வலைவாசல் பேச்சு:விக்கிப்பீடியா கட்டுரைப் போட்டி/தலைப்புகள் பட்டியல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

போன்ற பக்கங்களில் இருந்து சிகப்பு வண்ணத் தலைப்புகளை இந்தப் பக்கத்தில் சேர்க்க வேண்டும். ஆங்கில விக்கிப் பகுப்புகளில் துழாவி இன்னும் கூடுதல் தலைப்புகளையும் சேர்க்க வேண்டும்--ரவி 18:25, 6 மார்ச் 2010 (UTC)

தமிழில் தலைப்பு[தொகு]

நான் குறிப்பிட்டுள்ள தலைப்புகளுக்கு இணையான (சரியான) தமிழ் சொல் எனக்கு தெரியவில்லை :( வேறு எவருக்கேனும் சரியான தமிழ் சொல் தெரிந்தால் அதை மொழி பெயர்த்து ஆங்கில சொல்லை நீக்கிவிடலாம்.--கார்த்திக் 08:34, 7 மார்ச் 2010 (UTC)

தமிழில் தந்துள்ள சொற்களுக்கு இணையான ஆங்கிலச் சொற்களை அடைப்புக்குறிக்குள் தருதல் நல்லது. இணையான தமிழ்ச் சொற்கள் தெரியாவிட்டால் பரவாயில்லை. போட்டியாளர்கள் அதற்கேற்ற தமிழ்ச் சொற்களைத் தாங்களே கண்டுபிடித்து எழுத விடலாம். நான் சில சொற்களுக்கு ஆங்கில விக்கிக் கட்டுரைகளுக்கு இணைப்புக் கொடுத்திருக்கிறேன். இது தேவை இல்லாவிட்டால் நீக்கி விடலாம்.--Kanags \உரையாடு 09:46, 7 மார்ச் 2010 (UTC)

பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவை[தொகு]

ஊர்-நகரம் பற்றிய கட்டுரைகள்[தொகு]

முன்பு கணேசு அவர்கள் ஊர்கள் பற்றித் தானியங்கி வழியாக உருவாக்கிய கட்டுரைகளில் விடுபட்ட தமிழ்நாடு மற்றும் இந்திய ஊர்களைப் பற்றிக் கட்டுரைகள் எழுதப் பரிந்துரைக்கலாம். எவை விடுபட்டுள்ளன என்று எப்படித் தெரிந்து கொள்வது. சுந்தருக்குத் தெரியுமா ? --செல்வா 03:59, 9 மார்ச் 2010 (UTC)

பட்டுப்புழு வளர்ப்பு[தொகு]

வேளாண் தொழில்கள் பகுதியிலிருந்து, ‘பட்டுப்புழு வளர்ப்பு' என்ற கட்டுரைத் தலைப்பு நீக்கப்பட்டுள்ளது என நினைக்கிறேன். அந்தத் தலைப்பில் தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரை எதுவும் ஏற்கனவே இல்லையென நினைக்கிறேன். அப்படியானால், அந்த தலைப்பு தவறுதலாக நீக்கப்பட்டதா? தவறுதலாக நீக்கப்பட்டிருப்பின் மீண்டும் அங்கே இணைக்கலாமா? அல்லது வேறு பெயரில் அந்தக் கட்டுரை உள்ளதா? --கலை 23:15, 15 ஏப்ரல் 2010 (UTC)

பார்க்க: பட்டுப்புழு வளர்ப்பு.--Kanags \உரையாடுக 23:24, 15 ஏப்ரல் 2010 (UTC)
நேற்று நான் இந்த தலைப்பை கொடுத்து தேடியபோது, கட்டுரை சிக்கவில்லை. அதனால்தான் இங்கே கேட்டிருந்தேன். எழுத்துப் பிழை ஏதாவது விட்டுவிட்டேனா தெரியவில்லை. நன்றி Kangs!. --கலை 07:59, 16 ஏப்ரல் 2010 (UTC)
தேடலுக்கான உள்ளடக்கக் குறிப்புத்தொகுதி(?) (index) உடனுக்குடன் இற்றைப்படுத்தப்படுவதில்லை. அதனால் ஒரு கட்டுரையை ஆக்கியதும், தேடல் பெட்டியில் தட்டினால் அதன் பெயர் வருவதில்லை. ஆனால் கட்டுரையை உருவாக்க முனைந்தால் ஏற்கனவே கட்டுரை இருப்பது தென்படும். -- சுந்தர் \பேச்சு 10:38, 16 ஏப்ரல் 2010 (UTC)
இதை இன்மேல் கவனத்தில் கொள்கின்றேன். நன்றி சுந்தர். --கலை 11:11, 16 ஏப்ரல் 2010 (UTC)