லப்பர் பந்து
லப்பர் பந்து | |
---|---|
திரைப்படச் சுவரொட்டி | |
இயக்கம் | தமிழரசன் பச்சமுத்து |
தயாரிப்பு | எஸ். இலட்சுமன் குமார் ஏ. வெங்கடேஷ் |
கதை | தமிழரசன் பச்சமுத்து |
இசை | ஷான் ரோல்டன் |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | தினேஷ் புருஷோத்தமன் |
படத்தொகுப்பு | மதன் கணேஷ் |
கலையகம் | பிரின்சு பிக்சர்சு |
வெளியீடு | 20 செப்டம்பர் 2024 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மொத்த வருவாய் | மதிப்பீடு. ₹6.50 கோடி[1] |
லப்பர் பந்து (Lubber Pandhu) என்பது 2024 இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும்.[2] விளையாட்டு தொடர்பான இந்நாடகத் திரைப்படத்தில் ஹரீஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, சுவசிகா, பாலா சரவணன், காளி வெங்கட், கீதா கைலாசம், தேவதர்சினி, ஜென்சன் திவாகர் ஆகியோரும் நடித்திருந்தனர்.
இப்படம் அதிகாரப்பூர்வமாக மார்ச் 2023 இல் லப்பர் பந்து என்ற அதிகாரப்பூர்வப் பெயரில் அறிவிக்கப்பட்டது. முதன்மைப் படம் எடுத்தல் பணி ஏப்ரல் மாதம் தொடங்கியது. இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்க, தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவும், மதன் கணேஷ் படத்தொகுப்பும் மேற்கொண்டனர்.[3]
லப்பர் பந்து 2024 செப்டம்பர் 20 அன்று உலகளவில் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.[4] இத்திரைப்படம் விமர்சகர்களிடமிருந்தும் பார்வையாளர்களிடமிலிருந்தும் பரவலான பாராட்டைப் பெற்றது.
நடிகர்கள்
[தொகு]- அட்டகத்தி தினேஷ் - பூமாலை, கெத்து
- ஹரீஷ் கல்யாண் - அன்பு[5]
- சுவாசிகா - யசோதை
- சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி - துர்கா
- காளி வெங்கட் - கருப்பையா
- பாலா சரவணன் - காத்தாடி, அன்புவின் நண்பர்
- தேவதர்சினி - அன்புவின் தாய்
- கீதா கைலாசம் - பூமாலையின் தாய்
- ஜென்சன் திவாகர் - கொழந்தை, பூமாலையின் நண்பர்
- டிஎஸ்கே - வெங்கடேசு, கருப்பையாவின் சகோதர்
- மோனிகா செந்தில்குமார்- சத்யா, துர்காவின் அண்ணி
- கர்ணன் ஜானகி - யசோதையின் தாய்
- வீரமணி கணேசன்
- சரத்
- ஏவி தேவா
- சிவாசினி பி. யு
- என். கே. வெங்கடேசன்
- பர்வேசு முசரப் - இளவயது அன்பு
- விசுவமித்ரன் - இளவயது காத்தாடி
- பிரதீப் துரைராஜ் - பேடு பாய்சு குழு தலைவர் & இலக்குக் கவனிப்பாளர்
- பூபாளம் பிரகதீசுவரன் - துடுப்பாட்ட மதிப்புரைஞர்
- ஆதித்யா கதிர் - துடுப்பாட்ட மதிப்புரைஞர்
- விஜே தாரா
தயாரிப்பு
[தொகு]மார்ச் 2023 தொடக்கத்தில், ஹரீஷ் கல்யாண் கடைசியாக காதல் நகைச்சுவை தொடர்பான ஓ மணப்பெண்ணே! திரைப்படத்தில் நடித்திருந்தார். (2021) கனா (2018) சிகை (2019) எஃப். ஐ. ஆர், நெஞ்சுக்கு நீதி (2022) போன்ற திரைப்படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கிய இப்படத்தில் நடித்தார்.[3] குற்றவியல் பரபரப்பூட்டும் தொடரான வதந்தி தொடரில் நடித்த சுவாசிகாவுடன், சஞ்சனா, அட்டகத்தி தினேஷ் ஆகியோர் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.[6][7]
முதன்மை புகைப்படம் எடுக்கும் பணி, ஏப்ரல் 2023 நடுப்பகுதியில் தொடங்கியது. 2023 சூலை 7 அன்று தயாரிப்பாளர்கள் பின்னணி கொடுக்கும் செயல்முறை தொடங்கியுள்ளதாக அறிவித்தனர்.[8][9]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Dixit, Mohit (2024-09-25). "Lubber Pandhu Box Office Collections: Harish Kalyan's sports-drama shows FANTASTIC hold after low opening; earns Rs 6.5 crore in Tamil Nadu". Pinkvilla. Archived from the original on 2024-09-25. பார்க்கப்பட்ட நாள் 2024-09-25.
- ↑ "2024-சிறந்த தமிழ்ப் படங்கள்". தினமணி. https://www.dinamani.com/cinema/cinema-news/2024/Dec/25/top-10-films-tamil. பார்த்த நாள்: 26 December 2024.
- ↑ 3.0 3.1 Sundar, Anusha (3 March 2023). "Harish Kalyan and Attakathi Dinesh to star in Lubber Pandhu". சினிமா எக்ஸ்பிரஸ். Archived from the original on 7 March 2023. பார்க்கப்பட்ட நாள் 17 September 2024.Sundar, Anusha (3 March 2023).
- ↑ "Harish Kalyan's Lubber Pandhu gets a release date" (in en). சினிமா எக்ஸ்பிரஸ். 28 August 2024 இம் மூலத்தில் இருந்து 28 August 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240828140214/https://www.cinemaexpress.com/tamil/news/2024/Aug/28/harish-kalyans-lubber-pandhu-gets-a-release-date.
- ↑ "Harish Kalyan plays Anbu in Lubber Pandhu's first glimpse". சினிமா எக்ஸ்பிரஸ். 2024-06-29. Archived from the original on 2024-06-30. பார்க்கப்பட்ட நாள் 2024-09-17.
- ↑ "Harish Kalyan & Sanjana pair up in 'Lubber Pandhu'". Times of India. 3 March 2023. Archived from the original on 3 March 2023. பார்க்கப்பட்ட நாள் 17 September 2023.
- ↑ "Harish Kalyan's Lubber Pandhu goes on floors". சினிமா எக்ஸ்பிரஸ். 20 April 2023. Archived from the original on 27 April 2023. பார்க்கப்பட்ட நாள் 17 September 2024.
- ↑ "Dubbing begins for Lubber Pandhu". சினிமா எக்ஸ்பிரஸ். 7 July 2023. Archived from the original on 3 October 2023. பார்க்கப்பட்ட நாள் 17 September 2024.
- ↑ "Sanjana begins dubbing for Harish Kalyan's 'Lubber Pandhu'". Times of India. 8 July 2023. Archived from the original on 11 July 2023. பார்க்கப்பட்ட நாள் 17 September 2024.