லூயிஸ் மராண்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லூயிஸ் மராண்டி
ஜார்க்கண்ட் சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
டிசம்பர் 2014 – டிசம்பர் 2019
முன்னையவர்ஹேமந்த் சோரன், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா
பின்னவர்ஹேமந்த் சோரன், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா
தொகுதிதும்கா
சிறுபான்மை நலன், சமூக நலன் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர்
ஜார்க்கண்ட் அரசு
பதவியில்
28 டிசம்பர் 2014 – 23 டிசம்பர் 2019
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புதும்கா, இந்தியா
தேசியம்இந்தியன்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்பிரெண்டியஸ் கிஸ்கு
பிள்ளைகள்2 மகன்கள்
வாழிடம்(s)தும்கா, ஜார்க்கண்ட்
முன்னாள் கல்லூரிராஞ்சி பல்கலைக்கழகம்
வேலைஅரசியல்வாதி

லூயிஸ் மராண்டி (Louis Marandi) பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த ஒரு இந்திய அரசியல்வாதியும், ஜார்க்கண்ட் அரசில் சிறுபான்மை நலன், சமூக நலன், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு உள்ளிட்ட நலன்புரி போன்ற அமைச்சரவை அமைச்சராக உள்ளார்.[1][2][3][4][5][6]

சட்டமன்றத் தேர்தல்[தொகு]

இவர், ஜார்கண்ட் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த ஒரே பிரபலமான பெண் தலைவராவார். கட்சியில் இவர் பல்வேறு முக்கிய பதவிகளை வகித்துள்ளார். முன்னதாக ஜார்க்கண்ட் பாரதிய ஜனதா கட்சியின் பெண்கள் பிரிவின் தலைவராக இருந்தார். இவர் ஜார்க்கண்ட் பெண்கள் ஆணையத்தின் உறுப்பினராகவும் இருந்தார். ஜார்கண்டின் பல்வேறு கல்லூரிகளில் சந்தாளி பாடத்தில் விரிவுரை செய்துள்ளார். ஜார்க்கண்டின் 2009 சட்டமன்றத் தேர்தலில் தும்கா சட்டமன்றத் தொகுதியில் பாரதிய ஜனதா வேட்பாளராக போட்டியிட்டார். ஜார்கண்ட் முதல்வரும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சித் தலைவருமான சிபு சோரனின் மகன் ஹேமந்த் சோரனால் சுமார் 3000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டார்.

ராஜ்நாத் சிங் அணியில் 2012 ஆம் ஆண்டில் பாஜகவின் தேசிய செயலாளராக இவர் வகித்த மிகப்பெரிய பதவிகளில் ஒன்று. 2014 ஜூன் மாதம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், பாஜகவின் உள் அரசியல் காரணமாக அந்தத் தேர்தலில் தும்கா தொகுதியில் போட்டியிட முடியாவிட்டாலும், ஜார்கண்டின் 14 இடங்களில் 12 இடங்களை வென்றெடுப்பதில் இவர் முக்கிய பங்கு வகித்தார்.

சட்டமன்ற உறுப்பினர்[தொகு]

2014இல் நடந்த சட்டமன்றத் தேர்தலில், சார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனை 5262 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து ஜார்க்கண்ட் அரசியலின் சக்திவாய்ந்த தலைவரானார். இப்போது இவர் பாஜக தலைமையிலான ஜார்க்கண்ட் அரசாங்கத்தின் அமைச்சரவையில் அமைச்சராக உள்ளார். இவர் ஜார்கண்ட் அரசாங்கத்தில் சந்தால் பர்கன்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.[7]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Council of Ministers". Archived from the original on 2015-01-01. பார்க்கப்பட்ட நாள் 2021-07-13.
  2. LOUIS MARANDI VISITS TRI
  3. My Neta
  4. Why there’s a storm brewing in Jharkhand over who gets to be called a resident
  5. Mishra, Sandeep (24 December 2014). "Louis Marandi: Lone Christian in saffron club". The Times of India. https://timesofindia.indiatimes.com/home/specials/2014-assembly-elections/jharkhand-news/Louis-Marandi-Lone-Christian-in-saffron-club/articleshow/45623853.cms. பார்த்த நாள்: 23 June 2019. 
  6. "Govt serious on minority affairs: Louis Marandi". Archived from the original on 2016-09-10. பார்க்கப்பட்ட நாள் 2021-07-13.
  7. BJP barb at Santhal Pargana leaders
"https://ta.wikipedia.org/w/index.php?title=லூயிஸ்_மராண்டி&oldid=3792637" இலிருந்து மீள்விக்கப்பட்டது