வலைவாசல்:இஸ்லாம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இஸ்லாம் வலைவாசல்
.
Masjid al-Haram panorama.JPG


அறிமுகம்

Basmalah-1wm.png

இஸ்லாம் என்பது ஒரிறைக் கொள்கையை கொண்ட ஒரு ஆபிரகாமிய மதமாகும். இது இறைவனால் முகம்மது நபிக்கு சொல்லப்பட்டதாக கூறப்படும் செய்திகளின் தொகுப்பான குர் ஆன் எனப்படும் வேதத்தின் அடிப்படையில் இயங்குகின்றது. மனிதனின் மரணத்துக்கு பிறகான மறுமை வாழ்வை இது குறிக்கோளாக கொண்டது. இறைவனை நம்புவது, அவனது கட்டளைப்படி நடப்பது என்பதன் மூலம் முடிவற்ற மறுமை வாழ்வின் சுகங்களை பெற முடியும் என்பது இஸ்லாமிய நம்பிக்கை. இறை நம்பிக்கை, இறை வணக்கம், நோன்பு, கட்டாய பொருள்தானம், மக்காவை நோக்கிய புனிதப்பயணம் ஆகிய ஐந்தும் இஸ்லாமின் கட்டாயக் கடமைகளாகும்.ஏழாம் நூற்றாண்டில் முகம்மது நபியவர்கள் இந்த மார்க்கத்தை மக்கா நகரில் பரப்பத்தொடங்கினார். இவர் இறைவனின் தூதர் என்பது இஸ்லாமியர்களின் நம்பிக்கை. இஸ்லாமின் மூலமான குர்ஆன் இவரை முதல் மனிதர் ஆதாம் முதல் அனுப்பப்பட்டு வந்த இறை தூதர்களில் இறுதியானவராக அடையாளப்படுத்துகிறது.

உலகம் முழுவதும் 1.57 பில்லியன் மக்கள் இம்மதத்தை பின்பற்றுகிறார்கள். இது உலகின் மொத்த மக்கள்தொகையில் 23 சதவீதமாகும். இஸ்லாம், கிறித்தவத்துக்கு அடுத்தபடியாக உலகில் இரண்டாவது பெரிய மற்றும் அதி வேகமாக வளர்ந்து வரும் மதங்களில் ஒன்றாகும்.

சிறப்புக் கட்டுரைகள்

Makkahi mukarramah.jpg
மக்கா(அரபு மொழி: مكّة المكرمة) சவூதி அரேபியாவின் மக்கா மாகாணத்தில் வரலாற்றுப் பழமை வாய்ந்த ஹிஜாஸ் பகுதியில் அமைந்துள்ள இசுலாமியர்களது புனித நகரமாகும். இந்நகரம் ஜித்தா நகரில் இருந்து நாட்டுக்குள் 73 கிலோமீட்டர் (45 மைல்) தொலைவிலும், செங்கடலில் இருந்து 80 கி.மீ (50 மைல்) தொலைவிலும் குறுக்கமான பள்ளத்தாக்கு ஒன்றில் கடல் மட்டத்தில் இருந்து 277 மீட்டர் 910 அடி உயரத்தில் அமைந்துள்ளது. வரலாற்றில் இந்நகரம் பெக்கா எனவும் அழைக்கப்பட்டு வந்துள்ளது.நபிகள் நாயகம் அவர்கள் இந்நகரிலேயே பிறந்தார்கள், புனித அல்குர்ஆன் முதலில் இந்நகரிலேயே அருளப்பட்டது(குறித்த இடம் மக்கா நகரிலிருந்து 3.2 கிலோமீட்டர் தொலைவில் ஒரு குகையில் அமைந்துள்ளது). இந்நகரில் இசுலாமியரது மிகப்புனிதத் தலமான மஸ்ஜித் அல் ஹராம் (புனிதப் பள்ளிவாசல்) அமைந்துள்ளது. அரபு மாதங்களில் ஒன்றான துல்ஹஜ் மாதத்தின் போது இந்நகருக்கு புனிதப் பயணம் மேற்கொள்வது இசுலாமியரது ஐந்து கடமைகளில் ஒன்றாகும். வேற்று மதத்தைச் சேர்ந்தவர்கள் இந்நகருக்குள் உள்நுழைவது தடைச் செய்யப்பட்டுள்ளது. மக்கா புனித காபாவின்(Kaaba) வீடு, முஸ்லிம்களின் தொழுகை இத்திசையை நோக்கியே மேற்கொள்ளப்படுகின்றது.இங்கு பெரும்பாலான இஸ்லாமிய புனிதஸ்தலங்கள் காணப்படுகின்றன.இஸ்லாமிய நபர்கள்

