யோசெமிட்டி தேசியப் பூங்கா
யோசெமிட்டி தேசியப் பூங்கா | |
---|---|
ஐயுசிஎன் வகை II (தேசிய வனம்) | |
![]() யோசெமிட்டி பள்ளத்தாக்கின் மலையூடுக் காட்சி | |
அமைவிடம் | துவொலும்னெ, மாரிபோசா, & மாதெரா மாவட்டங்கள், கலிபோர்னியா, ஐ.அ. |
அருகாமை நகரம் | மாரிபோசா, கலிபோர்னியா |
ஆள்கூறுகள் | 37°51′N 119°33′W / 37.850°N 119.550°W[1]ஆள்கூறுகள்: 37°51′N 119°33′W / 37.850°N 119.550°W[1] |
பரப்பளவு | 748,036 ஏக்கர்கள் (3,027.19 km2)[2] |
நிறுவப்பட்டது | அக்டோபர் 1, 1890 |
வருகையாளர்கள் | 4,336,890 (in 2016)[3] |
நிருவாக அமைப்பு | தேசியப் பூங்கா சேவை |
வலைத்தளம் | அதிகாரப்பூர்வ இணையதளம் |
யுனெசுக்கோ உலக பாரம்பரியக் களம் | |
கட்டளை விதி | இயற்கை: vii, viii |
உசாத்துணை | 308 |
பதிவு | 1984 (8-ஆம் அமர்வு) |
யோசெமிட்டி தேசியப் பூங்கா (Yosemite National Park, /joʊˈsɛmɪtɪ/, yoh-SEM-i-tee)[4] கலிபோர்னியாவின் மேற்கு சியேரா நிவாடாவில் அமைந்துள்ள அமெரிக்கத் தேசியப் பூங்கா.[5][6] ஐக்கிய அமெரிக்காவின் தேசியப் பூங்கா சேவையால் பராமரிக்கப்பட்டு வரும் இப்பூங்காவின் பரப்பளவு 747,956 ஏக்கர்கள் (1,168.681 ச மை; 302,687 எக்டேர்; 3,026.87 கிமீ2).[2] 1984இல் உலகப் பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்ட யோசெமிட்டி உலகளவில் இங்குள்ள கருங்கல் முகடுகள், அருவிகள், தெளிந்த நீரோடைகள், மீப்பெரும் செகுவா மரவனங்கள், ஏரிகள், மலைகள்,புல்வெளிகள், பனிப்பாறைகள், மற்றும் உயிரியற் பல்வகைமைக்காக அறியப்படுகின்றது.[7] கிட்டத்தட்ட 95% பூங்காப் பகுதி அடர்காட்டுப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.[8]
ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக ஏறத்தாழ 4 மில்லியன் மக்கள் யோசெமிட்டிக்கு வருகின்றனர்.[3] வருபவர்களில் பெரும்பாலானோர் தங்கள் நேரத்தை யோசெமிட்டிப் பள்ளத்தாக்கின் 5.9 சதுர மைல்கள் (15 கிமீ2) பரப்பில் கழிக்கின்றனர்.[7] 2016இல் இப்பூங்காவின் வரலாற்றில் சாதனையளவாக 5 மில்லியன் பேர் வந்துள்ளனர்.[9] தேசியப் பூங்கா குறித்த கருத்தியல் உருவாக்கத்தில் யோசெமிட்டி முக்கிய பங்கு வகித்தது. துவக்கத்தில், காலென் கிளார்க்கும் மற்றவர்களும் யோசெமிட்டியை பாதுகாக்கப் போராடினர்; இறுதியில் 1864இல் குடியரசுத் தலைவர் ஆபிரகாம் லிங்கன் யோசெமிட்டி நல்கையில் ஒப்பமிட்டார். பின்னர் ஜான் முயர் யோசெமிட்டி பள்ளத்தாக்கை மட்டுமன்றி சுற்றியுள்ள மலைத்தொடர்களையும் வனங்களையும் உள்ளடக்கிய பெரியத் தேசியப் பூங்கா அமைக்கப் போராடினார். இதுவே ஐக்கிய அமெரிக்க தேசியப் பூங்கா அமைப்பு நிறுவப்பட வழிகோலியது.[10]
ஒளிப்படத் தொகுப்பு[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Yosemite National Park". Geographic Names Information System. ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறை.
- ↑ 2.0 2.1 "Park Statistics". Yosemite National Park (U.S. National Park Service). 11 September 2016 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ 3.0 3.1 "Annual Park Recreation Visitation (1904 – Last Calendar Year)". U.S. National Park Service. March 1, 2018 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ http://www.dictionary.com/browse/yosemite?s=t
- ↑ Harris 1998, ப. 324
- ↑ "Discover the High Sierra". California Office of Tourism.
- ↑ 7.0 7.1 "Nature & History". United States National Park Service: Yosemite National Park. October 13, 2006. January 25, 2007 அன்று மூலம் பரணிடப்பட்டது. January 27, 2007 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Yosemite Wilderness". United States National Park Service: Yosemite National Park. March 15, 2008 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "New visitation record in 2016 as over 5 million people visited Yosemite National Park". GoldRushCam.com. Sierra Sun Times. 8 February 2017 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>
குறிச்சொல்;historyculture
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை