உள்ளடக்கத்துக்குச் செல்

ரோசுமேரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரோசு மேரி
ரோஸ்மேரி மலர்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
ஆஞ்சியோஸ்பெர்ம்கள்
தரப்படுத்தப்படாத:
யூடிகாட்டுகள்
தரப்படுத்தப்படாத:
ஆஸ்டெரிட்சு
வரிசை:
லாமியாலஸ்
குடும்பம்:
லாமியேசீ
பேரினம்:
ரோசுமேரினஸ்
இனம்:
ரோ. அஃபிசினாலிசு
இருசொற் பெயரீடு
ரோசுமேரினஸ் அஃபிசினாலிஸ்
கரோலஸ் லின்னேயஸ்[1]

ரோசு மேரி (ரோஸ் மேரி; Rosmarinus officinalis) என்பது தடித்த வாசம்மிகு பசுமை மாறா, ஊசி போன்ற இலைகளைக் கொண்ட பல்லாண்டு வாழக்கூடிய ஒரு மூலிகைத் தாவரமாகும். மத்திய தரைக்கடல் பகுதியைத் தாயகமாகக் கொண்ட இது ஈயெச்சக் கீரையின் (புதினா) குடும்பமான லாமியேசியைச் சேர்ந்தது. இக்குடும்பத்தில் மேலும் பல மூலிகைகளும் உள்ளன.

ரோசு மேரி எனும் பெயரானது இலத்தீன் மொழிப் பெயரான ரோஸ்மாரினஸ் என்பதிலிருந்துத் தருவிக்கப்பட்டதாகும். இதற்கு கடல் துளி என்று பொருள்.[2] (marinus - கடல்; ros - துளி) பல இடங்களில் இத்தாவரமானது நீரை விடுத்துக் கடல் காற்றின் ஈரப்பதத்தையே உயிர்வாழ எடுத்துக் கொள்கிறது. எனவே இப்பெயர் ஏற்பட்டது.

வகைப்பாட்டியல்[தொகு]

ரோசுமேரினஸ் என்ற பேரினத்திலுள்ள இரு சிற்றினங்களுள் ரோஸ்மேரினஸ் அஃபிசினாலிஸ் ஒன்றாகும். மற்றொரு சிற்றினம் ஆனது ரோஸ்மேரினஸ் எரியோகலிக்ஸ் ஆகும். இது ஆஃப்ரிக்காவின் வட பகுதியிலும் (மாக்ரெப்) ஐபீரியாவிலும் மட்டுமே இருக்கிறது. இம்மூலிகை ஆனது மிகப்பெரிய புதினா குடும்பமான லாமியேசியைச் சேர்ந்தது.

இத்தாவரம் 18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இயற்கையாளரான கரோலசு லின்னேயசால் பெயரிடப்பட்டது. அதன் பிறகு இதன் வகைப்பாட்டியலில் பெரிய மாற்றம் ஏதும் இல்லை.

விளக்கம்[தொகு]

தண்டுகள் மேல்நோக்கியோ சாய்வாகவோ வளரக்கூடியவை. மேல்நோக்கிய தண்டுகள் 1.5 மீ (5 அடி) என்ற உயரத்திற்கு வளரத்தக்கவை. அரிதாக 2 மீ (6 அடி 7 இன்ச்) என்ற அளவிலும் இருக்கும்.

இலைகள் பசுமைமாறாதவை ஆகும். 2-4 செ.மீ. என்ற நீளத்திலும் 2-5 மி.மீ. அகலமாகவும் இருக்கும். பச்சை நிறம் மேற்புறத்திலும் கம்பளி போன்ற முடிகள் கொண்ட அடர் வெண்ணிறம் கீழ்ப்புறத்திலும் இருக்கும்.

ரோசு மேரி ஆனது வட பகுதிகளில் கோடையிலும் மற்றபடி மிதமான குளிர் நிலவும் பகுதிகளில் பல்வேறு நிறங்களில் எப்போதும் பூத்தபடி இருக்கும். இதன் பூக்கள் வெண்மை, இளஞ்சிவப்பு, ஊதா, நீலம் போன்ற நிறங்களை உடையவையாக இருக்கும்.[3]

புராணம்[தொகு]

கடல் துளி என்று மொழிபெயர்க்கப்படும் ரோஸ் மேரினஸ் என்ற சொல்லானது இலத்தீன் சொற்களிலிருந்து வருகிறது. உண்மையில் ஔரானாசின் விந்திலிருந்துப் பிறந்த அப்ரோடிட் ஆனவள் கடலிலிருந்து எழும்போது ரோசு மேரியையே உடுத்தியிருந்ததாகக் கூறப்படுகிறது. இன்று அப்ரோடிட் கடவுள் ஆனது ரோசு மேரியுடன் கன்னி மேரியைப் போன்றே தொடர்புபடுத்தப்படுகிறது. கன்னி மேரி ஆனவள் ஓய்வெடுக்கையிலே ஆடை மீது வெண்ணிற ரோசுமேரி மலர்களை மாலையாகக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. எனவே அந்நிறமானது மேரியுடன் தொடர்புடையதானதாகக் கூறப்படுகிறது.

