விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/பெப்பிரவரி 17
Appearance
(விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/பெப்ரவரி 17 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பெப்ரவரி 17: விடுதலை நாள் (கொசோவோ)
- 1600 – மெய்யியலாளர் கியோர்டானோ புரூணோ (படம்) உரோம் நகரில் சமய மறுப்புக்காக உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டார்.
- 1753 – சுவீடன் யூலியன் நாட்காட்டியில் இருந்து கிரெகொரியின் நாட்காட்டிக்கு மாறியது. பெப்ரவரி 17ம் நாளுக்கு அடுத்த நாள் மார்ச் 1 ஆக மாற்றப்பட்டது.
- 1867 – சூயசுக் கால்வாயூடாக முதலாவது கப்பல் சென்றது.
- 1959 – முதலாவது காலநிலை செய்மதி வான்கார்ட் 2 விண்ணுக்கு ஏவப்பட்டது.
- 1990 – இலங்கையின் ஊடகவியலாளர், மனித உரிமை செயற்பாட்டாளர் ரிச்சர்ட் டி சொய்சா கடத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டார்.
- 1996 – இந்தோனேசியாவின் பப்புவா மாகாணத்தில் 8.2 அளவு நிலநடுக்கம், மற்றும் ஆழிப்பேரலை இடம்பெற்றதில் 166 பேர் உயிரிழந்தனர். 423 பேர் காயமடைந்தனர்.
- 2011 – அரேபிய வசந்தம்: முஅம்மர் அல் கதாஃபியின் ஆட்சிக்கு எதிரான லிபிய ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பமாயின.
கொத்தமங்கலம் சீனு (பி. 1910) · ச. வையாபுரிப்பிள்ளை (இ. 1956) · நாவற்குழியூர் நடராசன் (இ. 1994)
அண்மைய நாட்கள்: பெப்பிரவரி 16 – பெப்பிரவரி 18 – பெப்பிரவரி 19