வயாங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வயாங்
வயாங்
நாடுஇந்தோனேசியா
வகைகலை நிகழ்ச்சிகள், பாரம்பரிய கைவினைத்திறன்
மேற்கோள்063
இடம்ஆசியா
கல்வெட்டு வரலாறு
கல்வெட்டு2008 (மூன்றாவது அமர்வு)
பட்டியல்பிரதிநிதி பட்டியல்

வயாங் என்பது இந்தோனேசிய தீவான சாவாவில் இருந்து உருவான ஓர் பாரம்பரிய பொம்மை நாடக வடிவமாகும்.[1][2][3] வயாங் எனப்படுவது முழு நாடக நிகழ்ச்சியை குறிக்கிறது. சில நேரங்களில் பயன்படுத்தப்படும் தோல் பொம்மை வயாங் என்று குறிப்பிடப்படுகிறது. [4] வயாங் நிகழ்ச்சிகள் சாவாவில் கேம்லான் மற்றும் பாலியில் பாலின வயாங்குடன் இணைந்து நடத்தப்படுகின்றன. இந்து இதிகாசங்களான ராமாயணம் மற்றும் மகாபாரதத்தின் கதைகள் மற்றும் கலாச்சார புனைவுகளின் உள்ளூர் தழுவல்கள் போன்ற புராணக்கதைகளை வயாங் நாடகக் கதைகள் சித்தரிக்கின்றன.[2][5][6] பாரம்பரியமாக தலாங் எனப்படும் கலைஞரால் நள்ளிரவு முதல் விடியல் வரை வயாங் நிகழ்ச்சி நிகழ்த்தப்படுகிறது; திரையின் இருபுறமும் மக்கள் நிகழ்ச்சியைப் பார்க்கிறார்கள்.[2][5]

வயாங் நிகழ்ச்சிகள் இந்தோனேசியர்களிடையே குறிப்பாக சாவா மற்றும் பாலி தீவுகளில் மிகவும் பிரபலமாக உள்ளன. வயாங் நிகழ்ச்சிகள் பொதுவாக சடங்குகள், விழாக்கள், சிறப்பு நிகழ்வுகள் மற்றும் சுற்றுலா தலங்களில் நடத்தப்படுகின்றன. சடங்கு சூழல்களில், பொம்மை நிகழ்ச்சிகள் பிரார்த்தனை சடங்குகள் (பாலியில் உள்ள கோயில்களில் நடைபெறும்), ருவாடன் சடங்கு (சுகெர்டோ குழந்தைகளை துரதிர்ஷ்டத்திலிருந்து சுத்தப்படுத்துதல்), மற்றும் செடேகா பூமி சடங்கு (பயிர் விளைச்சலுக்கு கடவுளுக்கு நன்றி) பயன்படுத்தப்படுகின்றன.[7][8][9] இது மாண்டெனன் (சாவானிய திருமண விழா) மற்றும் சுனாதன் (விருத்தசேதனம் விழா) நிகழ்வுகளில் கொண்டாடப்படுகிறது. இது சுதந்திர தினம், நகராட்சிகள் மற்றும் நிறுவனங்களின் ஆண்டுவிழாக்கள், பிறந்த நாட்கள், குறிப்பிட்ட நாட்களை நினைவுபடுத்துதல் மற்றும் பலவற்றைக் கொண்டாட பயன்படுகிறது. சுற்றுலா நடவடிக்கைகளின் வளர்ச்சியுடன் கூடிய நவீன சகாப்தத்தில் கூட, வயாங் பொம்மை நிகழ்ச்சிகள் கலாச்சார சுற்றுலா அம்சங்களாக பயன்படுத்தப்படுகின்றன.[10]

வயாங் மரபுகளில் நடிப்பு, பாடல், இசை, நாடகம், இலக்கியம், ஓவியம், சிற்பம் செதுக்குதல் மற்றும் குறியீட்டு கலைகள் ஆகியவை அடங்கும். ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து வளர்ந்து வரும் மரபுகள், தகவல், பிரசங்கம், கல்வி, தத்துவ புரிதல் மற்றும் பொழுதுபோக்குக்கான ஊடகமாகவும் உள்ளன.[11]

