வா மக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வா மக்கள் (Wa people) என்பவர்கள் வடக்கு மியான்மர் மற்றும் சீனாவில் வாழ்கின்ற ஓர் இனக்குழுவினர் ஆவர். இவர்கள் சீன மக்கள் குடியரசால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட 56 இனக்குழுக்களில் ஓர் இனக்குழுவினர் ஆவர். இவர்கள் சீனாவில் ஷான் மாநிலத்தின் வடக்குப் பகுதி மற்றும் கச்சின் மாநிலத்தின் கிழக்குப் பகுதி மற்றும் யுனான் மாகாணத்திலும் வாழ்கின்றனர்.

வரலாற்று ரீதியாக இந்த மக்கள் பழங்காலத்திலிருந்தே வா மாநிலங்களில் வசித்து வந்ததாகவும், அது தங்கள் மூதாதையர் நிலம் என்றும் உரிமை கோருகின்றனர். இந்த வா மாநில பகுதியானது மீகாங் மற்றும் சல்வீன் நதிக்கு இடையில் அமைந்துள்ள கரடுமுரடான, மலைப்பகுதியாகும்.[1] வா மக்கள் பாரம்பரியமாக நெல், பட்டாணி, பீன்ஸ், பாப்பி மற்றும் அக்ரூட் பருப்புகள் போன்றவற்றை பயிரிட்டனர். இவர்கள் பெரும்பாலும் நீர் எருமைகளை வளர்க்கிறார்கள், அவை முக்கியமாக பலியிடும் நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்டன.[2] பொதுவாக, வா மக்களின் பாரம்பரிய பழக்கவழக்கங்களும், வாழ்க்கை முறையும், வடமேற்கில் உள்ள நாகா மக்களின் பழக்கவழக்கங்களுடன் மிகவும் ஒத்திருக்கிறது.[3] வா மக்கள் மோன்-கெமர் மொழிகளின் ஒரு பகுதியாக இருக்கும் வா மொழியைப் பேசுகிறார்கள்.

வா மக்கள் பெரும்பாலும் பாரம்பரிய மதத்தை கடைபிடிக்கின்றனர். ஒரு சிறிய பகுதியினர் பௌத்தம் அல்லது கிறித்துவம் ஆகிய இரண்டின் வழித்தோன்றலைப் பின்பற்றுகின்றனர்.

வரலாறு[தொகு]

பூர்வீகக் கதைகளில் வா மக்களின் மூதாதையர்கள் யா ஹதாவ்ம் மற்றும் யா ஹதாயி ஆவர். அவர்கள் சீனாவிற்கும் மியான்மருக்கும் இடையிலான எல்லைப் பகுதியில் வடகிழக்கு வா பிரதேசத்தில் அமைந்துள்ள நாவ்ங் ஹகேவ் எனப்படும் ஒரு சிறிய ஏரியில் தலைப்பிரட்டைகளாக பிறந்தனர்.[4]

வா மக்களின் ஆரம்பகால வரலாறு பற்றி மிகக் குறைவாகவே அறியப்படுகிறது. அதிலும் அறியப்பட்டவை பெரும்பாலும் உள்ளூர் புனைவுகளால் ஆனது. முன்னாள் கெங்டுங் மாநிலத்தின் பகுதியில் 1229 வாக்கில் வா மக்கள் இடம்பெயர்ந்து குடியேறிய பின்னர் மங்ராய் மன்னரால் தோற்கடிக்கப்பட்டனர் என்று குறிப்பிடப்படுகின்றது. பர்மாவில் பிரிபர்மாவில் பிரித்தானிய ஆட்சியின் போது, கெங்டுங் மாநிலத்தில் ஷான் மக்கள் பெரும்பான்மையாக இருந்தனர், அகா மற்றும் லாஹு போன்ற பிற குழு மக்களும் கணிசமாக இருந்தனர். பூர்வீகக் குடிமக்களாக இருந்த போதிலும், வா மக்கள் இப்போது கெங்டங் மாவட்டத்தில் பத்து சதவிகிதத்திற்கும் குறைவாக மட்டுமே உள்ளனர்.[5]

