55, 21 மே 2008 (UTC)

6. செல்வாவுக்கு இல்லாத ஆதரவா? மிக்க மகிழ்ச்சியுடன் ஆதரவைத் தெரிவிக்கிறேன். -கோபி

7. நான் வந்த சில மாதங்களுக்கு இவர் நிர்வாகி என்று தான் நினைத்திருந்தேன் :). ஏதேச்சையாக இவரது தொக்குப்பு விபரங்களை கண்டபோது தான் இவர் நிர்வாகி இல்லை என தெரிந்தது. ஆக டெரென்ஸ் கூறியது போல இவரது பங்களிப்புக்க்கு எப்போது நிர்வாகி தரம் கொடுத்திருக்க வேண்டியது. செல்வாவுக்கு எனது மனப்பூர்வமான ஏகோபித்த ஆதரவு 121.247.214.143 07:43, 21 மே 2008 (UTC) (வினோத்)

8. செல்வாவுக்கு எனது ஆதரவு. --சிவகுமார் \பேச்சு 08:01, 21 மே 2008 (UTC)

ஆதரவு தெரிவித்த ரவி, சுந்தர், உமாபதி, கனகு, டெரன்சு, கோபி, வினோத், சிவகுமார் யாவருக்கும் என் நன்றிகள்.--செல்வா 11:23, 21 மே 2008 (UTC)
நடுநிலை[தொகு]
எதிர்ப்பு[தொகு]
வாழ்த்துகள்[தொகு]

வாக்கெடுப்பு முடிந்து செல்வாவுக்கு நிருவாக அணுக்கம் வழங்கப்படுகிறது. வாழ்த்துகள் செல்வா. இந்த நிருவாக அணுக்கம் உங்கள் பங்களிப்புகளை இன்னும் திறம்படச் செய்ய உதவும் என்று எதிர்ப்பார்க்கிறோம்--ரவி 14:36, 27 மே 2008 (UTC)

எல்லோருக்கும் என் நன்றி. குறிப்பாக, நிருவாகியாகப் பரிந்துரைத்து, முன்மொழிந்த ரவிக்கும், வாக்களித்து ஊட்டுக்கால்தந்த (ஆதரவுதந்த) அனைவருக்கும் என் நன்றி. --செல்வா 15:23, 27 மே 2008 (UTC)