யுனெஸ்கோவால் 7 நவம்பர் 2003 அன்று தட்டையான தோல் நிழல் பொம்மை (வயாங் குளிட்), தட்டையான மர பொம்மை (வயாங் கிளிடிக்) மற்றும் முப்பரிமாண மர பொம்மை (வயாங் கோலெக்) ஆகியவை மனிதகுலத்தின் வாய்வழி மற்றும் அருவமான பாரம்பரியத்தின் படைப்புகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டது. ஒப்புதலுக்கு ஈடாக, யுனெஸ்கோ பாரம்பரியத்தைப் பாதுகாக்க இந்தோனேசியர்களைக் கோரியது.[12]

சொற்பிறப்பியல்[தொகு]

வயாங் என்ற சொல் சாவானிய மொழியில் 'நிழல்' அல்லது 'கற்பனை' என்று பொருள் தரும்.[3][13] இந்தோனேசிய மொழியில் இந்த வார்த்தைக்கு இணையான வார்த்தை பயாங். நவீன தினசரி சாவானிய மற்றும் இந்தோனேசிய சொற்களஞ்சியத்தில், வயாங் பொம்மையை அல்லது முழு பொம்மை நாடக நிகழ்ச்சியையும் குறிக்கலாம்.

வரலாறு[தொகு]

வயாங் இந்தோனேசியாவின் பாரம்பரிய பொம்மை கலையாகும்.[14][2][5]</ref> இது ஒரு பழமையான கதைசொல்லல் வடிவமாகும். இது அதன் விரிவான பொம்மைகள் மற்றும் சிக்கலான இசை பாணிகளுக்கு பெயர் பெற்றது.[15] வயாங்கின் ஆரம்பகால சான்றுகள் இடைக்கால கால நூல்கள் மற்றும் தொல்பொருள் தளங்கள் ஒன்றாம் மில்லினியத்தின் பிற்பகுதியில் இருந்து வருகிறது. வயாங் எங்கிருந்து உருவானது என்பது குறித்து நான்கு கோட்பாடுகள் உள்ளன: சாவாவின் பூர்வீகம்; சாவா-இந்தியா; இந்தியா; மற்றும் சீனா. அதன் தோற்றத்தைப் பொருட்படுத்தாமல், இது  ஒரு சாவானிய நிகழ்வாக வளர்ந்தது. இதனால் வெளிப்படுத்தப்பட்ட நுட்பம், ஆழம் மற்றும் படைப்பாற்றல் ஆகியவற்றைக் கொண்ட உண்மையான சமகால பொம்மை நிழல் கலைப்படைப்பு சீனாவிலோ அல்லது இந்தியாவிலோ இல்லை.[16]


கல்வியாளர் பிராண்டனின் கூற்றுப்படி, வயாங் பொம்மைகள் சாவாவை பூர்வீகமாகக் கொண்டவை. வயாங் பொம்மைகள் சாவானிய சமூக கலாச்சாரம் மற்றும் மத வாழ்க்கையுடன் நெருங்கிய தொடர்புடையவை என்று அவர் கூறுகிறார். இந்திய பொம்மலாட்டங்கள் இதிலிருந்து வேறுபடுகின்றன, மேலும் அனைத்து வயாங் தொழில்நுட்ப சொற்களும் சாவானிய மொழியில் உள்ளன. இதேபோல், சாவா மற்றும் பாலியில் காணப்படும் வயாங் குளிடில் பயன்படுத்தப்படும் வேறு சில தொழில்நுட்ப சொற்கள், பௌத்த அல்லது இந்து தொன்மங்களுடன் இணைந்தாலும் கூட, உள்ளூர் மொழிகளை அடிப்படையாகக் கொண்டது.[16]

இந்திய கலைகளுடன் ஒப்பீடு[தொகு]

இந்து மற்றும் புத்த மதம் 1 ஆம் மில்லினியத்தின் ஆரம்ப நூற்றாண்டுகளில் இந்தோனேசிய தீவுகளுக்கு வந்தன, மேலும் இறையியலுடன், இந்தோனேசியா மற்றும் இந்திய துணைக்கண்டத்தின் மக்கள் கலாச்சாரம், கட்டிடக்கலை மற்றும் வர்த்தக பொருட்களை பரிமாறிக்கொண்டனர்.[16][17][6] பொம்மலாட்டக் கலைகள் மற்றும் நாடகங்கள் பண்டைய இந்திய நூல்களில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.[18] மேலும், இந்தியாவின் கிழக்குக் கடலோரப் பகுதி (ஆந்திரப் பிரதேசம், ஒடிசா மற்றும் தமிழ்நாடு), இந்தோனேசியத் தீவுகளுடன் அதிகம் தொடர்பு கொண்டது மற்றும் பொம்மலாட்டம், தோல்பாவைக்கூத்து எனப்படும் பொம்மைக் கலைகளின் மரபுகளைக் கொண்டுள்ளது.[19]

