லினசு டோர்வால்டுசு
லினசு டோர்வால்டுசு | |
---|---|
![]() லினசு பெனெடிக் வோர்வால்சு 2014ஆம் ஆண்டு | |
பிறப்பு | திசம்பர் 28, 1969 ஹெல்சின்கி, பின்லாந்து |
இருப்பிடம் | போர்ட்லாண்ட், ஒரிகான் |
தேசியம் | பின்லாந்து நாட்டவர் |
பணி | மென்பொருள் உருவாக்குனர் |
பணியகம் | லினக்சு நிறுவனம்(Linux Foundation) |
அறியப்படுவது | லினக்சு கரு, கிட் |
பெற்றோர் | நில்ஸ் டோர்வால்டுசு(தந்தை அன்னா டோர்வால்டுசு(தாய்)[1] |
வாழ்க்கைத் துணை | டோவ் டோர்வால்டுசு |
லினசு பெனெடிக் வோர்வால்சு (லினஸ் டோர்வால்ஸ்; Linus Benedict Torvalds; ˈliːnɵs ˈtuːrvalds]) பின்லாந்தின் கேல்சிங்கி நகரில் பிறந்தார்.இவர் ஒரு பின்லாந்து மென்பொருள் உருவாக்குநர். இவர் லினக்சு கருவின் உருவாக்கத்திற்காகவும், ஜிட் திருத்தக் கட்டுப்பாட்டு மென்பொருளுக்காகவும் அறியப்படுகிறார். இவர் மிகச் சிறந்த கட்டற்ற திறந்த மென்பொருள் ஆக்கர்களில் ஒருவர் ஆவார்.
லினஸ், லினக்ஸ் தொடர்பு[தொகு]
டோர்வால்ஸ் தான் உருவாக்கிய இயங்குதள கருவிற்கு ஃபிரீக்ஸ் (Freax-'free', 'freak' ஆகிய இரண்டு வார்த்தைகளின் கலப்பு, கூடவே இது யுனிக்ஸ்(Unix) போன்ற அமைப்பு என்பதைக் குறிக்க ஆங்கில எழுத்து X) என்றே பெயரிட விரும்பினார். ஆனால், லினக்சு கரு தரவிறக்கத்திற்காக வைக்கப்பட்டிருந்த எஃப்டிபி வழங்கிக்கணினியை(FTP Server) நிர்வகித்து வந்த அவரது நண்பர் ஆரி லெம்கே(Ari Lemmke), டோர்வால்சின் அடைவிற்கு லினக்ஸ் என்று பெயரிட்டிருந்தார். பின்னர் அதுவே நிலைத்துவிட்டது.
லினக்சில் அதிகாரம் மற்றும் வணிகக்குறியீடு[தொகு]
2006ஆம் ஆண்டின்படி அப்பொழுது புழக்கத்திலிருந்த(பல மாறுதல்களுக்கும், திருத்தங்களுக்கும் பின்னர்) லினக்சு கருவின் மூல நிரலில் சுமாராக இரண்டு சதவீதம் மட்டுமே டோர்வால்டுசால் எழுதப்பட்டிருக்கிறது[2]. லினக்சு கருவிற்குப் பல்லாயிரக்கணக்கானோர் பங்களிக்கும் நிலையிலும் இவருடைய பங்களிப்பே மிக அதிகமாக உள்ளது. ஆனால், 2012ஆம் ஆண்டு வாக்கில் இவர் தனது பங்களிப்பு என்பது பெரும்பாலும் மற்றவர்கள் எழுதிய மூல நிரல்களை லினக்சு கருவுடன் ஒன்றாக்குவதே[3], தான் குறைந்த அளவே நிரலெழுதுவதாக குறிப்பிட்டுள்ளார். லினக்சு கருவுடன் எந்த நிரல் இணைக்கப்படவேண்டும் என்பதை முடிவு செய்யும் இறுதி அதிகாரம் டோர்வால்டுசிடமே இருக்கிறது. மேலும், இவரே லினக்சிற்கான வணிகக்குறியீட்டை சொந்தமாகக்கொண்டுள்ளதோடு, அதன் பயன்பாட்டு கண்காணிப்பையும் லினக்சு மார்க் நிறுவனத்தின் வழியாக செய்துவருகிறார்[4].
அங்கீகாரங்கள்[தொகு]
இன்டர்நெட் ஹால் ஆஃப் ஃபேம்(Internet Hall of Fame)[தொகு]
ஏப்ரல் 23, 2012-ல் சுவிட்சர்லாந்திலுள்ள ஜெனீவாவில் நடந்த இணையச் சமூகத்தின்(Internet Society) உலகலாவிய ஐநெட்(INET) மாநாட்டின் இன்டர்நெட் ஹால் ஆஃப் ஃபேம்-ல் டோர்வால்டுசு தொடக்க உறுப்பினர்களுள் ஒருவராகவும், புதுமைப் புனைவாளர்(Innovators) பிரிவில் பத்துப்பேரில் ஒருவராகவும், மொத்தமுள்ள 33 தொடக்க உறுப்பினர்களுள் ஒருவராகவும் இருந்தார்[5].
மில்லேனியம் தொழில்நுட்பப் பரிசு[தொகு]
ஏப்ரல் 20, 2012 -ல் தொழில்நுட்ப உலகின் நோபல் பரிசு எனப் பரவலாக அறியப்படும் மில்லேனியம் தொழில்நுட்பப் பரிசை(Millennium Technology Prize) வெல்லும் இருவரில் ஒருவராக அறிவிக்கப்பட்டார்[6]. டோர்வால்டுசு இப்பரிசை ஷின்யா யமானாகா(Shinya Yamanaka)[7] உடன் பகிர்ந்துகொண்டார்.
