உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிப்பீடியா:தமிழ்த் தட்டச்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(விக்கிப்பீடியா:தமிழ் தட்டச்சு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
நுட்பம்
ஆலமரத்தடி (தொழினுட்பம்)

நுட்ப நெறிப்படுத்தல்
தமிழ்த் தட்டச்சு
நுட்ப மாற்ற வாக்கெடுப்பு
இணைய எழுத்துரு
வழு நிலவரங்கள்
நுட்பத் தேவைகள்

தானியங்கிகள்

தானியங்கிகள்
பைவிக்கிதானியங்கி
மீடியாவிக்கி செ.நி.இ (Mediawiki API)

தானியங்கி வேண்டுகோள்கள்
தானியங்கிக் கட்டுரையாக்கம்
Ganeshbot
விக்சனரி தானியங்கிதிட்டம்
தானியங்கிக் கட்டுரையாக்கம் - இதழ்கள்
தானியங்கிக் கட்டுரையாக்கம் - நோய்கள்
தானியங்கிக் கட்டுரையாக்கம் - பழங்குடிகள்
தானியங்கிக் கட்டுரையாக்கம் - ஊராட்சிகள்
தானியங்கிக் கட்டுரையாக்கம் - நகரங்கள்

பயனர் நிரல்கள்

தொடுப்பிணைப்பி
translation helper.js
குறுந்தொடுப்பு
தொகுத்தல் சுருக்கம் உதவியான்
விக்கியன்பு
பகிர்வி
விக்சனரி பார்!
பக்கப்பட்டை மறை
புரூவ் இட்
சேமி&தொகு
உபதலைப்புத் தொகுப்பி

பயனர் கருவிகள்
விக்கிப்பீடியா:பயனர் கருவிகள்
விக்கி

விக்கி
மீடியாவிக்கி
மீடியாவிக்கி நீட்சிகள்
விக்கிதானுலாவி
தமிழ் விக்கிப்பீடியா கைபேசித் தளம்

விக்கிப்பீடியா, ஒருங்குறி எழுத்துருக்களைப் பயன்படுத்துகிறது. இங்குத் தமிழில் தட்டச்சு செய்ய:

1) பக்கத்தின் இடது பக்க பட்டையில் உள்ள மற்ற மொழிகளின் அருகிலுள்ள அமைப்புகள் பொத்தானை தேர்வு செய்யுங்கள்:

2. உள்ளீடு என்ற பகுதியின் கீழ் எழுத்துப்பெயர்ப்பு அல்லது தமிழ்99 ஆகிய முறைகளில் ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்யுங்கள்.

3) அமைப்புகளைப் பயன்படுத்தவும் என்ற பெட்டியைத் தெரிவு செய்யுங்கள்

4) இத்தேர்வு செய்த பின்னர் பக்கத்தில் அனைத்து பெட்டிகளிலும் நீங்கள் தமிழில் தட்டச்ச முடியும். தட்டச்சுக் கருவி தேர்வு செய்யப்பட்டிருப்பதின் அடையாளமாக, பெட்டிகள் நீலநிறத்தில் தோன்றும்.

5) இது குறித்த மேலதிக தொழில்நுட்ப தகவல்களுக்கு காண்க - விக்கிப்பீடியா:தமிழ்த் தட்டச்சுக் கருவி

பிற புற முறைகள்

  • விண்டோசு விசுடா மற்றும் விண்டோசு 7 இயக்குதளம் கொண்ட கணினிகளில் தமிழ் பரிந்துரைக்க தனியாக மென்பொருள் தேவையில்லை. Control Panel > Regional Language Options > Keyboards and Languages க்குச்சென்று Change Keyboards ஐ அழுத்தவும். வெளிப்படும் Text Services and Input Languages என்ற திரையில் General > Add > Tamil (India) > Keyboard > Tamil ஐத் தேர்வு செய்க. OK செய்தவுடன் Default Input Language ல் தமிழ் தென்படும். தெரிவு செய்து தமிழில் தட்டச்சு செய்யலாம். Language Bar ல் தமிழின் குறியீடு 'TA' ஆகும். Alt + Left Shift செய்து ஆங்கிலம் அல்லது தமிழுக்கு மாறலாம்.
  • மேக்க்கின்டாச் கணினிகளில் (Mac OS X 10.4 முதல்) தமிழ் பரிந்துரைக்க தனியாக மென்பொருள் தேவையில்லை. System Preferences > International > Input Methods க்குச்சென்று Tamil Input Method ஐத் தேர்வு செய்க.

