லூவ்வர் அபுதாபி

ஆள்கூறுகள்: 24°32′01″N 54°23′54″E / 24.5336639°N 54.3984611°E / 24.5336639; 54.3984611
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லூவ்வர் அபுதாபி
Louvre Abu Dhabi
اللوفر أبوظبي
Map
நிறுவப்பட்டதுநவம்பர் 8, 2017 (2017-11-08)
அமைவிடம்அபுதாபி, சாஜியாத் தீவு
ஆள்கூற்று24°32′01″N 54°23′54″E / 24.5336639°N 54.3984611°E / 24.5336639; 54.3984611
வகைஓவியக் காட்சியகம்
சேகரிப்பு அளவு35,000 [1]
Deputy Directorஹிஸ்ஸா அல் தஹேரி [2]
இயக்குனர்மானுவல் ரபாடே [2]
கட்டிடக்கலை நிபுணர்ஜீன் நவ்ல்
உரிமையாளர்அபுதாபி சுற்றுலா & கலாச்சாரம் அதிகாரசபை
வலைத்தளம்www.louvreabudhabi.ae/en

லூவ்வர் அபுதாபிLouvre Abu Dhabi ) என்பது ஐக்கிய அரபு நாட்டின் அபுதாபியில் அமைந்துள்ள ஒரு கலை மற்றும் நாகரிக அருங்காட்சியகம் ஆகும். இந்த அருங்காட்சியகம் 2017 நவம்பர் 8 அன்று நிறுவப்பட்டது.[3] இது அபுதாபி நகரம் மற்றும் பிரெஞ்சு அரசாங்கத்திற்கு இடையிலான முப்பது ஆண்டுகால ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகும். அருங்காட்சியகம் சாதிய்யாத் தீவு கலாச்சார மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது ஏறக்குறைய 24,000 சதுர மீட்டர் (260,000 சதுர அடி) அளவு கொண்டது, அதில் 8,000 சதுர மீட்டர் (86,000 சதுர அடி) காட்சியகங்களைக் கொண்டுள்ளது. [4], இது அரேபிய தீபகற்பத்தில் மிகப்பெரிய கலை அருங்காட்சியகம் ஆகும். கட்டுமானத்தின் இறுதிச் செலவு 600 மில்லியன் யூரோ எனக் கணக்கிடப்பட்டுள்ளது. [5].  கூடுதலாக, லூவ்வர் என்ற பெயருடனான கூட்டுக்காக, அபுதாபியால் 525 மில்லியன் அமெரிக்க டாலர் வழங்கப்பட்டது. மேலும் கலைப் பொருள் கடன்கள், சிறப்பு கண்காட்சிகள் மற்றும் நிர்வாக ஆலோசனைகள் போன்ற பரிமாற்றங்களுக்காக கூடுதலாக $ 747 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்கப்படவுள்ளது.[6]

கிழக்கு மற்றும் மேற்கத்திய கலைகளுக்கு இடையிலான இடைவெளியை நிரப்புவதில் கவனம் செலுத்தப்பட்டு உலகெங்கிலும் இருந்து சேகரிக்கப்பட்ட கலைப்படைப்புகள் இந்த அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்படுகின்றன. [7]

வரலாறு[தொகு]

இந்த அருங்காட்சியக உருவாக்கத்தை பிரெஞ்சு பாராளுமன்றம் 2007 அக்டோபர் 9 அன்று அங்கீகரித்தது.  இந்தக் கட்டிட வடிவமைப்பினை ஜீன் நௌவெல் மற்றும் பொறியாளர்கள் ப்யூரோ ஹாபோல்ட் ஆகியோர் செய்தனர்.[8][9] பாரிசின் இன்ஸ்டிட்யூட் டூ மோன்ட் அபேவை ஜீன் நுவல் வடிவமைத்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

சாஜியாத் தீவின் 27 பில்லியன் டாலர் மதிப்பில் மேற்கொள்ளப்பட்ட சுற்றுலா மற்றும் கலாச்சார வளர்ச்சியின் ஒரு பகுதியாக இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியக வளாகத்தில் குகன்ஹைம் அருங்காட்சியகம்[10] மற்றும் ஜெயேடு தேசிய அருங்காட்சியகம் ஆகிய அருங்காட்சியகங்களை உள்ளடக்கிய மூன்று அருங்காட்சியகங்கள் அடங்கியுள்ளன. அரசாங்க ஆதரவு வலைத்தளமான யூஏஏ இண்டெக்டாக்டின் படி:   "பிரஞ்சு அருங்காட்சியகங்கள் முகமை மற்றும் சுற்றுலா அபிவிருத்தி மற்றும் முதலீட்டு நிறுவனம் (TDIC) ஆகியன இணைந்து,  சாதியட் தீவை மேம்படுத்த இணைந்து  செயல்படும். இதன் தலைவராக பிரஞ்சு நிதியாளர் மார்க் லாட்ரிட் டி லச்சாரியேர் இருப்பார் மேலும் ரெவ்யூ டெஸ் டக்ஸ் மோன்ஸின் வெளியீட்டாளராகவும் இருப்பார்."[11] ஜார்ஜ்ஸ் பொம்பிளி மையத்தின் முன்னாள் நிர்வாக இயக்குனரான புருனோ மாகார்ட் நிறைவேற்று இயக்குனரின் பதவியை வகிப்பார்.

