உள்ளடக்கத்துக்குச் செல்

வரிச்சூரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Katsuwonus|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}
வரிச்சூரை
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): Katsuwonus
இனம்:
இருசொற் பெயரீடு
Katsuwonus pelamis
(லின்னேயஸ், 1758)
வேறு பெயர்கள்
  • Euthynnus pelamis (Linnaeus, 1758)
  • Katsuwonus vagans (Lesson, 1829)
  • Scomber pelamys Linnaeus, 1758
  • Scomber pelamis Linnaeus, 1758
  • Thynnus vagans Lesson, 1829

வரிச்சூரை (Skipjack tuna) என்பது ஸ்கோம்பிரிடே வகுப்பைச் சேர்ந்த, சூரை குடும்பத்தில் உள்ள ஒரு நடுத்தர அளவிலான பேர்சிஃபார்மீசு மீன் ஆகும். இது ஒரு மீட்டர் (3 அடி) நீளம் வரை வளரும். இது வெப்பமண்டல மற்றும் வெதுவெதுப்பான நீரில் உலகம் முழுவதும் காணப்படும் மீன் ஆகும். மீன்வளத்தில் இது மிகவும் முக்கியமான மீன் இனமாகும். [2]

விளக்கம்

[தொகு]
கூட்ட மீன்களில் வரிச்சூரை மீன்கள்

இது தடையில்லாமல், வேகமாக நீந்தும் கடற்பரப்பு மீன் ஆகும். இது உலகம் முழுவதும் வெப்பமண்டல கடல் நீரில் பொதுவாக காணப்படுகிறது. இது இரவில் கடல் மேற்பரப்பில் திரியும், பகலில் 850 அடி ஆழம்வரை செல்லும். கரையோரமாகவும் இது வந்து செல்லும். இது கடலின் மேற்பரப்பு நீரில் பெரிய கூட்ட மீன்களாக (50,000 மீன்கள் வரை) வாழ்கிறது. இது மீன்கள், ஓடுடைய கணுக்காலிகள், தலைக்காலிகள், மெல்லுடலிகள் போன்றவற்றை உணவாக கொள்கிறது. இது சுறாக்கள் மற்றும் பெரிய கடற்பரப்பு மீன்களுக்கு ஒரு முக்கிய இரை மீன் இனமாகும். மேலும் இது கொப்பக்குல்லாக்களை மீன்பிடிக்க தூண்டில் மீனாக பயன்படுத்தப்படுகிறது. இதன் உடலின் பக்கவாட்டில் கீழ்புரத்தில் நீன்கு முதல் ஏழு வரிகள் இருக்கும். இதன் உடலில் செதில்கள் இல்லை. கருநீல முதுகும், வெள்ளி நிற பக்கங்களும் கொண்டது. இது பொதுவாக 80 cm (31 அங்) நீளம் வரையும், 8–10 kg (18–22 lb) எடை வரை அடையும். அதிகபட்சமாக 108 cm (43 அங்) நீளம் வரையும், 34.5 kg (76 lb) எடை வரை எட்டும். இதன் ஆயுட்காலம் 8 முதல் 12 ஆண்டுகள் வரை ஆகும். [2]

வரிச்சூரை மீன்கள் ஒரு சினை மீன் தொகுதி ஆகும். இவை பூமத்திய ரேகை நீரில் ஆண்டு முழுவதும் முட்டியிடுகின்றன. ஆனால் அது பூமத்திய ரேகைக்கு அப்பால் பருவகாலங்கலில் மட்டும முட்டையிடுகிறது. இவை 45 cm (18 அங்) அடையும்போது முதலில் முட்டையிடத் துவங்குகிறது. இவை அதன் வலுவான வாசனைக்காகவும் அறியப்படுகிறது.

வரிச்சைரைகள் அனைத்து விலங்குகளைவிட மிகுதியான எலும்பு தசையைக் கொண்டுள்ளது. அது மீனின் மொத்த உடல் நிறையில் 68 % உள்ளது. [3] [4]

குறிப்புகள்

[தொகு]
  1. Collette, B.; Acero, A.; Amorim, A.F. et al. (2011). "Katsuwonus pelamis". செம்பட்டியல் 2011: e.T170310A6739812. doi:10.2305/IUCN.UK.2011-2.RLTS.T170310A6739812.en. 
  2. 2.0 2.1 Collette, Bruce B.; Cornelia E. Nauen (1983). FAO species catalogue. Vol. 2. Scombrids of the world. An annotated and illustrated catalogue of tunas, mackerels, bonitos and other related species known to date (PDF). FAO Fisheries Synopsis. Rome: Food and Agriculture Organization of the United Nations. p. 137.
  3. Calder, William A. (1996). Size, Function, and Life History (in ஆங்கிலம்). Courier Corporation. p. 19. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-486-69191-6.
  4. Bone, Q. (1978). Locomotor muscle (in ஆங்கிலம்). Academic Press. p. 362. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-08-058527-7.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வரிச்சூரை&oldid=3309742" இலிருந்து மீள்விக்கப்பட்டது