[தொடர்பிழந்த இணைப்பு] என்ற நீட்சியை பயர்பாக்ஸ் உலாவியில் நிறுவி தமிழில் தட்டச்சு செய்யலாம். இது, எ-கலப்பை நிறுவ இயலாத லினக்ஸ் இயங்குதளங்களில், பயர்பாக்ஸ் உதவியுடன் இணையத்தளங்களில் தமிழில் தட்டச்சு செய்ய உதவும்.

  • தமிழ்த் தட்டச்சுக்குப் புதியவர்கள் தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொண்டுள்ள தமிழ்99 விசைப்பலகை உருவரையை பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது. இது பழகுவதற்கு எளியது; விரைவில் தட்டச்சு செய்ய உதவும்; நீண்ட நேரம் எழுதும்போது அயர்ச்சியடையாமல் இருக்க இது உதவும்.
  • முரசு அஞ்சல் ( முரசு அஞ்சல் பழைய பக்கம்) போன்ற மென்பொருட்களையும் பயன்படுத்தலாம். இந்த மென்பொருளை உங்கள் கணினியில் ஏற்றிய பிறகு Unicode (UTF8) Encoding -ஐப் பயன்படுத்தி நீங்கள் விக்கிப்பீடியாவின் 'தொகுத்தல்' பக்கங்களில் நேரடியாகத் தமிழ் எழுத்துகளைப் பதிவு செய்யலாம்.
  • ஆல்தமிழ் இந்திய எழுத்து மாற்றியைப் பயன் படுத்தி அங்கு தட்டச்சு செய்த பின் அதை வெட்டி இந்தத் தளத்தில் ஒட்டலாம்.
  • மைக்ரோசாப்டின் பாஷை இந்தியாவில் தமிழ் மொழி பதிவிறக்கத்தில் தமிழ் 99 தட்டச்சு பலகையும், அஞ்சல் திட்டம் (ஆங்கிலத்தில் இருந்து தமிழ் மொழிக்கு) எழுத்து மாற்ற (transliteration) கருவியும் உண்டு. இதை பதிவிறக்கம் இல்லாமல் உலாவி வழியாகவும் பயன் படுத்தலாம். மைக்ரோசாப்டின் எழுத்து மாற்றியினையும் பயன்படுத்தலாம். இதில் உங்கள் கணினிக்கு இறக்கம் செய்து நேராக இந்த பெட்டியிலேயே தட்டச்சு செய்து கொள்ளும் வசதியும் உள்ளது.
  • உங்களது கணினியில் விசைப்பலகை செலுத்துவானை (Keyboard Driver) நிறுவ முடியாத சந்தர்ப்பங்களில், உங்களுக்கு தமிழ் ஒருங்குறியில் தட்டெழுத்திட w3Tamil உதவி புரிகிறது. இங்குள்ள எழுதியில் தட்டச்சிட்ட பின்பு அதனைப் பிரதிசெய்து நீங்கள் வேண்டிய இடத்தில் ஒட்டலாம். இந்த எழுதியில் உங்களது கணினியின் விசைப்பலகையை உபயோகித்தோ அல்லது w3Tamil இணைய விசைப்பலகையினை உபயோகித்து சுட்டி உதவியுடன் கிளிக் செய்வதனூடகவோ தட்டச்சிட முடியும் என்பது இதன் சிறப்பம்சமாகும். இதனை தமிழ்99 விசைப்பலகை பயிற்சிக்காகவும் பயன்படுத்த முடியும்.
  • தமிழ் நண்பர்கள் தட்டச்சு என்ற தமிழ் எழுத்து மாற்றியை பயன் படுத்தலாம். அங்கு தட்டச்சு செய்த பின் அதை வெட்டி இந்த தளத்தில் ஒட்டலாம். [Supports Tamil Thanglish, Tamil99, Tamil typewriter]
  • கிளிக்-எழுதி, இதை உபயோகிப்பதற்கு தமிழ் தட்டெழுத்துத் தட்டு தேவையில்லை, வின்டோசிலோ லிநூக்சிலோ அல்லது மக்கின்டோசிலோ இயங்கக் கூடியது. மேலும் விபரங்களுக்கு கிளிக்கெழுதி
  • இந்த தளத்திற்குச் சென்று இங்குள்ள இடதுபுறக் கட்டத்தில் ஆங்கில எழுத்துக்களைத் தட்டச்சு செய்து வலது புறத்தில் தமிழ் எழுத்துக்களைப் பெற்று இங்கிருப்பதை அப்படியே பிரதி செய்து அல்லது வெட்டி ஒட்டலாம்.

இதையும் பார்க்க

வெளியிணைப்புக்கள்