வரிக்குதிரை அயிரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வரிக்குதிரை அயிரை
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
சிப்ரினிபார்மிசு
குடும்பம்:
போதிடே
பேரினம்:
போதிய
இனம்:
போ. இசுட்ரையேட்டா
இருசொற் பெயரீடு
போதிய இசுட்ரையேட்டா
சி. ஆர். நாராயண் ராவ், 1920

வரிக்குதிரை அயிரை மீன் (Zebra loach)(போதிய இசுட்ரையேட்டா) என்பது இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள ஆறுகள் மற்றும் நீரோடைகளில் மட்டுமே காணப்படும் நன்னீர் மீன் ஆகும்.[2][3]

விளக்கம்[தொகு]

வரிக்குதிரை அயிரை மீன் அதிகபட்ச அளவு சுமார் 9 cm (3.5 அங்) நீளம் வரை வளரக்கூடியது ஆகும்.[4][5] இது 21–26 °C (70–79 °F) வெப்பநிலை உள்ள நீர் நிலைகளில் வெப்பமண்டல காலநிலையில் வாழ்கிறது. கார அமிலத் தன்மை 6.0 முதல் 7.5 உள்ள தண்ணீரை விரும்புகிறது.[4]

வரிக்குதிரை அயிரை மீன் சமூக மீன் தொட்டிகளுக்கு ஏற்ற அமைதியான மீன். இருப்பினும், அடிமட்ட ஊட்டிகளாக இருப்பதால், இவை மற்ற சிறிய அடிமட்ட ஊட்டிகளுக்கு எதிராகச் செயல்படலாம். எனவே, சிறிய அடிமட்ட உணவினை உண்ணும் மீன்களை இதனுடன் வளர்க்க இயலாது. இதனுடைய எண்ணிக்கையினை ஐந்திற்கும் குறைவாக வளர்த்து, இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காணலாம். இவற்றின் எண்ணிக்கை குறைவாக இருந்தால் இவை, பகல் நேரங்களில் மறைவுகளில் ஒளிந்து கொள்ளும். போ. இசுட்ரையேட்டா பல்வேறு வகையான மீன் உணவுகளை ஏற்றுக்கொள்கிறது. இதில் கரும் புழுக்கள், நத்தைகள் மற்றும் சிறிய இறால் போன்ற நேரடி உணவுகள்களும் மற்றும் வணிக ரீதியாகக் கிடைக்கும் மூழ்கும் மீன் உணவுகளும் அடங்கும்.

பாதுகாப்பு[தொகு]

பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் கூற்றுப்படி, வரிக்குதிரை அயிரை மீன் தற்போது சிறிய பூர்வீக வரம்புடன் இணைந்து காணப்படுகிறது. இந்த வாழிடமும், வாழ்விட மாற்றம் காரணமாக அழிந்து வருகிறது.[1] வரிக்குதிரை அயிரை மீன் வைத்திருப்பதில் ஆர்வமுள்ள மீன்வள ஆர்வலர்கள், உள்நாட்டில் கிடைக்கும் மீன்களின் ஆதாரத்தை ஆராயவும், நீர் காட்சி சாலைகளில் உள்ள மீன்களை மட்டுமே வாங்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். வளரிடத்தில் மீன் பெருக்க முறைகுறித்து அதிகம் அறியப்படவில்லை. ஆனால் இயக்குநீரைப் பயன்படுத்தி வணிக அடிப்படையில் இந்த மீன்கள் வளர்க்கப்படுகின்றன.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Dahanukar, N. (2011). "Botia striata". IUCN Red List of Threatened Species 2011: e.T168591A6521075. doi:10.2305/IUCN.UK.2011-1.RLTS.T168591A6521075.en. https://www.iucnredlist.org/species/168591/6521075. பார்த்த நாள்: 12 November 2021. 
  2. "Botia striata". ஒருங்கிணைந்த வகைப்பாட்டியல் தகவல் அமைப்பு (Integrated Taxonomic Information System).
  3. Froese, Rainer, and Daniel Pauly, eds. (2005). Botia striata in FishBase. May 2005 version.
  4. 4.0 4.1 4.2 Seriouslyfish: Botia striata. Retrieved 24 June 2014.
  5. Kottelat, M. (2012): Conspectus cobitidum: an inventory of the loaches of the world (Teleostei: Cypriniformes: Cobitoidei). பரணிடப்பட்டது 2013-02-11 at the வந்தவழி இயந்திரம் The Raffles Bulletin of Zoology, Suppl. No. 26: 1-199.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வரிக்குதிரை_அயிரை&oldid=3531333" இலிருந்து மீள்விக்கப்பட்டது