லாஹி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
லாஹி
လဟယ်မြို့
லாஹி is located in Myanmar
லாஹி
லாஹி
Location in Burma
ஆள்கூறுகள்: 26°19′31″N 95°26′34″E / 26.32528°N 95.44278°E / 26.32528; 95.44278ஆள்கூறுகள்: 26°19′31″N 95°26′34″E / 26.32528°N 95.44278°E / 26.32528; 95.44278
நாடுமியான்மர்
பிரிவுசாகைங் பிரதேசம்
ஏற்றம்3,387
மக்கள்தொகை (2005)
நேர வலயம்MST (ஒசநே+6.30)

லாஹி மியான்மரின் வட மேற்குப் பகுதியில் சாகைங் பிரதேசத்தில் உள்ள நாகா மலைப்பிரதேசத்தில் இருக்கும் ஒரு நகரம். 2008 அரசியலமைப்பின் சட்டத்தின் படி இப்போது இந்நகரம் நாகா சுயாட்சி மண்டலத்தின் ஒரு பகுதியாக இருக்கிறது. [1]

மியான்மரில் சுற்றுலாவை மேம்படுத்தும் விதமாக நாகா இன மக்களின் புது வருடப்பிறப்புக் கொண்டாட்டங்கள் ஒரு வட்டச் சுழற்சியாக நாகா சுயாட்சி மண்டலத்தில் இருக்கும் லாஹி, லீசி, நான்யுன் ஆகிய நகரங்களில் ஒவ்வொரு முறையாக நடத்தப்படுகிறது. [2][3]

இந்திய அரசாங்கத்திற்கு எதிராகப் போராடும் நாகா எழுச்சியாளர்கள் பர்மாவிற்குள் நாகா சுயாட்சி மண்டலத்தின் எல்லைப் பகுதியில் தளங்களைக் அமைத்துக் கொண்டுள்ளனர். இரு நாடுகளுக்கும் இடையிலான உயர்மட்ட சந்திப்புகளுக்குப் பின்னர் சமீப ஆண்டுகளில் பர்மிய இராணுவம் இந்த முகாம்களுக்கு எதிராக தாக்குதல்களை நடத்தியிருக்கிறது. [4]

மேற்கோள்கள்[தொகு]

வெளிப்புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=லாஹி&oldid=2759577" இருந்து மீள்விக்கப்பட்டது