வாள் அலகு ஓசனிச்சிட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வாள் அலகு ஓசனிச்சிட்டு
Sword-billed Hummingbird - Ecuador S4E4619.jpg
வாள் அலகு ஓசனிச்சிட்டு
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: அபோடிபார்மஸ்
குடும்பம்: ஓசனிச்சிட்டு
பேரினம்: Ensifera
Lesson, 1843
இனம்: E. ensifera
இருசொற் பெயரீடு
Ensifera ensifera
(Boissonneau, 1840)

வாள் அலகு ஓசனிச்சிட்டு (sword-billed hummingbird, Ensifera ensifera) என்பது தென் அமெரிக்காவில் காணபபடும் ஓர் ஓசனிச்சிட்டு இனமாகும். இவை உயர் நில அமைப்பில் (2500 மீட்டருக்கு மேல்) பொலிவியா, கொலொம்பியா, எக்குவடோர், பெரு, வெனிசுவேலா ஆகிய இடங்களில் காணப்படுகின்றன.

விபரம்[தொகு]

ஓசனிச்சிட்டு பறவைகளில் அதன் உடலைவிட நீளமான அலகைக் கொண்டு காணப்படும் ஒரே பறவை இனமாக இது காணப்படுகின்றது. இதன் மூலம் நீளமான பூவிதழ் உடைய பூக்களில் உணவை உட்கொள்ள இதனால் முடிகிறது. ஆகவே இதனுடைய நாக்கும் நீண்டு காணப்படுகின்றது.

உசாத்துணை[தொகு]

  1. பன்னாட்டு பறவை வாழ்க்கை (2012). "Ensifera ensifera". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 26 November 2013 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]