லிலா திரெடிகோவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லிலா திரெடிகோவ்
ஹோராசிஸ் உலகளாவிய கூட்டத்தில் ட்ரெடிகோவ் பேசுகிறார்; போர்த்துகீசிய ரிவியரா, 2017.
தாய்மொழியில் பெயர்Ляля Третьякова
பிறப்புஓல்கா திரெட்டியாகோவா
சனவரி 25, 1978 (1978-01-25) (அகவை 46)
மாஸ்கோ,[1][2] சோவியத் சோசலிச குடியரசுகளின் ஒன்றியம்
தேசியம்உருசியன்
பணிவிக்கிமீடியா அறக்கட்டளையின் முன்னாள் நிர்வாக இயக்குனர்

லிலா திரெடிகோவ் (Lila Tretikov) ஓல்கா என்றப் பெயரில் மாஸ்கோவில் 1978 சனவரி 25 அன்று பிறந்த இவர் [3] [4] ஒரு உருசிய-அமெரிக்க பொறியியலாளரும் மேலாளரும் ஆவார். இவர் 2014 முதல் 2016 வரை விக்கிப்பீடியாவை இயக்கும் மற்றும் அதன் தன்னார்வப் படைகளை ஆதரிக்கும் இலாப நோக்கற்ற அமைப்பான விக்கிமீடியா அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநராக இருந்தார்.

மாஸ்கோவில் பிறந்த திரெடிகோவ் ஒரு இளைஞியாக அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தார். 1999இல் கலிபோர்னியாவில் ஒரு மென்பொருள் பொறியாளராக பணியாற்றத் தொடங்கினார். அங்கு இவர் பல மென்பொருள் காப்புரிமைகளை இணைந்து எழுதியுள்ளார். மேலும் தொழில்நுட்ப சந்தைப்படுத்தல் நிறுவனத்தையும் நிறுவினார். தொழில் பயன்பாட்டு மென்பொருளில் நிபுணரான இவர், சுகர் சிஆர்எம் இன்க் நிறுவனத்தின் தலைமை தகவல் அதிகாரியாகவும், பொறியியல் துணைத் தலைவராகவும் இருந்தார். 2014 ஆம் ஆண்டில் விக்கிமீடியா அறக்கட்டளையில் 200 விண்ணப்பதாரர்களிடமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். சூ கார்ட்னருக்குப் பிறகு இவர் இதில் பணியாற்றினார். இவர் 2016இல் விக்கிமீடியாவை விட்டு வெளியேறினார். [5] [6]

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி[தொகு]

திரெடிகோவ் உருசிய பாரம்பரியத்தைச் சேர்ந்தவராவார். இவரது தந்தை ஒரு கணிதவியலாளர், மற்றும் இவரது தாய் ஒரு திரைப்பட தயாரிப்பாளராக இருந்தார். [7] 15 வயதில் நியூயார்க் நகரத்திற்குச் சென்ற பின், [8] இவர் பணியாளராக இருந்தபோது ஆங்கிலம் கற்றுக் கொண்டார். இவர் பெர்க்லியின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பைப் பயின்றார். ஆனால் பட்டப்படிப்பை முடிப்பதற்கு முன்பு அங்கிருந்து வெளியேறினார். [9] இவரது முக்கிய பாடமாக கணினி அறிவியல் மற்றும் கலை ஆகியவை இருந்தன. மேலும், இவர் இயந்திர கற்றல் ஆராய்ச்சியில் ஈடுபட்டார் .

திரெடிகோவ் விக்கிமீடியா அறக்கட்டளையின் ஊழியர்களுக்கு தன்னை அறிமுகப்படுத்துகிறார்.

தொழில்[தொகு]

1999ஆம் ஆண்டில், திரெடிகோவ் சன் மைக்ரோசிஸ்டம்ஸில் சன்-நெட்ஸ்கேப் கூட்டணியில் பொறியாளராக தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார். அங்கு இவர் ஜாவா சேவையகத்தில் பணிபுரிந்தார். பின்னர் இவர் தொழில்நுட்ப சந்தைப்படுத்தல் நிறுவனமான க்ரோக் டிஜிட்டலை நிறுவினார். பின்னர் சுகர் சிஆர்எம் இன்க் நிறுவனத்தில் தலைமை தகவல் அதிகாரியாகவும் பொறியியல் துணைத் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். [10] 2012 ஆம் ஆண்டில், வணிக சேவைகளில் "ஆண்டின் பெண் நிர்வாகி" விருதும், கணினி வன்பொருள் மற்றும் மென்பொருள் "பிரிவில் ஸ்டீவி விருதுகளில் வெண்கலமும் வென்றவர். [11] அறிவார்ந்த தரவு மேப்பிங் மற்றும் டைனமிக் மொழி பயன்பாடுகளில் பல காப்புரிமைகளை இவர் இணைந்து எழுதியுள்ளார். [12]

