வணிகப் பாதை
வணிகப் பாதை ( trade route) என்பது சரக்குப் போக்குவரத்து வலைப்பின்னலைக் குறிப்பதாகும். இது சரக்குப் போக்குவரத்து மற்றும் அந்தப் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும் தொடர் பாதைகள் போன்ற வரிசைகளைக் கொண்டது. இந்த சொல்லானது நீர்வழியாக தொலைதூர சந்தைகளை அடைய பண்டங்களை கொண்டு செல்வதைக் குறிக்கவும் பயன்படுத்தலாம். வணிகப் பாதை என்பது நீண்ட தொலைவான பாதையைக் கொண்டிருக்கும், இந்த வணிக ரீதியான பெரிய போக்குவரத்துப் பாதைகள் சிறிய வலைப்பின்னல்களுடன் இணைக்கப்பட்டிருக்கலாம். குறிப்பிடத்தக்க வர்த்தக பாதையான ஐரோப்பாவில் இருந்த ஆம்பர் பாதை, தொலை தூர வர்த்தகத்திற்கு நம்பகமான வலையமைப்பாக இருந்தது. இடைக்காலத்தில் மசாலை வணிகத்துக்கு கடல் வர்த்தகப் பாதை முக்கியமாக ஆனது, இந்த பாதைகளின் கட்டுப்பாட்டை நாடுகள் தங்கள் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் மேற்கொண்டன.[1] ஹான்சியடிக் லீக் போன்ற நிறுவனங்கள், இடைக்காலத்தில் வர்த்தகர்களின் நலன்களை பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டதாகவும், வர்த்தகத்தில் பெருமளவு முக்கியத்துவம் பெற்றதாகவும் இருந்தன.
நவீனக் காலத்தில், பெரும்பான்மையான வணிகச் செயல்பாடுகள் பழைய உலகின் பெரிய வணிக வழித்தடங்களில் இருந்து நவீன தேசிய அரசுகளுக்கு இடையிலான புதிய பாதைகளுக்கு மாற்றப்பட்டன. இந்த வர்த்தக நடவடிக்கைகளானது சில நேரங்களில் பாரம்பரிய வர்த்தக பாதுகாப்பின்றி மற்றும் சர்வதேச கட்டற்ற வணிக உடன்படிக்கைகளின் கீழ் மேற்கொள்ளப்பட்டன. நவீனக் காலத்தில் வணிகப் போக்குவரத்தானதுபாரம்பரியத்தில் இருந்து மாறியதாக நாடுகளுக்கு இடையில் எண்ணைக் குழாய் வணிகத்தை உள்ளடக்கியதாகவும், நன்கு அறிமுகமான தொடருந்து பாதை, தானுந்து, சரக்கு விமானம் ஆகியவற்றை உள்ளடக்கியதாக உள்ளன.
துவக்கக் கால பாதைகளின் வளர்ச்சி
[தொகு]துவக்க வளர்ச்சி
[தொகு]செப்புக் காலத்தில் நீண்ட தூர வர்த்தக பாதைகள் உருவாயின. கி.மு. இரண்டாம் நூற்றாண்டின் துவக்கத்திலிருந்து பொது ஊழி துவக்கம் வரை, மேற்கு ஆசியா, மத்திய தரைக்கடல், சீனா, இந்தியத் துணைக் கண்டம் ஆகியவற்றில் சமூகங்கள் வர்த்தகத்திற்கான முக்கிய வணிகப் போக்குவரத்து வலைப்பின்னலை வளர்த்தன.[2]
நீண்டத் தொலைவுக்கான நீர்வழியிடை நிலவழி வர்த்தகத்தை எளிதாக்கும் முக்கிய கருவிகளில் ஒன்றாக வேலை விலங்குகள் வளர்ப்பு இருந்தது.[3] கி.மு இரண்டாம் நூற்றாண்டுக்கு முன்பிருந்தே காணப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட வணிகர்கள்,[4] கடந்து செல்லும் வழியில் மிகுதியான தீவனம் கிடைக்கும் சூழலால், சரக்குகளை மிக அதிக தூரம் எடுத்துச் சென்றனர். தூரக் கிழக்கில் இருந்து அரேபிய தீபகற்பம் வரையிலான தொலை தூர வர்த்தகமான மசாலை மற்றும் பட்டு வணிகமானது அரேபிய நாடோடிகளின் கட்டுப்பாட்டில் வர அவர்களின் ஓட்டக வளர்ப்பு உதவியது.[5] தொலை தூர வணித்தில் வணிகர்கள் பெரும்பாலும் ஆடம்பரப் பொருட்களையே கொண்டு சென்றனர், நெடுந் தொலைவில் உள்ள மலிவான பொருட்களானது வணிகர்களுக்கு இலாபம் தரக்கூடியதாக இருக்கவில்லை.[6] இரும்பு மற்றும் வெண்கல தொழில்நுட்பங்களினால் ஏற்பட்ட உற்பத்தி வளர்ச்சிக்குப் பிறகு, புதிய வணிகப் பாதைகளும் - நாகரிகங்களுக்கு புதுமையான பொருட்களை வழங்குதலும் – உயரத் தொடங்கியது.[7]
கடல் வணிகம்
[தொகு]நாகரிகங்களுக்கு இடையிலான கடல் வர்த்தகத்துக்கான சான்றுகள் குறைந்தபட்சம் 90 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தியதாக உள்ளது. கடல் போக்குவரத்தானது சுமேரியர்களுக்கு கி.மு. 4 மற்றும் 3 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் அறியப்பட்டது, சுமேரியர்களுக்கு முன்னால் இந்திய மற்றும் சீன மக்களால் அறியப்பட்டிருக்கலாம். எகிப்தியர்களுக்கு செங்கடல் வழியாக வர்த்தக வழிகள் இருந்தன, அவர்களுக்கு "பண்டு" (கிழக்கு ஆப்பிரிக்கா) மற்றும் அரேபியாவிலிருந்து மசாலை இறக்குமதி செய்யப்பட்டன.[8]