வடிவமைப்பு[தொகு]

இடம்[தொகு]

சயாடியட் தீவின் கலாச்சார மாவட்டம், உலக வர்க்க கலாச்சாரங்களின் மிகப்பெரிய ஒற்றைத் தொகுப்பைக் கொண்டுவருவதற்கு திட்டமிட்டுள்ளது.[12] லூவர் அபுதாபியுடன் மேலும்  கூடுதலாக உருவாக்க உத்தேசிக்கப்பட்டவை பின்வருமாறு: 

சியாத் நேஷனல் மியூசியம், ஐக்கிய இராச்சியத்தைச் சார்ந்த கட்டிடக்கலை நிறுவனமான ஃபோஸ்டெர் அண்ட் பார்ட்னர்ரின், லார்ட் நோர்மன் ஃபோஸ்டரின் வழிகாட்டுதலில் வடிவமைக்கப்பட்டது;
ககன்ஹென்ஹைம் அபுதாபி சமகால கலை அருங்காட்சியகம் - உலகின் மிகப்பெரிய மற்றும் மத்திய கிழக்கில் அமைக்கப்பட்டுள்ள ஒரே குகன்ஹென்ஹீம் அருங்காட்சியகம்;  
ஜஹா ஹாட்டினால் வடிவமைக்கப்பட்ட கலை மையம்; டாடா அண்டோவின் கருத்தில் வடிவமைப்பு கொண்ட கடல் அருங்காட்சியகம் மற்றும் பல கலைக்கூடங்கள்.[13]

கட்டடக்கலை[தொகு]

அருங்காட்சியகமானது  "பெரிய மிதக்கும் குவிமாடம் போலத் தோன்றும் அமைப்பைக்" கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது; அதன் வலை வடிவமானது சூரிய ஒளியை வடிகட்ட உதவுவதாக அமைந்துள்ளது. இதன் ஒட்டுமொத்த விளைவு என்பது "பாலைவனச் சோலையில் அமைந்துள்ள சூரிய ஒளிக் கதிர்கள் பேரீச்சை மர உச்சியைக்  கடந்து சென்று அடைவதுபோல" இருக்கும்."[14][15] இந்த அருங்காட்சியகத்தின் மொத்தப் பரப்பளவு 24,000 சதுர மீட்டர் (260,000 சதுர அடி) ஆகும்.   நிரந்தர சேகரிப்பு பொருட்கள் 6,000 சதுர மீட்டர் (65,000 சதுர அடி) இடத்தைக் கொண்டதாக இருக்கும். மேலும் தற்காலிக கண்காட்சிகளுக்கு 2,000 சதுர மீட்டர் (22,000 சதுர அடி) ஒதுக்கப்பட்டுள்ளது,

மேற்கோள்கள்[தொகு]

  1. "France to Open New Louvre in Abu Dhabi - washingtonpost.com". 19 December 2017 அன்று பார்க்கப்பட்டது.
  2. 2.0 2.1 "Louvre Abu Dhabi Director and Deputy Director appointed". 19 December 2017 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Emmanuel Macron and UAE leaders formally open Louvre Abu Dhabi".
  4. "The Louvre Abu Dhabi - Louvre Museum - Paris". 6 September 2017.
  5. "Subscribe to read". 2017-11-12 அன்று பார்க்கப்பட்டது.
  6. "Riding, Alan". த நியூயார்க் டைம்ஸ். 2007-03-07. https://www.nytimes.com/2007/03/07/arts/design/07louv.html. பார்த்த நாள்: 2008-09-09. 
  7. "Vincent Van Gogh, Andy Warhol, Claude Monet and Henri Matisse in Louvre Abu Dhabi". Glammonitor. 2014-10-21. Archived from the original on 2014-10-23. https://web.archive.org/web/20141023185940/http://www.glammonitor.com/2014/10/21/middle-eastern-art-lovers-rejoice-louvre-finally-coming-abu-dhabi/. பார்த்த நாள்: 2014-10-21. 
  8. "Le "Louvre Abu Dhabi" verra bien le jour" (French). Le Figaro. 9 October 2007. Italic or bold markup not allowed in: |publisher= (உதவி)CS1 maint: Unrecognized language (link)
  9. Robinson, Victoria (7 January 2008). "Abu Dhabi and Paris sign museam deal". MEED. 2008-09-12 அன்று பார்க்கப்பட்டது.
  10. "Feu vert du parlement français au futur musée "Louvre Abou Dhabi"". AFP. 9 June 2007 அன்று மூலம் பரணிடப்பட்டது. Italic or bold markup not allowed in: |publisher= (உதவி)
  11. "French cultural agency to steer work on Louvre Abu Dhabi". UAE Interact. 2007-08-13. 2009-02-11 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2008-09-17 அன்று பார்க்கப்பட்டது.
  12. "French Culture Minister heads delegation to UAE capital to seal Louvre Abu Dhabi operating framework". AME Info. 7 January 2008. 30 October 2008 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2008-09-16 அன்று பார்க்கப்பட்டது.
  13. "Louvre Abu Dhabi". Nafas Art Magazine. 2007. 2008-09-26 அன்று பார்க்கப்பட்டது.
  14. "Louvre, Abu Dhabi". Wallpaper. 2007-05-07. 11 February 2009 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2008-09-16 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லூவ்வர்_அபுதாபி&oldid=3659200" இருந்து மீள்விக்கப்பட்டது