வனேசா ஹட்ஜன்ஸ்
வனேசா ஆன் ஹட்ஜன்ஸ் (Vanessa Anne Hudgens, பிறப்பு: டிசம்பர் 14,1988) ஓர் அமெரிக்க நடிகையும் மற்றும் பாடகியும் ஆவார். தர்ட்டீன் (2003) என்ற திரைப்படம் மூலம் அறிமுகமான பிறகு, வனேசா இசையை அடிப்படையாகக் கொண்ட ஹை ஸ்கூல் மியூசிக்கல் என்ற திரைப்படத் தொடரில் கேப்ரியல்லா மான்டெஸ் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் புகழ் பெற்றார். இது இவருக்கு முக்கிய அங்கீகாரத்தைக் கொண்டு வந்தது.[2] ஹாலிவுட் ரெக்கார்ட்ஸ் என்ற இசைத்தட்டு நிறுவனம் மூலம் இவர் வி (2006) மற்றும் ஐடென்டிபையிடு (2008) ஆகிய இரண்டு இசைத் தொகுப்புகளை வெளியிட்டார்.
இளமை வாழ்க்கை
[தொகு]வனேசா ஆன் ஹட்ஜன்ஸ் கலிபோர்னியாவின் சலினாஸ் என்ற நகரில் பிறந்தார். மேலும் மேற்கு கடற்கரையில் ஓரிகான் முதல் தெற்கு கலிபோர்னியா வரை பல்வேறு இடங்களில் வளர்ந்தார். இவரது தாயார் ஜினா ஒரு அலுவலகத்தில் பணி புரிந்தார். இவரது தந்தை கிரிகோரி ஹட்ஜன்ஸ் ஒரு தீயணைப்பு வீரர் ஆவார்.[3][4] இவருக்கு ஸ்டெல்லா என்ற தங்கை உள்ளார். அவரும் ஒரு நடிகை ஆவார்.[5] வனேசா ஒரு கத்தோலிக்கராக வளர்க்கப்பட்டார்.[6] பிப்ரவரி 2016 இல் புற்றுநோயால் இறந்த இவரது தந்தை, ஆங்கில வம்சாவளியைச் சேர்ந்தவர்.[7] இவரது தாயார் பிலிப்பீன்சு மற்றும் மிண்டனாவோவில் வளர்ந்தார்.[4][8][9] இவரது தாத்தா பாட்டி அனைவரும் இசைக்கலைஞர்கள்.[10]

2024 ஆம் ஆண்டில், வனேசா தி மாஸ்க்ட் சிங்கர் நிகழ்ச்சியின் பதினோராவது பருவத்தில் "கோல்ட்ஃபிஷ்" என்ற பெயரில் போட்டியிட்டு இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.[11]
சொந்த வாழ்க்கை
[தொகு]வனேசா ஹட்ஜன்ஸ் கத்தோலிக்கராக வளர்க்கப்பட்டார். ஆனால் இப்போது ஒரு மதப்பிரிவு அல்லாத கிறிஸ்தவராக அடையாளம் காணப்படுகிறார். இவர் லாஸ் ஏஞ்சலஸின் ஹில்ஸாங் தேவாலயத்தில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.[12][13][14]
உறவுகளும் திருமணங்களும்
[தொகு]ஹை ஸ்கூல் மியூசிக்கல் என்ற இசை நிகழ்ச்சியில் தன்னுடன் பணிபுரிந்த ஜாக் எஃப்ரான் என்பவருடன் சிலகாலம் உறவில் இர்நுதார். 2010 இல் இவர்கள் பிரிந்தனர்.[15] 2011 முதல் 2019 வரை, நடிகர் ஆஸ்டின் பட்லர் என்பவருடன் உறவில் இருந்தார்.[16] 2020 ஆம் ஆண்டில், பெரும் கூட்டிணைவு அடிப்பந்தாட்ட வீரர் ]]கோல் டக்கர் என்பருடன் உறவில் இருந்தார்.[17] இவர்கள் இருவரும் டிசம்பர் 2,2023 அன்று மெக்சிகோவின் துலூமில் திருமணம் செய்து கொண்டனர்.[18] ஜூலை 2024 இன் தொடக்கத்தில் தனது குழந்தையைப் பெற்றெடுத்தார்.[19]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Jon Caramanica (June 15, 2009). "Vanessa Hudgens: 'Identified'". The Atlanta Journal-Constitution. Archived from the original on July 12, 2022. Retrieved July 12, 2022.