பயிரிடல்[தொகு]

இப்பயிரானது வறட்சியைத் தாங்கி வளரக் கூடியது. இது தோட்டங்களிலும் அழகுத் தாவரமாகப் பயன்படுகிறது. அது தவிர பூச்சிக் கொல்லியாகவும் இது பயன்படுகிறது. இப்பயிரானது தண்ணீர் தேங்கக் கூடிய இடங்களில் வளருவதில்லை. இப்பயிர் வளர நல்ல நீரோட்ட வசதி இருக்க வேண்டும். மேலும் மண்ணின் pH மதிப்பானது 7-7.8 வரை இருக்க வேண்டும்.

பின்வரும் வகைகள் மட்டுமே பொதுவாக விற்கப்படுகின்றன. அவையாவன,

 • ஆல்பஸ் – வெண் பூக்கள்
 • ஆர்ப் – இலைகள் இளம்பச்சை நிறமுடையவை, எலுமிச்சை மணமுடையது
 • ஔரியஸ் – மஞ்சள் புள்ளிகளுடையது
 • பெனெடென் ப்ளூ – நேரான அடர் பச்சை இலைகள்
 • ப்ளூ பாய் – குள்ளமான சிறு இலைகள்
 • கோல்டன் ரெய்ன் – மஞ்சள் வரிகளுடன் கூடிய பச்சை இலைகள்
 • கோல்டு டஸ்ட் - கோல்டன் ரெய்னை விட அடர்வான மஞ்சள் வரிகளுடன் கூடிய அடர் பச்சை இலைகளையுடையது
 • ஐரீன் – தளர்வானது
 • லாக்வுட் டி ஃபாரஸ்ட்டஸ்கன் ப்ளூவிலிருந்து பெறப்பட்டது
 • கென் டேய்லர் – புதரானது
 • மெஜோரிக்கா பிங்க் – இளஞ்சிவப்பு நிற மலர்கள்
 • மிஸ் ஜெஸ்சோப்ஸ் அப்ரைட் – தடிப்பானது, உயரமானது
 • பிங்கீ – இளஞ்சிவப்பு நிற மலர்கள்
 • ப்ராஸ்ட்ரேட்டஸ்
 • பிரமிடாலிஸ் (a.k.a. எரக்டெஸ்) – இளநீல நிற மலர்கள்
 • ரோசியஸ் – இளஞ்சிவப்பு நிற மலர்கள்
 • சலேம் – இளநீல நிற மலர்கள், ஆர்ப்பைப் போன்றது
 • செவெர்ன் சீ – படரக் கூடியது, மலர்கள் ஆழ்ந்த ஊதா நிறம் உடையவை
 • டஸ்கன் ப்ளூ – நேராக வளரும்
 • வில்மாஸ் கோல்டு – மஞ்சள் இலைகள்

மருத்துவப் பயன்பாடுகள்[தொகு]

ரோசுமேரியில் காணப்படும் கார்னோசிக் அமிலமானது அல்கெய்மர், லு கெரிக் போன்ற மூளை சம்மந்தப்பட்ட நரம்பியல் நோய்களைத் தடுக்கக் கூடியது என்று அறியப்பட்டுள்ளது.[4]

ரோசுமேரியின் பொடியானது புற்றூக்கிகளுக்கு[5] எதிராகச் செயல்படுகிறது. இது எலிக்குக் கொடுக்கப்பட்டுச் சோதித்தறியப்பட்டுள்ளது.[6]

இது ரோசுமேரினிக் அமிலம் போன்ற எதிர் ஆக்சிசனேற்றிகளையும் கொண்டுள்ளது. மேலும் இதில் கற்பூரமும் (உலர் இலைகளில் 20% வரை), கேஃபேயிக் அமிலம், உர்சாயிக் அமிலம், பிட்யூலினிக் அமிலம், ரோசுமாரிடிஃபீனால், ரோசுமனால் போன்றவையும் உள்ளன.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. "Rosmarinus officinalis information from NPGS/GRIN". Archived from the original on 2008-10-29. பார்க்கப்பட்ட நாள் 2008-03-03.
 2. Room, Adrian (1988). A Dictionary of True Etymologies. Taylor & Francis. p. 150. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-415-03060-1.
 3. http://www.bhg.com/gardening/plant-dictionary/herb/rosemary/
 4. Burnham Institute for Medical Research (2007, நவம்பர் 2). Rosemary Chicken Protects Your Brain From Free Radicals. ScienceDaily. Retrieved நவம்பர் 2, 2007, from http://www.sciencedaily.com/releases/2007/10/071030102210.htm and http://www.medspice.com/content/view/119/69/ பரணிடப்பட்டது 2011-05-13 at the வந்தவழி இயந்திரம்
 5. புற்றூக்கி குறித்து விக்சனரி
 6. Teuscher E (2005). Medicinal Spices (1 ed.). Stuttgart: Medpharm.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரோசுமேரி&oldid=3659594" இலிருந்து மீள்விக்கப்பட்டது