கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இஸ்லாம் வலைவாசல்
.
அறிமுகம்
இஸ்லாம் என்பது ஒரிறைக் கொள்கையை கொண்ட ஒரு ஆபிரகாமிய மதமாகும். இது இறைவனால் முகம்மது நபிக்கு சொல்லப்பட்டதாக கூறப்படும் செய்திகளின் தொகுப்பான குர் ஆன் எனப்படும் வேதத்தின் அடிப்படையில் இயங்குகின்றது. மனிதனின் மரணத்துக்கு பிறகான மறுமை வாழ்வை இது குறிக்கோளாக கொண்டது. இறைவனை நம்புவது, அவனது கட்டளைப்படி நடப்பது என்பதன் மூலம் முடிவற்ற மறுமை வாழ்வின் சுகங்களை பெற முடியும் என்பது இஸ்லாமிய நம்பிக்கை. இறை நம்பிக்கை, இறை வணக்கம், நோன்பு, கட்டாய பொருள்தானம், மக்காவை நோக்கிய புனிதப்பயணம் ஆகிய ஐந்தும் இஸ்லாமின் கட்டாயக் கடமைகளாகும்.ஏழாம் நூற்றாண்டில் முகம்மது நபியவர்கள் இந்த மார்க்கத்தை மக்கா நகரில் பரப்பத்தொடங்கினார். இவர் இறைவனின் தூதர் என்பது இஸ்லாமியர்களின் நம்பிக்கை. இஸ்லாமின் மூலமான குர்ஆன் இவரை முதல் மனிதர் ஆதாம் முதல் அனுப்பப்பட்டு வந்த இறை தூதர்களில் இறுதியானவராக அடையாளப்படுத்துகிறது.
உலகம் முழுவதும் 1.57 பில்லியன் மக்கள் இம்மதத்தை பின்பற்றுகிறார்கள். இது உலகின் மொத்த மக்கள்தொகையில் 23 சதவீதமாகும். இஸ்லாம், கிறித்தவத்துக்கு அடுத்தபடியாக உலகில் இரண்டாவது பெரிய மற்றும் அதி வேகமாக வளர்ந்து வரும் மதங்களில் ஒன்றாகும்.
முகம்மது நபிகி.பி. 570இல் சவூதி அரேபியாவைச் சார்ந்த மக்கா நகரில் பிறந்தார். இவரது தந்தை அப்துல்லாஹ் மற்றும் தாயார் ஆமினா ஆவார்கள். சிறு வயதிலேயே பெற்றோர்களை இழந்து பாட்டனார் அபூ தாலிபிடம் வளர்ந்து வந்தார். இவரது 40 வது வயதில் நபித்துவம் பெற்று இறை தூதுகள் கிடைக்கத் துவங்கின. அதன் பின்னர் அவர்கள் வாழ்ந்த மிகக் குறுகிய காலமாகிய 23 ஆண்டுகளிலேயே மனித வாழ்வில் வியத்தகு மாற்றங்களை நிகழ்த்திகாட்டினார்கள். இவரைப்பற்றி பிரிட்டானிகா கலைகளஞ்சியம் 'மதத்தலைவர்களில் தலை சிறந்த வெற்றியாளர்' என்று கூறுகிறது.
“
உலகில் செல்வாக்கு மிகுந்தவர்களின் பட்டியலில் முதன்மையானவராக, முகம்மதை நான் தெரிவு செய்தது சில வாசகர்களுக்கு வியப்பையும், வினாவையும் எழுப்பலாம். சமயஞ் சார்ந்த மற்றும் சமயச்சார்பற்ற வட்டத்தில் மாபெரும் வெற்றி பெற்றவர் மனித சரித்திரத்தில் அவர் ஒருவரே.
”
எம்.எச்.ஹார்ட், வரலாற்றில் செல்வாக்குள்ள 100 பேர்(The 100! A ranking of the most influential persons in history)
இப்னு பதூதா (Ibn Battuta-1304) என்றழைக்கப்படும் அபு அப்துல்லா முகமது இபின் பதூதா மொரோக்கோ நாட்டைச் சேர்ந்த கல்வியாளரும் ஒரு நாடுகாண் பயணியும் ஆவார். ரிகிலா எனப்படும் இவரது பயணங்களைப் பற்றிய விபரங்கள் பெயர்பெற்றவை. இவரது பயணங்கள் ஏறத்தாழ 30 ஆண்டுகள் நீடித்ததுடன், அறியப்பட்ட இசுலாமிய உலகம் முழுவதையும், அதற்கும் அப்பாலுள்ள நாடுகளையும் உள்ளடக்கி இருந்தன.இவர் வடக்கு ஆப்பிரிக்கா, மேற்கு ஆப்பிரிக்கா, தெற்கு ஐரோப்பா. கிழக்கு ஐரோப்பா, மையக் கிழக்கு, இந்தியத் துணைக் கண்டம், நடு ஆசியா, தென்கிழக்கு ஆசியா, சீனா ஆகிய நான்கு திசைகளிலும் பரந்திருந்த பகுதிகளூடாகப் பயணம் செய்துள்ளார். இவர் கடந்த தூரம் இவருக்கும் முன் பயணம் செய்தவர்களும், இவரது கிட்டிய சமகாலத்தவரான மார்க்கோ போலோவும் கடந்த தூரங்களைக் காட்டிலும் நான்கு மடங்கு அதிகமானது. இவர் 44 நாடுகள் 11000 நாட்கள், 75,000 மைல்கள் நீண்ட பயணம் செய்துள்ளார். தான் சென்ற நாடுகளைப் பற்றியும் துல்லியமாக தனது நினைவுகளைத் துல்லியமாகப் பதிவு செய்திருக்கிறார்.மொராக்காவில் உள்ள டேன்ஜீர் என்ற சிறிய நகரத்தில் 1304 ஆம் ஆண்டில் ஒரு நீதிபதியின் மகனாகப் பிறந்தவர் இபின் பதூதா. சிறு வயதிலேயே மதக் கல்வியும் அரபி இலக்கணமும் பயின்றார். இஸ்லாமிய நெறிகளில் தீவிர ஈடுபாடு கொண்டிருந்த குடும்பம் என்பதால் அவரது கனவம் முழுமையும் இறையியல் மீதாகவே உருவானது. தனது 20 ஆம் அகவையில் இபின் பதூதா மெக்காவிற்குப் புனிதப் பயணம் துவங்கினார். புனிதக் கடமைகளை நிறைவேற்றுவதற்காகத் துவங்கிய இந்தப் பயணமே அவரை உலக நாடுகளுக்கு இட்டுச் சென்றது.