The R&B number 'Last Night' inexplicably, and compellingly, features slide guitar; 'Don't Ask Why' is an unforced apology for a breakup
- ↑ [[[:வார்ப்புரு:AllMusic]] Vanessa Hudgens Biography], Allmusic
- ↑ "Vanessa Hudgens Biography" பரணிடப்பட்டது மார்ச் 8, 2016 at the வந்தவழி இயந்திரம் Yahoo! Accessed June 20, 2011.
- ↑ 4.0 4.1 Nepales, Ruben V. (August 9, 2007). "Vanessa Hudgens: 'I love being a Filipina'". Philippine Daily Inquirer இம் மூலத்தில் இருந்து November 15, 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121115023435/http://showbizandstyle.inquirer.net/entertainment/entertainment/view/20070809-81617/Vanessa-Hudgens-I-love-being-a-Filipina-.
- ↑ "Hollywood Actress Vanessa Hudgens Profile". The Hollywood Actress Portal. 2009. Archived from the original on August 29, 2011. Retrieved September 17, 2011.
- ↑ "Vanessa Hudgens: 'My young fans have put me off having kids!'". The Daily Mirror. August 2, 2009. Archived from the original on August 19, 2009. Retrieved August 22, 2009.
- ↑ Kimble, Lindsay (February 7, 2016). "Vanessa Hudgens Shares Heartbreaking Note One Week After Her Father's Death". People. New York City. Archived from the original on December 14, 2019. Retrieved December 13, 2019.
- ↑ Tsao, Kimberly (March 26, 2023). "This is Vanessa Hudgens's favorite Filipino food, according to her mom". GMA News Online இம் மூலத்தில் இருந்து March 31, 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230331045858/https://www.gmanetwork.com/news/lifestyle/food/865101/this-is-vanessa-hudgens-s-favorite-filipino-food-according-to-her-mom/story/.
- ↑ Barker, Lynn (May 17, 2006). "Interview: Zac Efron, Vanessa Anne Hudgens: High School Musical". Teen Hollywood. Archived from the original on September 28, 2007. Retrieved January 6, 2007.
- ↑ Vanessa Hudgens Biography பரணிடப்பட்டது பெப்ரவரி 10, 2010 at the வந்தவழி இயந்திரம் KidzWorld.com
- ↑ Schneider, Michael (May 22, 2024). "'The Masked Singer' Finale Reveals Identities of Goldfish and Gumball: Here's Who Won Season 11". Variety. Retrieved May 23, 2024.
- ↑ "Vanessa Hudgens refocusing on her relationship with Christ". Christian Today. April 2015. Archived from the original on November 17, 2020. Retrieved August 16, 2016.
- ↑ "Vanessa Hudgens Drawing Strength from Her Christian Faith as Father Battles Stage 4 Cancer". The Gospel Herald Entertainment. September 2015. Archived from the original on November 17, 2020. Retrieved August 16, 2016.
- ↑ Juvy Garcia (May 2, 2016). "Vanessa Hudgens Opens up on Her Father's Death: 'Life Is About Perspective'". Christian Post Entertainment. Archived from the original on November 17, 2020. Retrieved August 16, 2016.
- ↑ Gurley, Alex (September 13, 2022). "Zac Efron and Vanessa Hudgens' Relationship Timeline". People. Retrieved December 10, 2023.
- ↑ Young, Courtney (March 13, 2023). "Vanessa Hudgens and Austin Butler's Relationship Timeline". People. Archived from the original on November 4, 2023. Retrieved December 10, 2023.
- ↑ Gibson, Kelsie (November 18, 2021). "Vanessa Hudgens and Cole Tucker's Relationship Timeline". People. Retrieved June 6, 2024.
- ↑ Macon, Alexandra (December 6, 2023). "Vanessa Hudgens Wore Vera Wang to Marry Cole Tucker in the Heart of the Mayan Jungle". Vogue. Retrieved December 10, 2023.
- ↑ Sacks, Hannah; Yee, Lawrence (July 3, 2024). "Vanessa Hudgens Is a Mom! Actress Welcomes First Baby with MLB Husband Cole Tucker". People. Retrieved July 4, 2024.
வெளி இணைப்புகள்
[தொகு]
தொடர்பான செய்திகள் உள்ளது.