லாம்டா
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
![]() |
விக்சனரியில் Λ or λ என்னும் சொல்லைப் பார்க்கவும். |
லாம்டா (uppercase Λ, lowercase λ; கிரேக்கம்|Λάμβδα அல்லது Λάμδα) என்பது கிரேக்க மொழியின் பதினோராவது எழுத்து ஆகும். கிரேக்க எண்ணியலில் இதன் மதிப்பு முப்பது ஆகும். லாம்டா பினீசிய எழுத்தான லாமேட் என்கிற எழுத்து வடிவத்துடன் தொடர்புடையதாக கருதபடுகிறது. லத்தீன் எழுத்துக்கள் மற்றும் சிரில்லிக் எழுத்துக்கள் போன்ற மற்றைய வரிவடிவங்களில் இந்த லாம்டா பின்வருமாறு குறிப்பிடப்படுகிறது. லத்தீன் எழுத்துக்கள் - L, சிரில்லிக் எழுத்துக்கள் (Л, л). பண்டைய மொழியியல் இலக்கணத்தில் இது வித்தியாசமான ஒலியுடன் கூடியதாக இருக்கிறது. இதே எழுத்து கிரேக்க பழைய நடையில λάβδα என்று ஒலிக்கபடுகிறது. இதுவே நவீன கிரேக்கத்தில் Λάμδα, என்று ஒலிக்கிறது.
பழைய கிரேக்க எழுத்து முறையில் இதன் வடிவமும் திசையமைவும் வேறுபடுகிறது. பெரும்பாலும் இரண்டு பெரிய கோடுகள் முக்கோண வடிவில் இணைந்தோ அல்லது ஒரு பெரிய கோடு மற்றொரு சிறிய கோட்டின் மீது சிந்து இருப்பது போன்றோ குறிக்கபடுகிறது.
குறியீடு[தொகு]
பெரிய எழுத்து வடிவம் Λ[தொகு]
- லாம்டா என்பது கணக்கோட்பாட்டில் வெற்றுக்கணத்தை குறிக்க பயன்படுகிறது. என்ற குறியீட்டின் மூலமும் குறிக்க படுகிறது.
- லாம்டாவனது இயற்பியலில் துணையணுவியலில் பயன்படுத்தப்படுகிறது.
- தர்க்க அடிக்கொள் முறைமையில் முதற்படி குறைப்பில் பயன்படுத்தப்படும் கணமாக உபயோகிக்கபடுகிறது.
- லாம்டா குறியீடு ஸ்பார்டா படையணிகளில் கேடயங்களில் பயன்படுத்தப்பட்டன.
- வான் மாங்கோல்ட் ஃபங்க்ஷன் எனப்படும் கணிதவியல் எண் கோட்பாடு முறையில் பயன்படுத்தப்படுகிறது.
- புள்ளியியலில் வில்க்ஸ் லாம்டாவானது மாறுபாட்டெண் பலவேறுபாட்டு பகுப்பாய்வுடன் ஒருசார்ந்த மாறிகளை ஒப்பிட பயன்படுத்தப்படுகிறது.
- அணி விரிவாக்கத்தின்பொழுது லாம்டாவனது அணிகளின் மூலைவிட்ட உறுப்புகளை குறிக்க பயன்படுகிறது.
- கணினியியலில் லாம்டா மெய்நிகர் நினைவாற்றலின் கணங்களினை கண்காணிக்க உபயோகபடுத்தபடுகிறது.
- படிக ஒளியியலில் அணிக்கோவை கால இடைவெளிகளை குறிப்பிட லாம்டா பயன்படுத்தபடுகிறது.
- லாம்டா மின்வேதியியலில் மின்பகுளியின் சமன கடத்துதிறனை குறிக்கபயன்படுகிறது.
சிறிய எழுத்து λ[தொகு]
- λ வளர்ச்சி படிமுறைமையில் படிவளர்ச்சி தோற்றம்(μ) முதல் ஒவ்வொரு தலைமுறையின் தற்போதைய மொத்த எண்ணிக்கை தொகையை குறிக்கிறது.
- எந்தவொரு அலையின் அலைநீளத்தினை குறிக்க λ பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக இயற்பியல்,மின்னணுவியல் மற்றும் கணிதவியல் வழங்கப்படுகிறது.
- கதிரியக்கம் மற்றும் அணுக்கருவியலில் பன்மடி சிதைவானது λ-வை வைத்து குறிக்கப்படுகிறது.
- λ நிகழ்தகவு கோட்பாட்டில் பாய்சான் பரவலில் உள்ளது போல நிகழ்வின் அடர்த்தியை நேர இடைவெளியுடன் குறிப்பிடுகிறது.
- கணிதக்கோட்பாட்டிலும் கணினியியலிலும் அனாமதேய செயலாற்றியினை அறிமுகம் செய்ய λ நுண்கணிதத்தின் மூலம் விளக்க உதவுகிறது.
- λ அனைத்துலக முறை அலகுகளில் பட்டியலிடப்படவில்லை. இருந்தாலும் இது (குறியீடு λ)அளவையியலில் ஒரு மைக்ரோலிட்டர்க்கும் (1 μL) அல்லது ஒரு கன மில்லிமீட்டர்க்கும் இணையாக அரிதாகவே ஒப்பிடப்படுகிறது.