பாலாஜி கோவில், சான் ஹோசே, கலிபோர்னியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாலாஜி கோவில், சான் ஹோசே, கலிபோர்னியா என்பது அமெரிக்க நாட்டின், கலிபோர்னியா மாநிலம், சாண்டா கிளாரா கவுண்டி, சான் ஹோசே நகரம் 5004 N முதல் தெருவில் அமைந்துள்ள இந்துக் கோவிலாகும். இக்கோவிலை பாலாஜி மடம் என்ற இலாப நோக்கமற்ற அமைப்பு நிர்வகித்து வருகிறது.

அமைவிடம்[தொகு]

சிலிக்கான் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள, சான் ஹோசே நகரம் கலிபோர்னியா பகுதியின் மூன்றாவது அதிக மக்கள் தொகை கொண்ட நகரமும் அமெரிக்காவில் பத்தாவது பெரிய நகரமும் ஆகும். 2022 ஆம் ஆண்டில் இவ்வூர் மெட்ரோ பகுதியின் மக்கள் தொகை 1,441,000 ஆகும்.[1] இங்கு அதிக அளவில் புலம்பெயர்ந்த இந்தியர்கள் வாழ்கிறார்கள்.[2] இவ்வூரின் கோடை காலம் நீண்டதாகவும், வெப்பமாகவும், வறட்சியாகவும், பெரும்பாலும் வானம் தெளிவாகவும் இருக்கும், குளிர்காலம் குறுகிய காலம் கொண்டதாகவும், குளிராகவும், ஈரமாகவும், ஓரளவு மேகமூட்டமாகவும் இருக்கும்.[3] இவ்வூரின் ZIP குறியீடு CA 95134 ஆகும்.

பாலாஜி கோவிலின் குறிப்பணி[தொகு]

இந்தியாவின் வேதங்கள் மற்றும் உபநிடதங்களின் உலகளாவிய உண்மையைப் பகிர்ந்துகொள்வதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு ஆன்மீக இலாப நோக்கற்ற இந்துக் கோயிலாகும். "கடவுள் எல்லாம் வல்லவர், எல்லாம் அறிந்தவர் மற்றும் எங்கும் நிறைந்தவர். எல்லாவற்றிலும் இந்த ஒருமைப்பாட்டை உணர வேண்டியது மனித வாழ்க்கையின் நோக்கம் ஆகும்," என்பது தான் அந்த உண்மையாகும்.[4]

கோவில் அமைப்பு[தொகு]

இக்கோவிலின் மூலவர் வெங்கடேஸ்வரர் ஆவார். தாயார் பத்மாவதி தேவி ஆவார். இங்கு சிவன், விநாயகர், முருகன், ஆஞ்சநேயர், துர்க்கை, மீனாட்சி, கிருஷ்ணர், சாயிபாபா ஆகிய தெய்வங்களுக்கு சன்னதிகள் உள்ளன.

கோவில் முகவரி / திறந்திருக்கும் நேரம்[தொகு]

கோவில் முகவரி[தொகு]

5004 N.முதல் தெரு, சான் ஹோசே (Alviso), CA 95002

கோவில் திருப்பணி முகவரி[தொகு]

642 போலடோ சாலை, ட்ரெஸ் பினோஸ், CA 95075

திறந்திருக்கும் நேரம்[தொகு]

  • இந்து கோவில் திறந்திருக்கும் நேரம்: வார நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை,
  • வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்கள் காலை 07.30 மணி முதல் இரவு 8:30 மணி வரை,

வரலாறு[தொகு]

பாலாஜி மடம் என்ற அமைப்பை, 2006 ஆம் ஆண்டு, சுவாமி நாரயாணானந்தா என்பவர் அமெரிக்காவின் சன்னிவேல் நகரில் நிறுவினார்.[5] இது இலாப நோக்கமற்ற இந்து சமய சேவை அமைப்பாகும். சுவாமி நாரயாணானந்தா இம்மடத்தின் தலைமை அர்ச்சகரும் தலைவருமாவார்.

கலிபோர்னியாவின் சான் பெனிட்டோ கவுண்டியில் உள்ள ட்ரெஸ் பினோஸ் என்ற இடத்தில் பாலாஜி கோயிலைக் கட்டுவதற்காக அநாமதேய நன்கொடையாளர் ஒருவர் 23 ஏக்கர் நிலத்தை நவம்பர் 2010 இல் வழங்கினார்.[6] சான் ஹோசேயில் பாலாஜி கோவிலுக்கான நிரந்தர மையம் 2012 ஆம் ஆண்டு மே 30 - ஜூன் 3 தேதிகளில் திறக்கப்பட்டது.[7] சமூகத்திற்கான பங்களிப்புக்காக கலிபோர்னியா மாநில சட்டமன்றத்தின் அங்கீகார சான்றிதழையும் இக்கோவில் பெற்றது.[8]

2010 ஆம் ஆண்டில், பாலாஜி கோயில் இந்தியாவின் பெங்களூரில் ஒரு சகோதர மையத்தைத் திறந்தது, இந்த மையம் இலவச யோகா வகுப்புகள் மற்றும் தியான வகுப்புகள் போன்ற வகுப்புகளை நடத்தி சமூகத்திற்கு உதவுகிறது.[9]

  • இம்மையத்தின் முகவரி: 94, விநாயக லேஅவுட், 2வது நிலை, கல்யாண் நகர், 3வது கிராஸ், 9வது பிளாக், நாகர்பாவி, பெங்களூர்-560072, கர்நாடகா, இந்தியா

மேற்கோள்கள்[தொகு]