கேத்ரீன் மேகர்
கேத்ரீன் மேகர் Katherine Maher | |
---|---|
2016 இல் மேகர் | |
தேசியம் | அமெரிக்கர் |
படித்த கல்வி நிறுவனங்கள் | நியுயார்க் பல்கலைக்கழகம் |
பணி | நிர்வாக இயக்குனர், விக்கிமீடியா நிறுவனம் |
வலைத்தளம் | |
twitter |
கேத்ரீன் மேகர் (Katherine Maher) விக்கிமீடியா நிறுவனத்தின் (WMF) நிர்வாக இயக்குனர் ஆவார்.
கல்வி
[தொகு]2002 முதல் 2003 வரை கெய்ரோவில் உள்ள அமெரிக்க பல்கலைக்கழகத்தின் அரபு மொழி நிறுவனத்தில் கேத்ரீன் மேகர் கல்வி கற்றார். பின்னர் 2003 முதல் நியுயார்க் பல்கலைக்கழகத்தின் அறிவியல் மற்றும் கலைக் கல்லூரியில் படித்து 2005 ஆம் ஆண்டில் தன்னுடைய பட்டப்படிப்பை முடித்தார்[1].
வாழ்க்கை
[தொகு]2016 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் முதல் விக்கிமீடியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக தற்காலிகமாக பணியமர்த்தப்பட்ட மேகர், இதே ஆண்டின் சூன் மாதம்[2] முதல் அதே பதவியில் நிரந்தம் செய்யப்பட்டார். 2014 ஆம் ஆண்டு ஏப்ரல்[2] மாதம் முதல் இந்நிறுவனத்தின் தகவல் தொடர்பு அதிகாரியாக இயங்கிவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக இவர் உலக வங்கி, ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் போன்ற அலுவலகங்களிலும் மற்றும் இலாப நோக்கற்ற ஆக்சசு நௌ.ஆர்க்[3] (AccessNow.org) என்ற நிறுவனத்தில் பரிந்துரை இயக்குனராகவும்[2][4][5] பணிபுரிந்துள்ளார்.
உலக வங்கியின் மக்களாட்சிமயமாக்கம் மற்றும் அனைத்துலக வளர்ச்சிக்கான தொழில்நுட்பப் பிரிவில் மேகர் ஓர் ஆலோசகராகப் பணியாற்றியுள்ளார். தகவல் தொடர்பு தொழில்நுட்பத் துறையில், அலைபேசித் தொழில்நுட்பத்துறையில் கவனம் செலுத்துபவராக, குறிப்பாக மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க [6][7] குடிமக்களுக்காகவும் நிறுவனச் சீர்த்திருத்தத்திற்காகவும் பொறுப்பேற்று பணியாற்றியுள்ளார். தகவல் மற்றும் தொலைத்தொடர்பு அபிவிருத்தியில் அலைபேசிகளை அதிகப்படுத்துதல் தொடர்பாக உலக வங்கி வெளியிட்ட ’அரசு அலைபேசிகள் உருவாக்கல்’ என்ற படைப்பாக்கத்தில் (2012) இவர் ஓர் இணை ஆசிரியராக இருந்து செயல்பட்டுள்ளார்[8]
விக்கிமீடியா நிறுவனத்தில் முதன்மை தகவல் தொடர்பு அதிகாரியாக ஏப்ரல் 2014 இல்[2][9][10] இணைந்த மேகர், அங்கிருந்து ஐக்கியநாடுகளின் பதிப்புரிமை சட்டம்[11] குறித்து கருத்துரைத்தார். கிட்டத்தட்ட இரண்டாண்டுகளுக்குப் பின்னர், நிர்வாக இயக்குனராக பணியாற்றிய லீலா டிரெட்டிக்கோவ்[12] பதவி விலகியதைத் தொடர்ந்து, மார்ச்சு 2016[4] இல் நிறுவனத்தின் இடைக்கால நிர்வாக இயக்குநராக மேகர் நியமிக்கப்பட்டார். 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற விக்கிமேனியாவில் சூன் மாதம் 24-ம் தேதி அன்று விக்கிமீடியா நிறுவனத்தின் நிறுவனர் யிம்மி வேல்சு கேத்தரின் மேகருக்கு நிர்வாக இயக்குனருக்கான நிரந்தரப் பணியை வழங்கினார்[13].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "NYU Class Notes". NYU Alumni Magazine: 59. Spring 2014. https://www.nyu.edu/alumni.magazine/issue22/pdf/NYU22.pdf.
- ↑ 2.0 2.1 2.2 2.3 "Katherine Maher joins the Wikimedia Foundation as Chief Communications Officer". Wikimedia Foundation. April 15, 2014. பார்க்கப்பட்ட நாள் March 11, 2016.
- ↑ "The New Westphalian Web". February 25, 2013. பார்க்கப்பட்ட நாள் March 11, 2016.
- ↑ 4.0 4.1 Lorente, Patricio (March 16, 2016). "Wikimedia Foundation Board of Trustees welcomes Katherine Maher as interim Executive Director". Wikimedia Foundation. https://blog.wikimedia.org/2016/03/16/board-welcomes-katherine-maher/. பார்த்த நாள்: March 17, 2016.
- ↑ "No, the U.S. Isn't 'Giving Up Control' of the Internet". Politico. March 19, 2014. Archived from the original on ஆகஸ்ட் 6, 2020. பார்க்கப்பட்ட நாள் March 19, 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Wamda (October 9, 2012). "Resisting Internet Censorship: Katherine Maher of Access at SHARE Beirut" (video). பார்க்கப்பட்ட நாள் 2016-04-11.
- ↑ "People – Katherine Maher". Youth for Technology Foundation. Archived from the original on மார்ச் 13, 2016. பார்க்கப்பட்ட நாள் March 11, 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Siddhartha Raja and Samia Melhem with Matthew Cruse, Joshua Goldstein, Katherine Maher, Michael Minges, and Priya Surya (2012). "Making Government Mobile". Information and Communications for Development: Maximizing Mobile (PDF). Washington D.C.: World Bank. pp. 87–102.
- ↑ Fitzsimmons, Michelle (January 16, 2016). "Wikipedia is still disrupting after 15 years". Tech Radar. பார்க்கப்பட்ட நாள் March 11, 2016.
- ↑ Bradley, Diana (May 15, 2014). "Katherine Maher joins the Wikimedia Foundation as Chief Communications Officer". PRWeek. பார்க்கப்பட்ட நாள் March 11, 2016.
{{cite web}}
: Italic or bold markup not allowed in:|publisher=
(help) - ↑ Phillip, Abby (August 6, 2014). "If a monkey takes a selfie in the forest, who owns the copyright? No one, says Wikimedia". The Washington Post. WP Company Llc. பார்க்கப்பட்ட நாள் 2016-07-18.
- ↑ "Thank you for our time together". Lila Tretikov. February 25, 2016.
- ↑ "Foundation Board appoints Katherine Maher as Executive Director". Wikimedia Foundation. பார்க்கப்பட்ட நாள் 24 June 2016.