உள்ளடக்கத்துக்குச் செல்

ரோட்ஸ்

ஆள்கூறுகள்: 36°10′N 27°56′E / 36.167°N 27.933°E / 36.167; 27.933
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரோட்ஸ்
Ρόδος
தீவு மற்றும் நகராட்சி
ரோட்ஸ்-இன் கொடி
கொடி
ஆள்கூறுகள்: 36°10′N 27°56′E / 36.167°N 27.933°E / 36.167; 27.933
நாடுகிரேக்கம்
நிர்வாகப் பிராந்தியம்தெற்கு ஏஜியன்
PrefectureDodecanese
பிராந்திய அலகுரோட்ஸ்
தொகுதிரோட்ஸ்
அரசு
 • மேயர்அன்டோனியோஸ் கம்பூராகிஸ் [1] (New Democracy)
பரப்பளவு
 • மொத்தம்1,400.68 km2 (540.81 sq mi)
உயர் புள்ளி1,216 m (3,990 ft)
தாழ் புள்ளி
0 m (0 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்1,15,490
 • அடர்த்தி82/km2 (210/sq mi)
இனங்கள்Rhodian, Rhodiot or Rhodiote (rare)
நேர வலயம்ஒசநே+2 (EET)
 • கோடை (பசேநே)ஒசநே+3 (EEST)
அஞ்சல் குறியீட்டு எண்
851 00, 851 31, 851 32, 851 33 (ரோட்ஸ் நகருக்கு)
தொலைபேசிக் குறியீடு2241, 2244, 2246
இணையதளம்www.rhodes.gr
General view of the village of Lindos, with the acropolis and the beaches, island of Rhodes, Greece.
கிரேக்கத்தின் ரோட்ஸ் தீவு, லிண்டோஸ் கிராமத்தின் உள்ளரண் மற்றும் கடற்கரையுடன் பொதுவான ஒரு காட்சி

ரோட்ஸ் (Rhodes, கிரேக்கம்: Ρόδος‎) என்பது கிரேக்கத்தின் டோடெகனீஸ் தீவுகளில் மிகப்பெரியது மற்றும் தீவுக் குழுவின் வரலாற்று தலைநகராகவும் இருந்தது ஆகும். நிர்வாக ரீதியாக இந்தத் தீவு ரோட்ஸ் பிராந்திய அலகுக்குள் ஒரு தனி நகராட்சியைக் கொண்டுள்ளது. இது தெற்கு ஏஜியன் நிர்வாக பிராந்தியத்தின் ஒரு பகுதியாகும். தீவின் முக்கிய நகரம் மற்றும் நகராட்சியாக தீவின் பெயராலேயே அமைந்த ரோட்ஸ் நகரம் உள்ளது.[2] ரோட்ஸ் நகரில் 2011 இல் 50,636 மக்கள் இருந்தனர். இது ஏதென்சின் தென்கிழக்கே கிரீட்டின் வடகிழக்கில் அமைந்துள்ளது. 1310 முதல் 1522 வரை தீவை ஆண்ட ஜெருசலேமின் செயிண்ட் ஜானின் மாவீரர்களின் பெயரால் [3] மாவீரர் தீவு மற்றும் முத்துத் தீவு என்றும் ரோட்ஸ் தீவின் காவல் தெய்வமான சூரியக் கடவுள் ஹீலியோசின் காரணமாக சூரியனின் தீவு போன்ற பல புனைப்பெயர்கள் இத்தீவுக்கு உள்ளன.[3]

வரலாற்று ரீதியாக, ரோட்ஸ் தீவு பண்டைய உலக ஏழு அதிசயங்களில் ஒன்றான ரோடோசின் கோலோசுக்கு உலகளவில் மிகவும் பிரபலமானது. ரோட்ஸ் நகரின் இடைக்கால பழைய நகரம் உலக பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று, இது ஐரோப்பாவில் மிகவும் பிரபலமான சுற்றுலா தலங்களில் ஒன்றாகும்.[4][5][6][7]

