வடமேற்குப் பெருவழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிவப்புக்கோடு வடமேற்குப் பெருவழியைக் காட்டுகிறது
வடமேற்குப் பெருவழிப் பாதைகள்

வடமேற்குப் பெருவழி (Northwest Passage) வட அமெரிக்காவின் வடகடலோரமாக ஆர்க்டிக் பெருங்கடலூடே செல்லும் கடற் பெருவழி ஆகும். இது கனடிய ஆர்க்டிக் தீவுக்கூட்டங்களுக்கிடையே உள்ள நீர்வழிகள் வழியாக அத்திலாந்திக்கு பெருங்கடலையும் அமைதிப் பெருங்கடலையும் இணைக்கிறது. [1][2][3]தீவுக்கூட்டத்தின் பல்வேறு தீவுகளும் ஒன்றொடொன்று இந்த நீர்வழியால் பிரிக்கப்பட்டுள்ளன; மேலும் இத்தீவுகள் இந்த நீர் வழிகளால் கனடிய நிலப்பகுதியிலிருந்தும் பிரிக்கப்பட்டுள்ளன. இந்த நீர்வழிகளின் தொகுப்பே வடமேற்குப் பெருவழிகள் எனப்படுகின்றன. [4] திசம்பர் 2, 2009இல் கனடிய நாடாளுமன்றம் இந்த நீர்ப்பெருவழியை "கனடிய வடமேற்குப் பெருவழி" என பெயரிட்டுள்ளது.[5][6]

ஆப்பிரிக்கா வழியான கிழக்குப்புறப் பெருவழி போர்த்துக்கல் இராச்சியத்தின் கட்டுப்பாட்டில் இருந்ததால் ஆசியாவை மேற்குப்புறமாக சென்றடைய எசுப்பானியா முயன்றது. அவ்வாறே ஐரோப்பாவின் மற்ற பல நாடுகளும் மாற்றுவழிகளை தேடி வந்தன. 1903க்கும் 1906க்கும் இடையே இந்தப் பெருவழியைக் கடந்த முதல் நபர் ருவால் அமுன்சென் ஆகும்.

பனிக்கட்டி படர்ந்திருப்பதால் இந்த வழி வழமையான கப்பல்களுக்கு ஆண்டின் பெரும்பகுதியும் மூடப்பட்டிருக்கும். ஆனால் பனிக்கட்டியில் ஏற்படும் மாற்றங்களை அடுத்து (ஆர்க்டிக் சுருக்கம்) கப்பல்கள் செல்லக்கூடியதாக உள்ளது.[7][8][9][10] இருப்பினும், இந்த நீர்வழிகளின் இறைமை குறித்த சர்ச்சைகளால் வருங்காலத்தில் கப்பல் போக்குவரத்து சிக்கலாகக் கூடும்: கனடிய அரசு இது கனடிய உள்நாட்டு நீர்வழியாக கருதுகிறது.[11] ஆனால் அமெரிக்க ஐக்கிய நாடும் மற்ற பல்வேறு ஐரோப்பிய நாடுகளும் இவை கட்டற்ற கடப்பை அனுமதிக்கும் பன்னாட்டு நீரிணை மற்றும் கடப்பு பெருவழி என்று கருதுகின்றன.[12][13] இந்தப் பெருவழியின் கிழக்குப் பகுதிகளில் ஆழம் 15 மீட்டர்கள் (49 ft)யே என்பதால்,[14] ஐரோ-ஆசிய கப்பல் பெருவழியாகப் பயன்படுத்தப்பட இதற்கு மிகக்குறைந்த ஒப்பேறு வாய்ப்புநிலையே உள்ளது.

மேற்சான்றுகள்[தொகு]

  1. "Northwest passage". Merriam-Webster Online Dictionary.
  2. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; AMSA 2009 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  3. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Østreng 2013 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  4. IHO Codes for Oceans & Seas, and Other Code Systems: IHO 23-3rd: Limits of Oceans and Seas, Special Publication 23 (3rd ). International Hydrographic Organization. 1953. Archived from the original on 2006-07-03. https://web.archive.org/web/20060703173651/http://ioc.unesco.org/oceanteacher/OceanTeacher2/06_OcDtaMgtProc/01_DataOps/06_OcDtaForm/01_OcDtaFormFunda/01_Codes/PreviousIHOandOther.htm. பார்த்த நாள்: 2014-11-25. 
  5. "Passage of motion M-387 on 2 Dec 2009 – vote". 5 டிசம்பர் 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. 25 நவம்பர் 2014 அன்று பார்க்கப்பட்டது.
  6. "Order paper – Private Members' Business, 17 Nov 2009, see motion M-387". 18 ஜனவரி 2015 அன்று மூலம் பரணிடப்பட்டது. 25 நவம்பர் 2014 அன்று பார்க்கப்பட்டது.
  7. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; esa என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  8. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Beeb என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  9. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; plain என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  10. Keating, Joshua E. (December 2009). "The Top 10 Stories You Missed in 2009: A few ways the world changed while you weren't looking". Foreign Policy.
  11. "TP 14202 E Interpretation". Transport Canada.
  12. "The Northwest Passage and Climate Change from the Library of Parliament—Canadian Arctic Sovereignty". 2011-06-22 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-11-25 அன்று பார்க்கப்பட்டது.
  13. "Naval Operations in an ice-free Arctic" (PDF). 2011-10-05 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2014-11-25 அன்று பார்க்கப்பட்டது.
  14. "No to shipping ore through Northwest Passage – Baffinland CEO". Steel Guru. 2013-10-20. Archived from the original on 2013-10-21. https://archive.is/20131021133823/http://www.steelguru.com/international_news/No_to_shipping_ore_through_Northwest_Passage_Baffinland_CEO/327008.html. பார்த்த நாள்: 2013-10-21. "The head of a Canadian mining company developing a massive mineral deposit within the Arctic Circle said the Northwest Passage won’t work as a viable shipping route to Europe and Asia." 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வடமேற்குப்_பெருவழி&oldid=3670294" இருந்து மீள்விக்கப்பட்டது