இந்து சமய நாடகத்தில் விதுசகா மற்றும் வயாங்கின் செமர் போன்ற சில பாத்திரங்கள் மிகவும் ஒத்தவை. இந்திய தொன்மங்கள் மற்றும் இந்து இதிகாசங்களின் பாத்திரங்கள் பல முக்கிய வயாங் நாடகங்களில் இடம்பெற்றுள்ளன, இது சாத்தியமான இந்திய வம்சாவளியை பரிந்துரைக்கிறது அல்லது குறைந்தபட்சம் இந்தோனேசிய வரலாற்றின் இஸ்லாமியத்திற்கு முந்தைய காலகட்டத்தின் தாக்கத்தை குறிக்கிறது.[16][20]

கலை வடிவம்[தொகு]

ஒரு வயாங் குளிட் (தோல் நிழல் பொம்மை) நிகழ்ச்சி

வயாங் குளிட் தோல் பொம்மைகளை கொண்டு நிகழ்த்தப்படும் ஒரு கலையாகும். குளிட் என்பது 'தோல்' என்று பொருள்படும், மேலும் இது நுண்ணிய கருவிகளால் கவனமாக உளித்து, கவனமாக வடிவமைக்கப்பட்ட அழகான வண்ணங்களில் வரையப்பட்ட பொம்மைகளின் தோல் கட்டுமானத்தைக் குறிக்கிறது. எருமைக் கொம்பு கைப்பிடிகள் மற்றும் கட்டுப்பாட்டு கம்பிகளால் இவை அசைக்கப்படுகின்றன. இதன் கதைகள் பொதுவாக இந்து இதிகாசங்களான ராமாயணம் மற்றும் மகாபாரதத்திலிருந்து எடுக்கப்பட்டவை.[21] வரலாற்று ரீதியாக, ஒரு பருத்தி துணியால் செய்யப்பட்ட திரையில் எண்ணெய் விளக்கு ஒளியில் பொம்மைகள் நிழலாடின. இன்று, பெரும்பாலும் மின் விளக்கு பயன்படுத்துகிறது.

வயாங் கோலெக் என்பது முப்பரிமாண மரக் கம்பி பொம்மைகள் கொண்டு நிகழ்த்தப்படுவதாகும். இவை கீழே இருந்து உடல் வழியாக தலை வரை செல்லும் மரக் கம்பியாலும், கைகளில் இணைக்கப்பட்ட குச்சிகளாலும் இயக்கப்படுகின்றன. பொம்மலாட்டங்களின் கட்டுமானமானது வயாங் கோலெக் முக்கியமாக மேற்கு சாவாவின் சுண்டானிய கலாச்சாரத்துடன் தொடர்புடையது. மத்திய சாவாவில், வயாங் மெனக் என்றும் அழைக்கப்படுகிறது.

வயாங் கிளிடிக் அல்லது வயாங் கருசில் உருவங்கள் வயாங் கோலெக் மற்றும் வயாங் குளிட் இடையில் ஒரு நடுத்தர கலையாகும் . இதில் பொம்மைகள் வயாங் குளிட் உருவங்களைப் போலவே கட்டப்பட்டுள்ளன, ஆனால் தோலுக்குப் பதிலாக மெல்லிய மரத் துண்டுகள்பயன்படுத்தப்படுகின்றன. வயாங் குளிட் உருவங்களைப் போலவே, நிழல் பொம்மைகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் ஒரு ஒற்றுமை என்னவென்றால், அவை வயாங் குளிட் உருவங்களின் அதே சிறிய அளவில் உள்ளன. இருப்பினும், தோலை விட மரம் உடையக்கூடியது. போர்க் காட்சிகளின் போது, ​​வயாங் கிளிடிக் உருவங்கள் பெரும்பாலும் கணிசமாக சேதம் அடைகின்றன.


