உள்ளடக்கத்துக்குச் செல்

வத்ரக் ஆறு

ஆள்கூறுகள்: 22°39′14″N 72°32′34″E / 22.6539°N 72.5429°E / 22.6539; 72.5429
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வத்ராக்
Vatrak
அமைவு
நாடுஇந்தியா
மாநிலம்குசராத்து, இராசத்தான்
சிறப்புக்கூறுகள்
முகத்துவாரம் 
 ⁃ ஆள்கூறுகள்
22°39′14″N 72°32′34″E / 22.6539°N 72.5429°E / 22.6539; 72.5429
நீளம்243 கி. மீ.

வத்ரக் ஆறு (Vatrak River) என்பது சபர்மதி ஆற்றின் துணை ஆறாகும். இது இந்தியாவின் குசராத்து மாநிலத்தில் 243 கிலோமீட்டர்கள் ஓடுகிறது.[1] இராசத்தான் மாநிலம் துங்கர்பூர் மலைகளில் உருவாகி குசராத்தில் மேகராஜ் வட்டத்தில் மொய்தி கிராமத்திற்கு அருகில் நுழைகிறது.[1]

வடிநிலம்

[தொகு]

வத்ரக் ஆறு மாகி ஆற்றுக்கு இணையாக,[2] சுமார் 29 கி. மீ. வரை இராசத்தானில் ஓடி மொயடி கிராமத்திற்கு அருகில் உள்ள சபர்கந்தா மாவட்டத்தில் நுழைகிறது. பின்னர் மாவட்டத்தின் தென்மேற்கு திசையில் ஓடி, கேதாவுடன் மாவட்ட எல்லைக்கு அருகில் மசூம் ஆற்றில் இணைகிறது.[1] உந்தடியா கிராமத்திற்கு அருகில், வத்ரக் ஆறு சன்சாரி ஆற்றினை சந்திக்கிறது. இந்த ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் உட்காந்தேசுவர் மகாதேவன் கோயில் அமைந்துள்ளது.[2]

இந்த ஆறு கேடா[2] அருகே சேதி மற்றும் மேசுவோவுடன் இணைகிறது. இறுதியாக தோல்காவிற்கு அருகிலுள்ள வௌதாவில் சபர்மதி ஆற்றில் வடிகிறது.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 Rajyagor, S. B. (1974). Gujarat State Gazetteers : Sabarkantha District. Ahmedabad: Government of Gujarat. p. 10. இணையக் கணினி நூலக மைய எண் 312722344.
  2. 2.0 2.1 2.2 2.3 Rajyagor, Shivprasad (2004). "વાત્રક (નદી)". Gujarati Vishwakosh. Ahmedabad: Gujarat Vishwakosh Trust. 729–730. இணையக் கணினி நூலக மையம் 552367205. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வத்ரக்_ஆறு&oldid=3968202" இலிருந்து மீள்விக்கப்பட்டது