வடக்கு கலிபோர்னியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வடக்கு கலிபோர்னியா
இடமிருந்து வலமாக: கோல்டன் கேட் பாலம், சேக்ரமெண்டோ, சான் ஜோஸ், முயூர் வுட்ஸ் தேசியச் சின்னம், தாகோ ஏரி மற்றும் சாந்த குரூசின் நகரத்தின் இயற்கைப் பாலங்கள்
சிவப்பு நிறத்தில் வடக்கு கலிபோர்னியாவின் வரைபடம்
சிவப்பு நிறத்தில் வடக்கு கலிபோர்னியாவின் வரைபடம்
நாடுஅமெரிக்க ஐக்கிய நாடுகள்
மாநிலம்கலிபோர்னியா
நகரங்கள்சான் ஜோஸ்
சான் பிரான்சிஸ்கோ
பிரஸ்னோ
சேக்ரமெண்டோ
ஓக்லாண்ட்
ஸ்டாக்டோன்
பிரீமாண்ட்
மொடேஸ்டோ
சாண்டோ ரோசா
சலினாஸ்
ஹேவர்டு
சன்னிவேல்
விசலியா
சிகோ
ரெட்டிங்
சான் மாட்டியோ
சான் ரபேல்
யூரேகா
சூசன்வில்லே
பெரிய நகரம் Largest cityசான் ஜோஸ்
மக்கள்தொகை (2020)
 • மொத்தம்15,775,319
வடக்கு கலிபோர்னியா பகுதி 48 கவுண்டிகள்

வடக்கு கலிபோர்னியா (Northern California), மேற்கு அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாநிலத்தில் வடக்குப் பகுதியில் அமைந்த பெரிய நிலப்பரப்பாகும். இதன் தலைநகரம் சேக்ரமெண்டோ ஆகும். வடக்கு கலிபோர்னியா பகுதி 48 கவுண்டிகளும்[1][2] சான் ஜோஸ், சான் பிரான்சிஸ்கோ, பிரஸ்னோ, சேக்ரமெண்டோ, ஓக்லாண்ட், ஸ்டாக்டோன், பிரீமாண்ட், மொடேஸ்டோ, சாண்டோ ரோசா, சலினாஸ், ஹேவர்டு, சன்னிவேல், விசலியா, சிகோ, ரெட்டிங், சான் மாட்டியோ, சான் ரபேல், யூரேகா மறறும் சூசன்வில்லே போன்ற 19 நகரங்களும் அமைந்துள்ளது. வடக்கு கலிபோர்னியாவில் ரெட்வுட் காடுகள், யோசெமிட்டி தேசியப் பூங்கா, தாவே ஏரி, சாஸ்தா மலை, மத்திய சமவெளி, சியேரா நிவாடா மலைத்தொடர் மற்றும் சான் பிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதிகள் உள்ளது.

பொருளாதாரம்[தொகு]

வடக்கு கலிபோர்னியாவின் பொருளாதாரம் மென்பொருட்கள், குறைகடத்திகள், மின்னணுப் பொருட்கள், உயிரி தொழில்நுட்பம், சுற்றுசூழல் பொறியியல், நிதித்துறை மற்றும் மருத்துவ உபகரணங்கள் உற்பத்தியில் வடக்கு கலிபோர்னியா உலகின் முதலிடத்தில் உள்ளது. மேலும் சுற்றுலா, கப்பல் போக்குவரத்து, உற்பத்தித் துறைகள், வேளாண்மைத் தொழிலிலும் சிறந்து விளங்குகிறது.

