வர்தா ஆறு
வர்தா | |
---|---|
வர்தா ஆறு புல்கானில் | |
அமைவு | |
நாடு | இந்தியா |
சிறப்புக்கூறுகள் | |
மூலம் | |
⁃ அமைவு | முள்தாய் |
முகத்துவாரம் | |
⁃ அமைவு | பிராணஹிதா ஆறு |
நீளம் | 528 km (328 mi) |
வடிநில சிறப்புக்கூறுகள் | |
பாயும் வழி | மத்தியப் பிரதேசம், மகராட்டிரம், தெலங்காணா |
துணை ஆறுகள் | |
⁃ இடது | கார் ஆறு, வெண்ணா ஆறு, ஜாம் ஆறு, எரை ஆறு |
⁃ வலது | மது ஆறு, பெம்ப்ளா ஆறு, பாணிகங்கா ஆறு |
வர்தா ஆறு (வரதா ஆறு, இந்தியாவின் மகாராஷ்டிராவின் விதர்பா பகுதியில் உள்ள முக்கிய ஆறாகும். இது வைன்கங்கா ஆறுடன் கட்சிரோலி மாவட்டத்தில் சப்ராலாவில் இணைந்து பிராணஹிதா ஆற்றினை உருவாக்குகிறது. இறுதியில் இது கோதாவரியுடன் சங்கமிக்கிறது.[1]
தோற்றம்
[தொகு]சுமார் 777 மீட்டர் உயரத்தில் சாத்பூரா மலைத்தொடரில் மத்தியப் பிரதேசத்தின் பேதுல் மாவட்டத்தில் முள்தாய் தெகசில் உள்ள கைர்வாணி கிராமத்தில் தோன்றுகிறது.
பயணம்
[தொகு]மத்தியப் பிரதேசத்தில் 32 கி.மீ. பயணம் செய்யும் இந்த ஆறு, மகாராஷ்டிராவில் நுழைகிறது.இங்கு 528 கி.மீ. பயணத்திற்குப்பின் வைன்கங்கா ஆறுடன் இணைந்து பிராணஹிதா ஆறாக மாறி இறுதியில் கோதாவரியில் கலக்கிறது.
துணை நதிகள்
[தொகு]கார் ஆறு, வீணா ஆறு, ஜாம் நதி, எராய் நதி ஆகியவை இடது புறமாகச் செல்லும் துணை நதிகள்.
மடு, பெம்ப்லா, பெங்காங்கா ஆகியவை வலதுபுறமாகடச் செல்லும் துணை நதிகள்.
அணைகள்
[தொகு]வர்தா மேலணை மோர்ஷி அருகே வர்தா நதியில் கட்டப்பட்டுள்ளது. இது அமராவதி மற்றும் மோர்ஷி மற்றும் வாரூத் வட்ட நகரங்களின் உயிர்நாடியாகக் கருதப்படுகிறது. [2]
வர்தா கீழணை அமராவதி மாவட்டத்தில் வாருத் பகாஜி கிராமம் மற்றும் தனோடி கிராமத்திற்கு அருகில் கட்டப்பட்டுள்ளது. இது வர்தா மாவட்டத்தின் நீர் ஆதாரமாக உள்ளது.
யவத்மால் மாவட்டத்தில் பாபுல்கானுக்கு அருகே பெம்பலா ஆற்றில் ஒரு அணை கட்டப்பட்டுள்ளது. இது யவத்மால் மாவட்டத்தின் உயிர்நாடியாகக் கருதப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Topographic map "Sirpur, India, NE-44-02, 1:250,000" Series U502, US Army Map Service, July 1963
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-05-22. பார்க்கப்பட்ட நாள் 2021-02-02.