வா மக்களின் பழங்கால மதம் இரத்த தியாகங்களை மையமாகக் கொண்ட நம்பிக்கைகளைக் கொண்டிருந்தது.[6] கிராமங்களில் நோய் அல்லது பிற பிரச்சனைகளை கையாள்வதற்கான பாரம்பரிய வழியாக ஒரு கோழி, ஒரு பன்றி அல்லது ஒரு பெரிய விலங்கு பலியிடப்பட்டது பலியிடப்பட்டது. உள்ளூர் புராணத்தின் படி, நெல் வயல்களின் வளத்தை மேம்படுத்துவதற்காக மனித தலையை வெட்டுவது ஒரு தியாகமாக கருதப்பட்டது. பாரம்பரிய கிராமங்களில் சன்னதிகளில்  ஒவ்வொரு ஆண்டும் ஒரு எருமை பலியிடப்பட்டது. கூடுதலாக. பாரம்பரிய ஆவி வழிபாடு இன்னும் நடைமுறையில் உள்ளது மற்றும் விலங்குகள் திருமணம் மற்றும் இறுதி சடங்குகள் போன்ற விழாக்களின் போது பலியிடப்பட்டன.[7]

பாரம்பரிய வா சமுதாயத்தில் ஒருதுணை மணம் என்பது வழக்கமாக இருந்தது மற்றும் திருமணத்திற்கு முன்பு ஆண்களுக்கும் பெண்களுக்கும் பாலியல் சுதந்திரம் இருந்தது. பாக்கு வெற்றிலையை மெல்லுவதும் முன்பு ஒரு முக்கியமான பழக்கமாக இருந்தது.[8] வா மக்கள் பல்வேறு வகையான பாரம்பரிய நடனங்களைக் கொண்டுள்ளனர். இவர்களின் கலாச்சாரத்தில் ஒரு முக்கியமான நடனம் முடி நடனமாகும். [9][10][11] இந்த நடனம் சீனாவில் உள்ள யுனான் சுற்றுலா அதிகாரிகளால் ஒரு சுற்றுலா அம்சமாக ஊக்குவிக்கப்படுகிறது.[12]

மேற்கோள்கள்[தொகு]

  1. Fiskesjö, Magnus (15 June 2010). "Mining, history, and the anti-state Wa: the politics of autonomy between Burma and China". Journal of Global History 5 (2): 241-243. https://doi.org/10.1017/S1740022810000070. 
  2. The Imperial gazetteer of India
  3. "M. Fiskesjo, On the Ethnoarchaeology of Fortified Settlements in the Northern part of Mainland Southeast Asia" (PDF). Archived from the original (PDF) on 2014-10-14. பார்க்கப்பட்ட நாள் 2014-10-10.
  4. Scott, James George, Sir. 1935. The Wa or Lawa: Head-Hunters. In Burma and Beyond. p. 292
  5. Donald M. Seekins, Historical Dictionary of Burma (Myanmar), p. 251
  6. ""Headhunting days are over for Myanmar's "Wild Wa"", Reuters, Sep 10, 2007.". Reuters. 10 September 2007 இம் மூலத்தில் இருந்து May 27, 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180527013150/https://www.reuters.com/article/idUSBKK83023. 
  7. Interview with Sara Yaw Shu (Joshua) Chin, co-inventor of the Wa alphabet and long-time Wa Baptist Church leader, 27 February 2006
  8. "The Va ethnic minority (People's Daily)". Archived from the original on 2014-04-23. பார்க்கப்பட்ட நாள் 2014-04-21.
  9. "6 Days Cangyuan Wa Ethnic Minority Monihei Carnival". Archived from the original on 2014-04-23. பார்க்கப்பட்ட நாள் 2014-04-21.
  10. "Folk dancing of Va ethnic group attracts tourists in SW China (Xinhua)". Archived from the original on 2013-11-12. பார்க்கப்பட்ட நாள் 2014-04-21.
  11. "Grawng klieh yam lih khaing sigien rang, sigang lih dix". YouTube. Archived from the original on 2016-12-29. பார்க்கப்பட்ட நாள் 2016-12-02.
  12. "The Wa Ethnic Scenic Region in Ximeng Autonomous County". Archived from the original on 2017-12-22. பார்க்கப்பட்ட நாள் 2017-12-19.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வா_மக்கள்&oldid=3900108" இலிருந்து மீள்விக்கப்பட்டது