தட்ப வெப்பம்[தொகு]

கோப்பென் காலநிலை வகைப்பாடு கொண்ட வடக்கு கலிபோர்னியா

வடக்கு கலிபோர்னியா கோப்பென் காலநிலை வகைப்பாடு கொண்டது. இதன் சியேரா நிவாடா மலைத்தொடர் பகுதிகள் குளிர்ந்த காலநிலையும், குளிர்காலத்தில் பனிப்பொழிவும் கொண்டது. வடக்கு கலிபோர்னியாவின் கோடை கால வெப்பநிலை 60 முதல் 100 பாகை பாரன்ஹீட்டும், குளிர்கால வெப்ப நிலை 30 முதல் 50 வரை கொண்டிருக்கும். சனவரி மற்றும் பிப்ரவரி போன்ற குளிர்காலத்தில் சியேரா நிவாடா மலைத்தொடரின் 3000 அடிகளுக்கு மேல் உயரத்தில் பனி மூடியிருக்கும்.[3]

மக்கள் தொகை[தொகு]

  • 1850= 86105
  • 1860= 346714
  • 1870= 516089
  • 1880= 772778
  • 1890= 961628
  • 1900= 1147725
  • 1910= 1569141
  • 1920= 2003075
  • 1930= 2632273
  • 1940= 3066654
  • 1950= 4654248
  • 1960= 6318482
  • 1970= 7849575
  • 1980= 9359160
  • 1990= 11490926
  • 2000= 13234136
  • 2010= 14573946
  • 2020= 15775319

சுற்றுலாத் தலங்கள்[தொகு]

  1. யோசெமிட்டி தேசியப் பூங்கா
  2. கோல்டன் கேட் பாலம்
  3. சான் ஜோஸ் பாலாஜி கோவில்

கல்வி நிலையங்கள்[தொகு]

அரசு கல்வி நிலையங்கள்[தொகு]

  • கலிபோர்னியா பல்கலைக்கழகம் (பெர்க்லி)
  • கலிபோர்னியா பல்கலைக்கழகம் டேவிஸ்
  • கலிபோர்னியா பல்கலைக்கழகம் ஹேஸ்டிங்ஸ்
  • கலிபோர்னியா பல்கலைக்கழகம் மெர்சிடு
  • கலிபோர்னியா பல்கலைக்கழகம் சான்பிரான்சிஸ்கோ
  • கலிபோர்னியா பல்கலைக்கழகம் சாந்த குரூஸ்
  • 11 கலிபோர்னியா மாநிலப் பல்கலைக்கழகங்கள்:
  • கலிபோர்னியா கடல்சார் அகாதமி
  • கலிபோர்னியா மாநிலப் பல்கலைக்கழகம், சிக்கோ
  • கலிபோர்னியா மாநிலப் பல்கலைக்கழகம், கிழக்கு விரிகுடா
  • கலிபோர்னியா மாநிலப் பல்கலைக்கழகம், மோன்டேரே விரிகுடா
  • கலிபோர்னியா மாநிலப் பல்கலைக்கழகம், பிரெஸ்னோ
  • கலிபோர்னியா மாநிலப் பல்கலைக்கழகம், ஹம்போல்ட்
  • கலிபோர்னியா மாநிலப் பல்கலைக்கழகம், சாக்ரமாண்டோ
  • கலிபோர்னியா மாநிலப் பல்கலைக்கழகம், சான் பிரான்சிஸ்கோ
  • கலிபோர்னியா மாநிலப் பல்கலைக்கழகம், சான் ஜோஸ்
  • கலிபோர்னியா மாநிலப் பல்கலைக்கழகம், சோனோமா
  • கலிபோர்னியா மாநிலப் பல்கலைக்கழகம், ஸ்தனிஸ்லஸ்

தனியார் கல்வி நிலையங்கள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Morgan, Neil (April 19, 1963). "Westward Tilt: Northern California". Lodi News-Sentinel (Lodi, California). https://news.google.com/newspapers?nid=2245&dat=19630419&id=Rd8zAAAAIBAJ&pg=2786,2022902. 
  2. Kent Guide Manual (Harrison Narcotic Law) and Progressional Registry. San Francisco: The Service Press. 1917. பக். 6. https://books.google.com/books?id=Kr8rAQAAMAAJ&pg=PA6. 
  3. "Northern California". www.ccul.org (in அமெரிக்க ஆங்கிலம்). January 26, 2021. பார்க்கப்பட்ட நாள் July 29, 2021.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வடக்கு_கலிபோர்னியா&oldid=3815021" இலிருந்து மீள்விக்கப்பட்டது