கல்வி[தொகு]
பாடசாலையில் கணிதம், அறிவியல் பாடங்களில் சிறந்து விளங்கிய அதே நேரத்தில் வரலாறு புவியியில் கவனம் இருக்கவில்லை.1997-ம் ஆண்டு டோர்வால்டுசு தன்னுடைய முதுநிலை பட்டத்தை(ஆங்கிலம்:Laudatur Grade) ஹெல்சின்கி பல்கலைக்கழகத்தின் கணினித்துறையிலிருந்து பெற்றார். இரண்டு வருடங்களுக்குப் பிறகு ஸ்டாக்ஹோம் பல்கலைக்கழகத்திலிருந்து கௌரவ முனைவர் பட்டம் பெற்றார். அதன்பிறகு, 2000-ம் ஆண்டு தான் கல்வி பயின்ற அதே ஹெல்சின்கி பல்கலைக்கழகத்திலிருந்தும் கௌரவ முனைவர் பட்டத்தைப் பெற்றார். ஆகஸ்டு 2005-ல் ரீடு கல்லூரியில் இருந்து வோல்லும் விருதை(Vollum Award) பெற்றார்[8].1998 இல் லினசு டோர்வால்டுசு ஒரு இ எப் எப் பியோனீர் விருது பெற்றார். 2000 ஆம் ஆண்டில் அவருக்கு லவ்லேஸால் பதக்கம் வழங்கி பிரித்தானிய கணினி சமூகம் கௌரவித்தது. 2001 ஆம் ஆண்டில், அவர் சமூக / பொருளாதார ரிச்சர்ட் ஸ்டால்மேன் மற்றும் கென் சகமுராக்கான டகெடா விருது பெற்றார்.இவர் தகவல் தொழில்நுட்ப துறை, கல்வி, ஆராய்ச்சி, மற்றும் நம் வாழ்வில் முன்னேற்றத்திற்கான பங்களிப்புக்காக 2010 இல் என் இ சி கார்ப்பரேஷன் சி & சி பரிசைப் பெற்றார்.
வானியல்[தொகு]
1996-ல் ஒரு சிறுகோளுக்கு டோர்வால்டுசின் நினைவாக 9793 டோர்வால்டுசு எனப் பெயரிடப்பட்டது.
காப்புரிமைகள்[தொகு]
மார்ச் 2011 வரை டோர்வால்டுசுக்கு உலக அளவில் 35 காப்புரிமைகள் கொடுக்கப்பட்டுள்ளது(விண்ணப்பித்த மற்றும் கொடுக்கப்பட்ட காப்புரிமைகள்)[9].
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Linux Online - Linus Torvalds Bio" இம் மூலத்தில் இருந்து 2010-08-15 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100815075326/http://www.linux.org/info/linus.html.
- ↑ "மொத்த நிரலில் இரண்டு சதவீதம் டோர்வால்டுசால் எழுதப்பட்டிருந்தது.". http://www.linfo.org/linus.html. பார்த்த நாள்: 31 மார்ச்சு 2013.
- ↑ "மற்றோரின் நிரல்களை லினக்சு கருவுடன் ஒன்றாக்குவதே என் தலையாய வேலையாகவுள்ளது". http://techcrunch.com/2012/04/19/an-interview-with-millenium-technology-prize-finalist-linus-torvalds/. பார்த்த நாள்: 31 மார்ச்சு 2013.
- ↑ "லினக்சு வணிகக்குறியீடு விவகாரங்கள் குறித்து". http://slashdot.org/story/00/01/19/0828245/linus-explains-linux-trademark-issues. பார்த்த நாள்: 31 மார்ச்சு 2013.
- ↑ "இன்டர்நேட் ஹால் ஆஃப் ஃபேமில் லினசு டோர்வால்டுசு". http://www.internethalloffame.org/inductees. பார்த்த நாள்: 31 மார்ச்சு 2013.
- ↑ "லினசு டோர்வால்டுசு மில்லேனியம் தொழில்நுட்பப் பரிசைப் பெறுகிறார்". http://www.zdnet.com/blog/open-source/linus-torvalds-wins-the-tech-equivalent-of-a-nobel-prize-the-millennium-technology-prize/10789. பார்த்த நாள்: 31 மார்ச்சு 2013.
- ↑ "ஷின்யா யாமனாகா மில்லேனியம் தொழில்நுட்பப் பரிசைப் பெறுகிறார்" இம் மூலத்தில் இருந்து 2012-04-21 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120421172640/http://www.yomiuri.co.jp/dy/national/T120420004348.htm. பார்த்த நாள்: 31 மார்ச்சு 2013.
- ↑ "லினசு டோர்வால்டுசு வோல்லும் விருதை பெற்றார்". http://web.reed.edu/news_center/press_releases/2005-2006/082205LinuxCreator.html. பார்த்த நாள்: 31 மார்ச்சு 2013.
- ↑ "டோர்வால்டுசின் காப்புரிமங்கள்" இம் மூலத்தில் இருந்து 2013-12-25 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131225041041/http://www.directoryinventor.com/people/uXelB5u/linus-torvalds.html. பார்த்த நாள்: 01 ஏப்ரல் 2013.