உள்ளடக்கத்துக்குச் செல்

லோரேட்டோ கல்லூரி, கொல்கத்தா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லோரேட்டோ கல்லூரி, கொல்கத்தா
படிமம்:Loreto College logo.jpg
நிறுவப்பட்டது1912; 113 ஆண்டுகளுக்கு முன்னர் (1912)
வகைபொதுக்கல்லூரி
முதல்வர்சகோதரி கிறிஸ்டின் குடின்ஹோ
பட்டப்படிப்புஇளங்கலை, இளம் அறிவியல், இளங்கலை கல்வியியல்
பட்ட மேற்படிப்புமுதுகலை
அமைவுசர் வில்லியம் ஜோன்ஸ் சரனி, கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா
இணையதளம்www.loretocollege.in

லோரெட்டோ கல்லூரி என்பது இந்தியாவின் மேற்கு வங்காளத்தின் கொல்கத்தாவி உள்ள மகளிர்கான சிறுபான்மை (கத்தோலிக்க) கல்லூரியாகும். கொல்கத்தா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள இந்த கல்லூரி கலைகள் மற்றும் அறிவியலில் பிரிவில் பயிற்றுவிக்கிறது. 1912 ஆம் ஆண்டில் புனித கன்னி மேரி சேவை நிறுவனத்தின் கீழ் நிறுவப்பட்ட இக்கல்லூரிக்கு ஜனவரி 2021 ஆம் ஆண்டின், நான்காவது சுழற்சியில் தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சில் (என்ஏஏசி) மூலம் 'ஏ' மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

என்ஏஏசி ஆல் மதிப்பீடு செய்யப்பட்ட மேற்கு வங்காளத்தின் முதல் கல்லூரியான இது, 2000 ஆம் ஆண்டில் ஐந்து நட்சத்திரங்களின் அதிகபட்ச மதிப்பீட்டைப் பெற்றுள்ளது.[1]

படிப்புகள்

[தொகு]

இக்கல்லூரி BA (ஹானர்ஸ்), BA (பொது), B.Sc (பொது) மற்றும் B.Sc (ஹானர்ஸ்) போன்ற இளங்கலைப் படிப்புகளை வழங்குகிறது. அந்தந்த பிரிவுகளில் கல்லூரி வழங்கும் படிப்புகள் பின்வருமாறு:

  • BA (ஹானர்ஸ்): a) ஆங்கிலம் b) கல்வி c) வரலாறு d) அரசியல் அறிவியல் e) உளவியல்
  • BA (பொது): கல்லூரியானது ஏதேனும் மூன்று விருப்பத்தேர்வுகளுடன் பட்டப்படிப்பை பின்வரும் சேர்க்கைகளில் ஒன்றை வழங்குகிறது: a) வரலாறு/ அரசியல் அறிவியல்/ கல்வி ஆ) வரலாறு/ கல்வி/ ஆங்கிலம்/ இந்தி/ பெங்காலி இ) புவியியல்/ அரசியல் அறிவியல் ஆங்கிலம்/ இந்தி / பெங்காலி ஈ) பொருளாதாரம்/ வரலாறு/ கல்வி / அரசியல் அறிவியல்
  • B.Sc (பொது): லொரேட்டோ கல்லூரியில் பட்டப்படிப்பைத் தொடரும் மாணவர், கீழே கொடுக்கப்பட்டுள்ள மூன்று விருப்பங்களைச் செய்ய வேண்டும்: a) புவியியல் b) பொருளாதாரம் c) அரசியல் அறிவியல்
  • B.Sc (ஹானர்ஸ்): a) புவியியல் b) உளவியல் c) பொருளாதாரம்

இக்கல்லூரியில் ஆங்கிலத்தில் இளங்கலையிலும் முதுகலையிலும் கல்வியியல் படிப்புகளும் பயிற்றுவிக்கப்படுகிறது.

குறிப்பிடத்தக்க முன்னாள் மாணவர்கள்

[தொகு]

சர்ச்சை

[தொகு]

2023 ஆம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி மேற்கு வங்காளத்தில் அந்தாண்டுக்கான இளங்கலைப் படிப்புகளுக்கான சேர்க்கைகள் தொடங்கப்பட்ட நிலையில், இக்கல்லூரி தனது அறிவிப்பில் அதன் பயிற்றுமொழி "ஆங்கிலம் மட்டுமே" என்றும், பெங்காலி மற்றும் இந்தி போன்ற பிரந்திய மொழிகளில் பள்ளிப்படிப்பை முடித்த விண்ணப்பதாரர்கள் சேர்க்கைக்குக் கருதப்பட மாட்டார்கள் என்றும் கூறப்பட்டிருந்த்து.[2][3] இந்த அறிவிப்பு வங்காள வழியில் படித்த விண்ணப்பதாரர்களை இழிவுபடுத்துவதாகக் கருதப்படுகிறது என்று எழுந்த எதிர்ப்பினால் கல்லூரி நிர்வாகம் அதை பிற்பாடு திரும்பப்பெற்றுக்கொன்டது.[4][5] இதுபோன்ற அறிவிப்புகளை எதிர்காலத்தில் எந்த கல்லூரிகளும் வெளியிடக்கூடாது என்றும் கொல்கத்தா பல்கலைக்கழகம் தெளிவுபடுத்தியுள்ளது.[6] அதைத்தொடர்ந்து, உள்ளூர்-நடுத்தர பள்ளிகளில் பிரந்திய மொழிகளில் படித்து வரும் மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் அறிமுகப்படிப்பை அறிமுகப்படுத்துவதன் மூலம் மொழி இடைவெளியைக் குறைக்க இக்கல்லூரி முயற்சி எடுத்துள்ளது

மேற்கோள்கள்

[தொகு]
  1. "எங்கள் கல்லூரி".
  2. "Loreto College Admission Controversy: বাংলা মাধ্যমের ছাত্রদের ভর্তিতে না! লরেটো কলেজের ফতোয়া নিয়ে বিতর্ক তুঙ্গে, আসরে বাংলা পক্ষ". 2023-07-03. Retrieved 2023-07-04.
  3. "ইংরেজি মাধ্যমের পড়ুয়া ছাড়া ভর্তি নয়, লরেটো কলেজের নির্দেশিকা ঘিরে তুমুল বিতর্ক". Retrieved 2023-07-04.
  4. "Loreto College removes controversial notice". 2023-07-03. Retrieved 2023-07-04.
  5. "Premier Kolkata college earns ire for shutting doors on non-English medium students". 2023-07-03. https://www.thehindu.com/news/cities/kolkata/premier-kolkata-college-earns-ire-for-shutting-doors-on-non-english-medium-students/article67037218.ece. 
  6. "'ইংরেজি মিডিয়ামে না পড়লে ভরতি নয়', বিতর্কিত নোটিশ নিয়ে CU-র প্রশ্নের মুখে লরেটো". 2023-07-04. Retrieved 2023-07-04.