மேற்கோள்கள்[தொகு]

  1. ""Wayang puppet theatre", Inscribed in 2008 (3.COM) on the Representative List of the Intangible Cultural Heritage of Humanity (originally proclaimed in 2003)". UNESCO. பார்க்கப்பட்ட நாள் 10 October 2014.
  2. 2.0 2.1 2.2 2.3 "Wayang: Indonesian Theatre".. 
  3. 3.0 3.1 "History and Etymology for Wayang". Merriam-Webster. பார்க்கப்பட்ட நாள் 22 December 2020.
  4. Routledge Handbook of Asian Theatre. Routledge. https://books.google.com/books?id=H1iFCwAAQBAJ. 
  5. 5.0 5.1 5.2 The World Encyclopedia of Contemporary Theatre: Asia/Pacific. Taylor & Francis. https://books.google.com/books?id=maGU4ziPQJQC&pg=PA184. 
  6. 6.0 6.1 Asian Mythologies. University of Chicago Press. https://books.google.com/books?id=r4I-FsZCzJEC&pg=PA162. 
  7. ""Dalang Ruwat, Profesi Tak Sembarangan Ki Manteb Soedharsono"". www.cnnindonesia.com. பார்க்கப்பட்ட நாள் 13 February 2021.
  8. ""Sedekah Bumi dan Wayang Kulit, Cara Bersyukur Petani Atas Panennya"". www.jawapos.com. 10 October 2018. பார்க்கப்பட்ட நாள் 13 February 2021.
  9. ""Pertunjukan Wayang Kulit sebagai Atraksi Budaya Baik atau Buruk?"". www.kompasiana.com. 15 December 2019. பார்க்கப்பட்ட நாள் 13 February 2021.
  10. ""Wayang Seni Ritual, Dulu Dimainkan Oleh Saman"". www.balihbalihan.com. 12 June 2020. பார்க்கப்பட்ட நாள் 13 February 2021.
  11. ""Wayang: Aset Budaya Nasional Sebagai Refleksi Kehidupan dengan Kandungan Nilai-nilai Falsafah Timur"". Indonesian Ministry of Education and Culture (Kemdikbud). பார்க்கப்பட்ட நாள் 8 January 2021.
  12. ""Wayang puppet theatre", Inscribed in 2008 (3.COM) on the Representative List of the Intangible Cultural Heritage of Humanity (originally proclaimed in 2003)". UNESCO. பார்க்கப்பட்ட நாள் 10 October 2014.
  13. Mair, Victor H. Painting and Performance: Picture Recitation and Its Indian Genesis. Honolulu: University of Hawaii Press, 1988. p. 58.
  14. Theatre in Southeast Asia. Harvard University Press. https://books.google.com/books?id=g-tAlBV5_LkC. 
  15. ""Wayang puppet theatre", Inscribed in 2008 (3.COM) on the Representative List of the Intangible Cultural Heritage of Humanity (originally proclaimed in 2003)". UNESCO. பார்க்கப்பட்ட நாள் 10 October 2014.
  16. 16.0 16.1 16.2 16.3 James R. Brandon (2009). Theatre in Southeast Asia. Harvard University Press. பக். 42–44, 65, 92–94, 278. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-674-02874-6. https://books.google.com/books?id=g-tAlBV5_LkC. 
  17. Miyao, J. (1977). "P. L. Amin Sweeney and Akira Goto (ed.) An International Seminar on the Shadow Plays of Asia". Southeast Asia: History and Culture (Japan Society for Southeast Asian Studies) 1977 (7): 142–146. doi:10.5512/sea.1977.142. 
  18. Kathy Foley (2016). Routledge Handbook of Asian Theatre. Routledge. பக். 181–182. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-317-27886-3. https://books.google.com/books?id=H1iFCwAAQBAJ. 
  19. Kathy Foley (2016). Routledge Handbook of Asian Theatre. Routledge. பக். 182–184. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-317-27886-3. https://books.google.com/books?id=H1iFCwAAQBAJ. 
  20. Varadpande (1987). History of Indian Theatre, Volume 1. Abhinav Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788170172215. https://books.google.com/books?id=SyxOHOCVcVkC&pg=PA75. 
  21. . 15 December 1995. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வயாங்&oldid=3903151" இலிருந்து மீள்விக்கப்பட்டது