ரைடன்
ஈரானின் எகபடனாவில் அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்டு, ஈரான் தேசிய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள, ஈரானின் அகாமனிசியப் பேரரசு காலத்திய தங்கத்தாலான ஒரு ரைடன் கோப்பை. | |
செய்பொருள் | பீங்கான், உலோகம், கொம்பு, கல் |
---|---|
அளவு | சாதாரணப் பயன்பாட்டுக்கு இயல்பான அளவினதாகவும், சடங்கு பயன்பாட்டுக்கு பெரியதாகவும், கூம்பு வடிவினதாகவும், கீழே ஒரு துளையுடனும் இருக்கும். |
எழுத்து | பொறிக்கப்பட்டிருக்கலாம் மற்றும் வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருக்கலாம் |
உருவாக்கம் | வரலாற்றுக்கு முந்தைய காலம் |
தற்போதைய இடம் | ஐரோவாசியா |
ரைடன் /ˈraɪˌtɒn, ˈraɪtən/ (Rhyton பன்மை rhytons) என்பது பானங்களை அருந்த பயன்படுத்தப்படும் கூம்பு வடிவ கொள்கலன் அல்லது பூசை போன்றவற்றின் போது படையல்நீரை நிரப்பி அபிசேகம் போன்றவை செய்யப் பயன்படுத்தப்பட்ட ஒரு கொள்கலனாகும். இவை பொதுவாக விலங்குகளின் முகத்தின் வடிவத்தில் உருவாக்கப்பட்டன. இவை பண்டைய ஐரோவாசியாவின் பெரும்பாலான பகுதிகளில், குறிப்பாக பாரசீகத்திலிருந்து பால்கன் வரை பெருமளவில் புழக்கத்தில் இருந்துள்ளன. இந்த கோப்பைகள் சிலற்றின் அடிப்பாகத்தில் பானங்களை பருக ஏதுவாக ஒரு துளை உள்ளதாக இருக்கின்றன; பெரும்பாலான ரைடன்களானது பானங்களை நிரப்பிய பிறகு கீழே வைக்க முடியாது. ஏனெற்றால் இவற்றின் அடிபாகமானது தட்டையாக இருக்காது.
இதை ஆங்கிலத்தில் குறிக்கும் rhyton என்ற சொல்லானது பண்டைய கிரேக்கச் சொல்லான ῥυτόν (rhy̆tón அல்லது rhŭtón) என்பதில் இருந்து உருவானது. இந்த கூம்பு ரைடன்கள் ஏஜியன் பிராந்தியத்தில் வெண்கலக் காலம் அல்லது கி.மு. இரண்டாம் ஆயிரம் ஆண்டுகளில் இருந்து அறியப்பட்டுள்ளது. ஆனாலும், இது வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் யூரோசியாவில் நீண்ட கொம்புகளை பானங்களைக் குடிக்க பயன்படுத்தும் வழக்கம் இருந்துள்ளது. அதன் தொடர்ச்சியாகவே இந்த கலையம்சம் மிக்க ரைடன்கள் உருவானதாக கருதப்படுகிறது.
படக்காட்சியகம்
[தொகு]-
அனத்தோலியாவின் அலிஷார் ஹூயுக் பகுதியில் கிடைத்த, நடு வெண்கலக் காலத்திய (கி.மு 1750-1650), திராட்சைக் கொத்து வடிவ பீங்கானால் செய்யப்பட்ட சடங்குக்கான ரைடன்
-
ஈராக்லியன் தொல்லியல் அருங்காட்சியகத்தில் உள்ள, மியோவான் மாவுக்கல்லாலான ரைடன்.
-
யூகரிட்டில் கிடைத்த, பன்றித் தலைவடிவம் அமைந்த ரைடனின் அடிப்பகுதி தோற்றம்
-
கி.மு 450 ஐச் சேர்ந்த சிவப்பு மண்பாண்டக் கலையினால் உருவாக்கப்பட்ட ஒரு ரைடன்
-
எரேபனிவில் கிடைத்த அகாமனிசியக் கால வெள்ளி ரைடன்.
-
கி.மு 500 ஊச் சேர்ந்த அகாமனிசியக் கால தங்கத்தாலான சிங்கமுக ரைடன்.
-
கி.மு 500 ஊச் சேர்ந்த அகாமனிசியக் கால சிங்கமுக ரைடன்.
-
நான்காம் நூற்றாண்டின் இறுதியைச் சேர்ந்த கிரேக்க வெள்ளி ரைடன்.[1]
-
தாங் அரசமரபு காலத்திய கி.பி 675-750 சேர்ந்த பளபளப்பான பீங்கானாலான அரிய சீன ரைடன்.
-
மெட்ரோபொலிட்டன் கலை அருங்காட்சியகத்தில் உள்ள, கி.மு. முதலாவது நூற்றாண்டைச் சேர்ந்த, காட்டுப் பூனை முக ரைடன்
-
டமோய்கின் கலை அருங்காட்சியகத்தில் உள்ள, நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த தங்கத்தாலும், வெண்கலத்தாலும் உருவாக்கப்பட்ட டயோனிச்சின் முகம் அமைந்த ரைடன்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Rhyton. The upper section of the luxury vessel used for drinking wines is wrought from silver plate with gilded edge with embossed ivy branch. The lower part goes in the cast Protoma horse. The work of the Greek master, probably for Thracian aristocrat. Perhaps Thrace, the end of the 4th century BC. NG Prague, Kinský Palace, NM-HM10 1407.