ரோனு புயல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ரோனு புயல்
சூறாவளிப் புயல் (இ.வா.து. அளவு)
Tropical storm (JTWC scale)
Roanu 2016-05-21 0445Z.jpg
Cyclone Roanu during peak intensity on 19 May
தொடக்கம்17 மே 2016
மறைவுCurrently active
(Remnant low after 22 May)
உயர் காற்று3-நிமிட நீடிப்பு: 85 கிமீ/ம (50 mph)
1-நிமிட நீடிப்பு: 100 கிமீ/ம (65 mph)
தாழ் அமுக்கம்983 hPa (பார்); 29.03 inHg
இறப்புகள்95 total, 132 missing
சேதம்Moderate $
பாதிப்புப் பகுதிகள்வங்காளதேசம், மியான்மர், East coast of India, இலங்கை
2016 North Indian Ocean cyclone season-இன் ஒரு பகுதி

ரோனு புயல் (Cyclonic Storm Roanu) வங்காள விரிகுடாவில் செயற்பாட்டில் உள்ள வெப்ப மண்டலச் சூறாவளி ஆகும். இது இந்தியாவின் கிழக்குக் கடற்கரை மற்றும் இலங்கை கடற்கரையில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 2016ஆண்டின் சூறாவளிப் பருவத்தின் முதல் புயலாக இது உள்ளது. ரோனு இலங்கையின் தென்பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாகத் தொடங்கியது. வடக்கு நோக்கி நகர்ந்து இது மே 19இல் புயலாக மாறியது; தரைபகுதியைக் கடந்ததால் இது வலிவிழந்தது. ஆனால் மீண்டும் வலிவுற்று வங்காளதேச கடற்கரையை நோக்கி நகர்ந்து வருகின்றது.

ரோனு புயலால் இலங்கையில் குறைந்தது 71 பேர் உயிரிழந்துள்ளனர்; வங்காளதேசத்தில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். ரோனு புயலால் இந்தியாவின் தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், ஒடிசா மாநிலங்களில் கனமழை பெய்துள்ளது. இது கடற்கரையோரமாகவே வடகிழக்கு திசையில் நகர்ந்து வருகின்றது; வங்காளதேசத்தின் கடற்கரையில் நிலப்பகுதியை அடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கையில் தாக்கம்[தொகு]

புயலின் பாதை

குறைந்த காற்றழுத்தப் பகுதி உருவானவுடனேயே இலங்கையின் வானிலை மையம் மே 13 அன்று எச்சரிக்கை வெளியிட்டது. மீனவர்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டனர்.[1] பின்னர், தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு (NBRO) பதுளை, மொனராகலை, கண்டி, இரத்தினபுரி, குருணாகல், நுவரெலியா, கேகாலை, மாத்தளை மாவட்டங்களில் நிலச்சரிவுகள் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுத்தது.[2] அரசுத்தலைவர் மைத்திரிபால சிறிசேன உள்ளாட்சி அதிகாரிகளுக்கு உடனடி நிவாரண நடவடிக்கைகளை எடுக்க ஆணையிட்டார். பேரிடர் மேலாண்மை அமைச்சர், படைத்துறைச் செயலர், முப்படைகளின் தளபதிகள் மற்றும் காவல்துறை தலைமை ஆய்வாளர் ஆகியோருக்கு தகுந்த நடவடிக்கைகள் எடுக்க ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன.[3]

இலங்கையின் பேரிடர் மேலாண்மை மையம் (DMC) மே 16 அன்று வெள்ள எச்சரிக்கை வெளியிட்டனர்; களனி கங்கையும் மகா ஓயாவும் கனமழையால் வெள்ளப் பெருக்கெடுத்தன.[4] புயல் தாக்கத்தால் இலங்கையில் பெருமழை பெய்தது. இதனால் விளைந்த வெள்ளத்திலும் நிலச்சரிவுகளிலும் 37 பேர் உயிரிழந்தனர். தவிரவும் புயலால் 134,000 மக்கள் வீடிழந்தனர்.[5] மே 21 வரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 71ஆக உயர்ந்துள்ளது; குறைந்தது 127 பேர் காணாமல் போயுள்ளனர்.[6] இலங்கையின் பேரிடர் மேலாண்மை மையம் 2010க்குப் பிறகு மிகக் கூடுதலான மழையை நாடு பெற்றுள்ளதாக அறிவித்தது. நிலச்சரிவுகளால் கேகாலை மாவட்டத்தில் மூன்று சிற்றூர்கள் புதைபட்டன.[7]

மேற்சான்றுகள்[தொகு]

  1. "Met Dept issues bad weather warning". The Official Government News Portal of Sri Lanka. பார்த்த நாள் 19 May 2016.
  2. "Landslide warning as heavy rains lash island". The Associated Newspapers of Ceylon Ltd.. பார்த்த நாள் 19 May 2016.
  3. "Sri Lankan President Calls For Heavy Rains". Cihan News Agency. பார்த்த நாள் 19 May 2016.
  4. "Sri Lanka on alert for floods, landslides". The Times of India. பார்த்த நாள் 19 May 2016.
  5. "12 die in Sri Lanka flash floods, several missing". Bennett, Coleman & Co. Ltd. (The Times of India). பார்த்த நாள் 17 May 2016.
  6. "71 killed, 127 missing as foreign aid reaches flood-hit Sri Lanka". Press Trust of India. பார்த்த நாள் 21 May 2016.
  7. "200 families missing as Sri Lankan landslides bury three villages". The Guardian. பார்த்த நாள் 18 May 2016.

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Cyclone Roanu
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
  • 01B.ROANU from the U.S. Naval Research Laboratory
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரோனு_புயல்&oldid=2068114" இருந்து மீள்விக்கப்பட்டது