சூ கார்ட்னருக்கு அடுத்தபடியாக திரெடிகோவ் 2014 மே மாதத்தில் விக்கிமீடியா அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டு, [13] 2014 சூன் 1, அன்று இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். இவர் நியமனம் செய்வதற்கு ஒரு முறை மட்டுமே விக்கிப்பீடியாவில் திருத்தியிருந்தார். [9] விக்கிமீடியா அறக்கட்டளையின் சர்ச்சைக்குரிய அறிவு பொறி திட்டம் மற்றும் ஊழியர்களுடனான கருத்து வேறுபாடுகள் ஆகியவற்றின் விளைவாக திரெடிகோவ் விக்கிமீடியா அறக்கட்டளையை விட்டு 2016 மார்ச் 31 அன்று வெளியேறினார். [14] 2016 மார்ச்சில் கேத்ரின் மகேர் இவருக்குப் பின் விக்கிமீடியா அறக்கட்டளையில் சேர்ந்தார்.

2016 மார்ச் 16, அன்று, திரெடிகோவ் " இளம் உலகளாவிய தலைவர்கள் " சமூகத்தில் சேர உலக பொருளாதார மன்றத்தால் அழைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. [15] திரெடிகோவ் ஓபன்எட் மற்றும் ராக்ஸ்பேஸின் குழுவிலும் இருக்கிறார். [16]

குறிப்புகள்[தொகு]

 1. "Lila Tretikov". CrunchBase. பார்க்கப்பட்ட நாள் May 10, 2014.
 2. Wikimedia is headed by an American of Russian origin. RIA Novosti
 3. Note: "Lyalya" is a Russian-language diminutive from the first name "Olga".
 4. Wikimedia Monthly Metrics and Analytics Meeting, May 2014
 5. Hern, Alex (February 26, 2016). "Head of Wikimedia resigns over search engine plans". தி கார்டியன். https://www.theguardian.com/technology/2016/feb/26/wikimedia-head-lila-tretikov-resigns-search-engine-plans. 
 6. "Online-Enzyklopädie: Chefin der Wikipedia-Stiftung tritt zurück". Spiegel Online. February 26, 2016. http://www.spiegel.de/netzwelt/web/wikipedia-streit-um-knowledge-engine-lila-tretikov-tritt-zurueck-a-1079448.html. 
 7. "Women band together, make inroads into tech" by Jon Swartz, USA Today, November 27, 2012.
 8. "Wikipedia 15: Lightning Talk Session". யூடியூப். January 16, 2016. பார்க்கப்பட்ட நாள் March 30, 2016.
 9. 9.0 9.1 Seligman, Katherine (May 13, 2014). "The Woman To Run Wikipedia: Russian-born Former Cal Student Seen as "White Unicorn"". California Magazine. UC Berkeley. Archived from the original on ஆகஸ்ட் 24, 2014. பார்க்கப்பட்ட நாள் January 1, 2020. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
 10. Executive Profile: Lila Tretikov, Bloomberg Businessweek, 2014. Retrieved May 1, 2014. Archived here.
 11. "Stevie Awards For Women in Business: 2012 Stevie Award Winners". stevieawards.com. Fairfax, VA: Stevie Awards, Inc. பார்க்கப்பட்ட நாள் May 1, 2014.
 12. "Patent Search". United States Patent and Trademark Office. பார்க்கப்பட்ட நாள் May 1, 2014.
 13. Elder, Jeff. "Wikipedia's New Chief: From Soviet Union to World's Sixth-Largest Site". Wall Street Journal. பார்க்கப்பட்ட நாள் May 2, 2014.
 14. Lila Tretikov (February 25, 2016). "Thank you for our time together". Wikimedia Foundation.
 15. "Meet the Young, Tech-Savvy, Civic-Minded Innovators Driving The Fourth Industrial Revolution - Press releases". World Economic Forum. March 16, 2016. பார்க்கப்பட்ட நாள் March 30, 2016.
 16. "Rackspace Appoints Lila Tretikov to Board of Directors". Digital Journal. September 22, 2014.

வெளி இணைப்புகள்[தொகு]

லிலா திரெடிகோவ் பற்றிய மேலதிக தகவல்களைப் பார்க்க தொடர்புடையத் திட்டங்கள்:

விக்சனரி விக்சனரி
நூல்கள் விக்கிநூல்
மேற்கோள் விக்கிமேற்கோள்
மூலங்கள் விக்கிமூலம்
விக்கிபொது
செய்திகள் விக்கிசெய்தி


"https://ta.wikipedia.org/w/index.php?title=லிலா_திரெடிகோவ்&oldid=3767625" இலிருந்து மீள்விக்கப்பட்டது