நிலவியல்

[தொகு]
ரோட்சின் நிலப்பரப்பு வரைபடம்
அக்ரமிடிஸ் மலை

ரோட்ஸ் தீவு 79.7 கிமீ (49.5 மைல்) நீளமும், 38 கிமீ (24 மைல்) அகலமும் கொண்ட ஒரு ஈட்டி முனை போன்ற வடிவத்தில் அமைந்துள்ளது. தீவின் மொத்த பரப்பளவு தோராயமாக 1,400 சதுர கிலோமீட்டர் (541 சதுர மைல்) ஆகும். மேலும் தோராயமாக 220 கிமீ (137 மைல்) கடற்கரையைக் கொண்டுள்ளது. தீவின் முக்கிய அடித்தளமாக சுண்ணாம்புக்கல் உள்ளது.[8] தீவின் வடக்கு முனையில் ரோட்ஸ் நகரம் மற்றும் பண்டைய மற்றும் நவீன வணிக துறைமுகங்களின் தளமும் அமைந்துள்ளது. தீவின் முக்கிய வானூர்தி நிலையம் (டயகோரஸ் சர்வதேச விமான நிலையம், IATA குறியீடு: RHO) பாரதிசியில் நகரின் தென்மேற்கில் 14 கிமீ (9 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. சாலை வசதியின் வலையமைப்பு நகரத்திலிருந்து கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரைகள் வரை பரவியுள்ளது.

தீவில் ரோட்ஸ் நகருக்கு வெளியே, ஒயிட் வாஷ் ஹவுஸ் மற்றும் மருத்து நீருற்று ரிசார்ட்கள் கொண்ட சிறிய கிராமங்களான ஃபாலிராகி, லிண்டோஸ், க்ரெமாஸ்டி, ஹராக்கி, பெஃப்கோஸ், ஆர்க்காங்கெலோஸ், அஃபான்டோ, இக்ஸியா, கோஸ்கினோ, எம்போனா ( அட்டாவிரோஸ், பாராடியோஸ் ), ட்ரியாண்டா (Ialysos) போன்றவை உள்ளன.

ரோட்ஸ் தீவானது கிரேக்க நிலப்பரப்பில் இருந்து கிழக்கு-தென்கிழக்கே 363 கிமீ (226 மைல்) தொலைவிலும், துருக்கியின் தெற்குக் கரையிலிருந்து 18 கிமீ (11 மைல்) தொலைவிலும் அமைந்துள்ளது. 1,216 மீட்டர் (3,990 அடி) உயரம் கொண்ட அட்டாவிரோஸ் மலை, தீவின் உயரமான இடமாகும்.

குறிப்புகள்

[தொகு]
  1. "Ο Δήμαρχος | Rhodes.gr". Archived from the original on 14 January 2020. பார்க்கப்பட்ட நாள் 14 January 2020.
  2. "ΦΕΚ A 87/2010, Kallikratis reform law text". Government Gazette. Archived from the original on 23 October 2021. பார்க்கப்பட்ட நாள் 7 September 2021.
  3. 3.0 3.1 "Rhodes". Visit Greece. Archived from the original on 29 December 2014. பார்க்கப்பட்ட நாள் 29 December 2014.
  4. Paul Hellander, Greece, 2008
  5. Duncan Garwood, Mediterranean Europe, 2009
  6. Ryan Ver Berkmoes, Oliver Berry, Geert Cole, David Else, Western Europe, 2009
  7. Harry Coccossis, Alexandra Mexa, The challenge of tourism carrying capacity assessment: theory and practice, 2004
  8. "Geography and Geomorphology – South Aegean". www.aegeanislands.gr. Archived from the original on 4 July 2020. பார்க்கப்பட்ட நாள் 15 June 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரோட்ஸ்&oldid=4062635" இலிருந்து மீள்விக்கப்பட்டது