Molana.jpg
ஜலால் அத்-தின் முகமது ரூமி (Jalāl ad-Dīn Muḥammad Rūmī, جلال‌الدین محمد رومی)என்றும் ஜலால் அத்-தின் முகமது பல்கி (Jalāl ad-Dīn Muḥammad Balkhī, பாரசீகம்: جلال‌الدین محمد بلخى ) என்றும் பரவலாக துருக்கியிலும் ஈரானிலும் ஆப்கானித்தானிலும் மௌலானா[4] (பாரசீகம்: مولانا) என்றும் ஆங்கிலம் பேசும் உலகில் ரூமி என்றும் அறியப்படுபவர் (30 செப்டம்பர் 1207 – 17 திசம்பர் 1273) பதின்மூன்றாவது நூற்றாண்டைச் சேர்ந்தவர்.கடந்த ஏழு நூற்றாண்டுகளாக ஈரானியர்கள், துருக்கியர்கள் ஆப்கானியர்கள், தஜக்கியர்கள் மற்றும் மத்திய ஆசியாவின் இஸ்லாமியர்கள் இவருடய ஆன்மீக வழிமுறையை போற்றிவருகிறார்கள். ரூமியின் முக்கியத்துவம் தேச மற்றும் இனங்களை கடந்து பரவியிருக்கிறது. இவரது கவிதைகள் உலகின் பலமொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு பல்வேறு வடிவமாற்றங்களை அடைந்துள்ளன. 2007ஆம் ஆண்டு இவர் அமெரிக்காவின் மிகவும் புகழ்பெற்ற கவிஞர் என்று அறிவிக்கப்பட்டார்.ரூமியின் படைப்புகள் அனைத்தும் பெர்சிய மொழியில் எழுதப்பட்டவை. இவரின் மானஸ்வி தூய்மையான பெர்சிய இலக்கிய பெருமையை கொண்டது. இது பெர்சிய மொழிக்கு பெரும் புகழ் சேர்ப்பதாக இருக்கிறது. இன்றளவும் இவரது படைப்புகளை பெருமளவு பெர்சியர்கள் பெர்சிய மொழியிலேயே படித்து வருகிறார்கள். (இரான், தஜகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆசியாவின் பெர்சிய மொழிபேசும் மக்கள்). இவரது படைப்புகளின் மொழிபெயர்ப்புகள் ஏனைய நாடுகளில் மிகுந்த புகழுக்குரியதாக இருக்கின்றன. இவரின் கவிதைகள் பெர்சிய, உருது, பஞ்சாபி மற்றும் துருக்கிய இலக்கியங்கள் தாக்கத்தை ஏற்படுத்யிருக்கின்றன

சிறப்புப் படம்

வலைவாசல்:இஸ்லாம்/சிறப்புப் படம்/0

பகுப்புகள்

சைவ சமய பகுப்புகள்

உங்களுக்குத் தெரியுமா?

தொடர்பானவை

வலைவாசல்:இஸ்லாம்/தொடர்பானவை
தொகு  

விக்கித்திட்டங்கள்

தொகு  

நீங்களும் பங்களிக்கலாம்


நீங்களும் பங்களிக்கலாம்
  • இசுலாம் தொடர்பான கட்டுரைகளில் {{வலைவாசல்|இசுலாம்}} வார்ப்புருவை இணைக்கலாம்.
  • இசுலாம் தொடர்பான புதிய கட்டுரைகளை உருவாக்கலாம்.
  • இசுலாம் தொடர்பான குறுங்கட்டுரைகளை மேம்படுத்தி உதவலாம்.
  • இசுலாம் தொடர்பான படிமங்களை பதிவேற்றலாம்.
  • இசுலாம் தேவைப்படும் கட்டுரைகள் பகுதியில் கோரப்பட்டுள்ள கட்டுரைகளை உருவாக்கலாம்.
தொகு  

தொடர்புடைய வலைவாசல்கள்

தொகு  

பிற விக்கிமீடிய திட்டங்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=வலைவாசல்:இஸ்லாம்&oldid=1677374" இருந்து மீள்விக்கப்பட்டது