ருவால் அமுன்சென்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ருவால் எங்கெல்பிரெட் கிரேவிங் அமுன்சென்
Nlc amundsen.jpg
ருவால் எங்கெல்பிரெட் கிரேவிங் அமுன்சென்
பிறப்பு சூலை 16, 1872(1872-07-16)
Borge, Østfold, நோர்வே
இறப்பு c. சூன் 18, 1928(1928-06-18) (அகவை 55)
தெரியாது
பணி நாடுகாண் பயணி
பெற்றோர் ஜென்ஸ் அமுன்சென்

ருவால் அமுன்சென் (IPA[ˈɾuːɑl ˈɑmʉnsən]) எனச் சுருக்கமாக அழைக்கப்படும் ருவால் எங்கெல்பிரெட் கிரேவிங் அமுன்சென் (Roald Engelbregt Gravning Amundsen - ஜூலை 16, 1872 – c. ஜூன் 18, 1928) நோர்வே நாட்டைச் சேர்ந்தவரும், துருவப் பகுதிகளில் பயணங்களை மேற்கொண்டவருமான தேடலாய்வாளர் (explorer) ஆவார். இவர் தென் துருவத்தை அடைந்த தனது முதலாவது அட்லாண்டிக் பயணத்தை 1910 ஆம் ஆண்டுக்கும் 1912 ஆம் ஆண்டுக்கும் இடையில் மேற்கொண்டார். வட துருவம், தென் துருவம் இரண்டுக்கும் சென்ற முதல் மனிதர் இவராவர். வடமேற்குப் பாதையைக் கடந்த முதல் மனிதரும் இவரே. ஜூன் 1928 ஆம் ஆண்டில் மீட்புப் பணியொன்றில் ஈடுபட்டிருந்த போது இவர் காணாமல் போனார். டக்ளஸ் மோசென், ராபர்ட் ஃபல்க்கன் ஸ்காட், ஏர்னெஸ்ட் ஷேக்கில்டன் ஆகியோருடன் அமுன்சென்னும் அட்லாண்டிக் வீரதீரப்பயண காலத்தில் முன்னணியில் திகழ்ந்தார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ருவால்_அமுன்சென்&oldid=2019565" இருந்து மீள்விக்கப்பட்டது